Skip to main content

Posts

Showing posts from June, 2015

இருளர் பாடல் 2 - தெக்கு மலெ கல்லூருட்டி - சப்பெ கொகாலு

சுல்தான்களின் பேச்சடங்கிவிட்டது எங்கு பார்த்தாலும்  துரைகளின் நடமாட்டம். துடிய பாட்டன் ஆண்ட,  அத்திக் காடுகளும் ஈட்டிமரங்களும்  தேக்குமரங்களும் சூழ்ந்த, காட்டெருமைகளும், கழுதைப்புலிகளின் கத்தலும் கேட்டுக் கொண்டேயிருந்த துடியனூர், இப்போது கால்மேலாய் மாறிப் போயிருந்தது.  பதிக்குப் பக்கத்தில்  நிறைய புதிய ஆட்கள் வந்து ஏற்கனவே காடழித்திருந்த இடத்தில்  விவசாயம் செய்யத் துவங்கியிருந்தனர்.  அதில் செம்பூத்தானும் ஒருவன்.  சாமையும், ராகியும், நல்ல விளைச்சலை அள்ளித் தருகிற இன்னொரு தோட்டமும்  ஆனைகட்டிக்கு கீழே  சோமையனூரில் செம்பூத்தானுக்கு இருந்தது. அதில் அவனின் முதல் மனைவி குப்பாத்தாள் பண்ணையம் பார்த்துக் கொண்டிருந்தாள்.  வேலை அதிகமாக இருக்கும்போது  இங்கிருந்து வெள்ளன், கொட்டன், காரமடை, இன்னும் சிலரை வண்டியில்  கூட்டிப்போவான் செம்பூத்தான்..ஒருவாரம் பிழிந்தெடுத்துவிட்டு திரும்பக் கூட்டிக் கொண்டு வந்து விட்டு விடுவான். அவர்கள் திரும்பி வரும்போது ராகியோ, கம்போ, சோளமோ ஆளுக்கு மூன்றுபடி கொடுத்துவிடுவான். இப்போது காரமடைக்கும் முடியாமல் போய்விட்டது. ஊஞ்ச குல மொக்கைக்கு ஓடிவிட்ட வெள்ளனை இனி எள

இருளர் பாடல் 1 - காகே டாகே பங்கித்தாலேன்னெ - சப்பெ கொகாலு

காடுகளுக்குள் நெளிந்து வளைந்து பாதைகள் மன்னர்காடு போய்க்கொண்டிருக்கிறது.இந்தவளம்கொழிக்கும்சோலை,மழைக்காடுகளின்ஒன்று.தாணிக்காயும்சாதிக்காயும்பூசைக்காயும்அள்ளஅள்ளத்தீராதஅளவில்விளைந்துகொண்டேஇருக்கும்.சீவேப்புல்லும் புளியும் ஒருவருடம் விட்டு ஒருவருடம் பூத்துக் குலுங்கும், விதவிதமான புசுகிகள் மலைவிட்டு மலை தாவிக்கொண்டிருக்கும்.  கீழே கால்வைத்தால் அட்டையில்லாமல் யாரும் நகரமுடியாது..எப்போதும் ஈரக்காற்றும் சாரலும் வீசிக்கொண்டே இருக்கும்.   இதைத்தான் கொங்கன்  சுப்பன் ஏலமெடுத்திருக்கிறான். ஏலமென்றால் ஒன்றுமில்லை. யாரும் அவரை எதிர்த்து ஏலம் கேட்க வரமாட்டார்கள்.  அவனுக்கே உரிமையை கொடுத்துவிடுவார்கள். ஏலத்துக்கான  பொருள் அவனது அகராதியில் இப்படித்தானிருக்கிறது.ஒருவருடம் எட்டு வருடமல்ல கலங்காலமாக இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.    ஒரு பீட்டுக்கு ஒரு கார்டர் வீதம் ஆறு பீட்டுக்கும் ஆட்கள் இருந்தனர். இரண்டு பீட்டுக்கு ஒரு பாரஸ்டர் வீதம் மூன்று பாரஸ்டர்கள் இருந்தனர். மூன்று பாரஸ்டர்களுக்கும் மேல்.ஒரு ரேஞ்சர்.. கோயமுத்தூரில் ஆறு ரேஞ். அந்த ஆறு ரேஞ்சுக்கும் மேலே டி.எப். ஓ இருந்தார். டி எப் ஓவுக