Skip to main content

Posts

சூழலியல் அடிப்படைவாதம்

வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம்அடிப்படைவாதம் நம்மை தரதரவென்று இழுத்துப்போய் ஒரு ’மாயாலோக’த்துக்குள் நிறுத்திசாம்பிராணிப்புகை போட்டுவிடுகிறது. ரியர்வியூ மிரரில் தெரியும் ரியல் எதிரிகளை கண்டும் காணாமல் இருக்கவைத்து கற்பனையான எதிரிகளின் மேல் கைவாளை வீசச்சொல்லிக்கொடுக்கிறது அத்தோடு நின்றுவிடாமல் அரசின் அடியாளாய், கார்ப்ரேட்டின் கண்மூடித்தனமான கைக்கூலியாய் மெல்ல மெல்ல நம்மை மாற்றி சொந்த மக்களுக்கு எதிராக அது நிறுத்திவிடுகிறது நான் பேசிக்கொண்டிருப்பது வெறும் நாற்பது பக்கமே கொண்ட அருண் நெடுஞ்செழியனின் சூழலியல் அடிப்படைவாதம் என்ற நூல் குறித்துத்தான் சூழலியல் பற்றி பேசுவதென்பதும் செயல்படுவதென்பதும் ஒரு குறிப்பிட்டாகாலம்வரை குறிப்பிட்ட ஆட்களின் கக்கத்தில்தான் இருந்துவந்தது அதற்காக செயல்பட்ட நிறுவனங்களை ஆட்களைப் பட்டியலிட்டால் அந்த ஆட்கள் யார் , ஏன் பேசினார்கள் என்பதைக்கூட எளிதாக  இனம் கண்டுவிடமுடியும் பல்வேறு வளச்சுரண்டல்களை கண்கூடாகப்பார்த்துசலித்து கோபம் கொண்ட ஒரு சமூகம், எல்லைகடக்காமல், சாந்த சொரூபியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் வேலையை அந்தப் பச்சை பசலிகள் வட்டம் செவ்வனே...
அயன்மேன்களும்.ஆதிவாசிகளும் 1 பழங்குடி மாணவர்கள் தங்கியிருக்கும் 491 விடுதிகளை இந்த கல்வியாண்டிலிருந்து மூட உத்தரவிட்டுள்ளது.மகாராஷ்ட்ரா அரசு இந்த அறிவிப்பின் மூலம் 20,535 மாணவ மாணவிகள் வீடுகளிலிருந்து கல்லூரிக்கோ பள்ளிகளுக்கோ தினமும் வந்துபோகவேண்டும் அல்லது அவர்களாகவே தனியார் கட்டண விடுதிகளையும் உணவையும் தேடிக்கொள்ளவேண்டும் ஏன் இப்படியொரு மனிதாபிமானமற்ற முடிவை எடுக்கவேண்டும் என்று கேட்டால்.. ’’டோண்ட் வொரி ’தீன் தயாள் உபத்யாய் ஸ்வயம் யோஜனா’ என்ற திட்டத்தின்மூலம் மாதாமாதம் பெரிய நகரங்களுக்கு ரூபாய் ஆறாயிரமும் சிறிய நகரங்களுக்கு ஐந்தாயிரமும் மூன்றாம்தர நகரங்களுக்கு மூன்றாயிரமும் வழங்க நாங்கள் முயன்றுவருகிறோம்’’ என்று சொல்கிறது அரசு மேலோட்டமாகப்பார்த்தால் ’அதானே அரசு எத்தனை கரிசனத்தோடு இவர்களிடம் நடந்துகொள்கிறது இவர்கள்தான் திருந்துவதேயில்லை’ என்ற சேற்றைவாரிப்பூசிவிட்டுப்போய்விடலாம் ஆனால் மாதா மாதம் இப்போது தரவேண்டிய 800 ரூபாயையை எட்டுமாதம் கழித்தே தருகிற இந்த அரசு இவ்வளவு பெரிய தொகையை மாதா மாதம் அனுப்புமா என்ற கேள்வியும் கட்டணம் கட்டத்தாமதமானதால் கழுத்தைப்பிடித்து...

கல்விக்கொள்கை 2016....... பழங்குடிகள் - சில பரிந்துரைகள்

573 வகையான பழங்குடிகள் இங்கே வாழ்கிறார்கள் . அவர்களின் மொத்த மக்கள் தொகை 67 மில்லியன்பேர்க்கு மேல் என்கிறது அரசு ஆவணம். ஆனால் இதுவரை உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கைகள், பெரும்பான்மை சமவெளிமக்களை கருத்தில்கொண்டேதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகளின் உண்மையான வாழ் நிலையையோ அவர்களின் பிரச்சினைப்பாடுகளையோ கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதற்கு இக்கொள்கைகளில் உள்ள பல சரத்துக்கள் சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது . பல்வேறு முயற்சிகள் எடுத்தபின்னும் பழங்குடிகள் கல்விக்கு வெளியே நின்றிருப்பதற்கு இதுவே முக்கியமான காரணமாகப்படுகிறது பிரிட்டிஷ் அரசின் ஆளுகையின்கீழ் இந்தியா இருந்தபோது பழங்குடிகளுக்கான கல்வி, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது விரும்பப்படவில்லை. அதற்குப் பதிலாக பழங்குடிப்பகுதிகளில் கிருத்துவ மிஷினரிகள் கல்விப்பணிகளை செய்ய அனுமதித்தினர் இந்திய சுதந்திரத்திற்குப்பிறகு உருவாக்கப்பட்ட பல கல்விக்கொள்கைகள் பழங்குடிகளின் பார்வையில் ஏற்படுத்தப்படவில்லை ஆனால் அவற்றில்கூட ஒரு கரிசனம் இருந்தது. ஆனால் மத்திய அரசால் தற்போது...
வலியில்லாத, அலைக்கழிக்காத எதையும் என்னால் எழுதமுடியாது என்ற பிடிவாதத்தோடு தொடர்ந்து களத்தில் இயங்கும் ச பாலமுருகன் சோளகர் தொட்டிக்குப்பிறகு நீண்டஇடைவெளியெடுத்துஎந்தவிதஆர்பாட்டமுமில்லாமல் பெருங்காற்றை சமீபத்தில் கொண்டுவந்திருக்கிறார் யாரும் அதிகம் தொடாத ,போராட்டங்களோடு தான் பங்கெடுத்த களங்களை பின்புலமாக வைத்து மிகுந்த பிராசையோடும் அவருக்கே உரித்தான லாவகத்தோடும் கதைகளை அடர்த்தியாகப் பின்னியிருக்கிறார். வலியும் காயமுமாய் மெய்யின் சிலிர்ப்போடு அவ்வளவு சிறப்பாய் வந்திருக்கிறது பெருங்காற்று முதலிரண்டு கதைகளான ஒரு கடல் இருகரைகளும் வேர்மண்ணும் நம்மை ஈழ அகதிமுகாமுக்குள் விரல்பிடித்து அழைத்துபோய் நிறுத்தி நடுக்கமேற்றுகிறது. எழுத்துலகத்தின் வெளிச்சம் சொற்பமாய்பட்டிருக்கும் முகாம்களின் கோர வாழ்வை அப்பட்டமாகவும் அடிமனதின் வலியோடும் நின்று கதை சொல்லத்தொடங்கும்போதும் ஒரு புள்ளியில் கொண்டுபோய் நிறுத்தும்போதும் வேதனையில் உறையவைத்துவிடுகிறது  வேர்மண்ணில் தற்காப்புப் பயிற்சி எடுத்த திலகன் காலச்சூழலில் நிர்கதியாக மண்டபம் முகாமில் அகதியாக நிற்பதும் ...

யார்ரா அந்தக் கபாலி..... ஹஹஹ வந்துட்டானில்ல

                                                                                                                  கபாலி பார்ட் 1  வடகலையென்றும் தென்கலையென்றும் வைணவத்தில் இரண்டுபிரிவுகள் இருந்ததைப்போலவே சைவத்திற்குள் 1 வார்மம், 2 பாசுபதம், 3 காளாமுகம், 4 பைரவம் 5 மாவிரதம், 6 கபாலிகம், என ஆறு உட்பிரிவுகள் இருந்தது ஆறு பிரிவுகளில் கபாலிகம், காளமுகம் முக்கியமானபிரிவுகள் , இந்த இரண்டு பிரிவுகளுக்குள் நடந்த சண்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது அது இயல்பான வழிபாட்டுமுறைக்கும் சமஸ்கிருத வழிபாட்டுமுறைக்கும் இடையே நடந்த மோதல் இன்னும் எளிமையாகச்சொன்னால் தலக்கறி சாப்பிடுபவர்களுக்கு தயிர்வடை சாப்பிடுபவர்களுக்கும் இடையே நடந்த சண்டை ஒரு கட்டத்தில் காளமுகம் அல்ட்ரா...

வனச்சட்டமும் வங்கொடக்காய்களும்

பழங்குடிகள் காட்டுக்குள் இருக்கலாம் ஆனால் எப்போது வனத்துறை சட்டிய தூக்கசொன்னாலும் தூக்கிவிட வேண்டும்.. இல்லாவிட்டால் அவர்களே ஏதாவது ஒரு கேசைப்போட்டு தூக்கி எறிந்துவிடுவார்கள் . இது 2005 வரை இருந்த நிலமை. ஆனால் வனச்சட்டம் 2006 வந்த பிறகு இந்தியாவின் மிகப்பெரிய ஜமீன்தாராக கெட்ட ஆட்டம்போட்ட வனத்துறை ,தனது குண்டாந்தடியை கீழே போடவேண்டியதாயிற்று. ‘’வனச்சட்டம் 2006’’ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? ஆம் என்றுகூட சொல்லலாம். வனச்சட்டம் 2006 பழங்குடிமக்களின் நில உரிமையை உறுதி செய்தது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் நிலத்தில் இருந்து குடும்பம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10 ஏக்கர்வரை பட்டாப்போட்டு கொடுக்கவேண்டும் என்று அழுத்தந்திருத்தமாகக்கூறியது கடுக்காய் நெல்லிக்காய் பூச்சைக்காய் புளி போன்ற பொருட்களை அவர்களே எடுத்து அவர்களே விற்பனை செய்துகொள்ளலாம் என்றது வனக் கிராமங்களை தேவைப்பட்டால் வருவாய்க் கிராமங்களாகக்கூட மாற்றிக் கொள்ளலாம் என்றது யார் யார்க்கு என்ன கொடுக்கவேண்டும் என்பதை மேலிருந்து யாரும் முடிவு செய்யக்கூடாது பழங்குடி மக்களால் உருவாக்கப்பட்ட கிராமசபையே முடிவு செய்யும் என்றது (இ...

நகரத்திலிருந்து எட்டிவிடும்தூரம்தான். January 8 at 2:06am ·

ஜனவரி 8 கோவை வரலாற்றில் முக்கியமானநாள்.இந்த நகரம் அதிர்ந்த அந்த நேரத்தை இன்னும் ஓரிரு மணி நேரத்தில் தொட இருக்கிறோம். இங்கே பஞ்சாலைகள்கொடிகட்டிப்பறந்த காலம் இருந்தது  அப்படிப் புகழ் பெற்ற பஞ்சாலைகளில் ஒன்று ரங்கவிலாஸ் மில் 1911ல் ல் ஜின்னிங் பேக்டரியாக தொடங்கப்பட்ட ரங்கவிலாஸ் 1922ல் நூற்பாலையாக மாறுகிறது ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் நால்வரும் இந்த மில்லின் துடிப்பும் துணிவும்மிக்க இளம் தொழிலாளிகள் . சின்னியம்பாளையத்துக்காரர்கள் 15 மணி நேரம் உழைப்புக்கு .. மாத சம்பளம் 15 ரூபாய்.   பஞ்சாலை பாதுகாவலர்கள் சங்கம் என்ற பெயரில்ஆலை முதலாலிகள் வைத்திருந்த ரவுடிகளின் அட்டகாசங்கள் . பெண் தொழிலாளிகளுக்கு பாலியல் சீண்டல்கள், சவுக்கடி, துப்பாக்கிசூடு... இவற்றையெல்லாம் தட்டிக்கேட்டு எதிர்த்து சங்கம் கட்டி, துப்பாக்கிகளுக்கு அஞ்சிடாமல் பல்வேறு போராட்டங்களை நெஞ்சுரத்தோடு நடத்தினார்கள் தொழிலாளிகள். ராஜி,இதில் மிகமுக்கியமான பெண் போராளி.. பஞ்சாலைக்குள் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக, தனிப்பட்டமுறையில் பெண்களை திரட்டி துணிச்சலோடு அவ்வப்போது மேஸ்த்திரிக...