Skip to main content

Posts

Showing posts from April, 2015

என் டி ராஜ்குமார் ஒரு ஜன வசிய மருத்துவன்

ஈணம் என்னும்   கவிதை நிகழ்த்தும்    முறைக்கு நாம் கொஞ்சமும்   பழக்கப்படவில்லை ஆனால் கேரளத்தில் அது மிக பரிச்சயமான ஒரு முறை.   கவிதையை கிட்டத்தட்ட ஓதுதல் நிலைக்கு தள்ளி ஒவ்வொரு நிலைக்கும் இடைவெளி கொடுத்து   மீண்டும் ஓதி. ஒரு மெளனத்தில் நிறுத்தி   நம்மை வனாந்திரத்துக்குள் விட்டுவிட்டு போய்விடுகிறார்கள்.     இப்படி மெளனம் முடியும் இடத்தில்தான் அந்தக்கவிதையை   கவிஞன் கைவிட்டுவிடுகிறான். அல்லது நமக்கு கைமாற்றிவிட்டு உறைந்துபோய்விடுகிறான்..அதற்குப்பிறகு   அது நமது   சொற்க்களன்ற   அடியாளத்தில் இறங்கி சவ்வூடுபரவலை நிகழ்த்துகிறது. ஈணம் குறித்து ஸ்ரீ யிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது பல நகைச்சுவையான விசயங்களை பகிர்ந்துகொண்டார். சீரியசாக அவர் பகிர்ந்துகொண்டது   பேராசிரியர் மதுசூதன நாயரின்   நாராணத்து பிராந்தன்   என்னும் புகழ்பெற்ற ஈணம்.      யார் இந்த நாராணத்துப்பிராந்தன்? விக்ரமாதித்த மகாராஜாவின் அமைச்சர்   வரருசி   ஒரு பிராமணன் 'விதிப்பயனாக’ அவன்   ஒரு பறைப்பென்ணை மணக்க நேர்கிறது. அது பறைப்பெண் எனத்தெரிந்ததும் தன்னைதானே சாதிவிலக்கம் செய்துகொண்டு   ஊரை காலிசெய்துவிட

இந்திரனின் கடல் நமக்கு மிக அருகில்

தன் உடலில் 80 சதவீதம் கடலை சேமித்து வைத்திருக்கிற ஒருவனுக்கு   வரைபடங்களும், திசைகாட்டும் கருவிகளும் தேவையானதாக இருக்காது. தனது மூதாதையர்களைச் சுமந்துபோன   பாய்மரக்கப்பல்களின் நீர்ச்சுவடுகள் சமுத்திரத்தின் மேல்   அவனுக்காக உறைந்து  அழியாமல் இருக்கக்கூடும்.. . நெடுங்கரை இருந்து  வெண்தோடு இரிந்த குறுங்கால் அன்னம்  அலகுகளில் சுவடிகளோடு அவனுக்காக திரும்பக்கூடும்.. இந்திரனின் நனவிலி   கடலாலும்  மலையாலும் பயணங்களாலும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் சொல்வதுபோல் அதில் நகரங்களின் குரலென்பதை  என்னால் மருந்துக்கும் பார்க்கமுடியவில்லை..  அதனால்தான் அவருக்கு   ''ஏமுறு பெருமீன்  பொருத’’ எறிஉளி வேண்டியிருக்கவில்லை                                                                                                        **** அதோ கொலம்பஸின் வர்ணமிழந்த மேசை........ அந்த மேசையின் வலது புறத்தில்  நெப்போலியனின்  நாட்குறிப்பு கிடக்கிறது. .இந்த  77 ஆம் பக்கமும் 83 ஆம் பக்கமும் அதிலிருந்துதான் கிழிக்கப்பட்டிருக்கிறது..  அதன் புழுத