Skip to main content

Posts

Showing posts from February, 2014

எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை - அருள்லட்சுமியை முன்வைத்து

ஊளையிடும் குளிரில் நான் கொய்யாமரத்துக்கு அருகில் உட்கார்ந்திருக்கிறேன்.. சேகர் தயங்கியபடியே வந்து நின்றான்;  ‘’அண்ணே!  என்னோட செல்லில்  பேட்டரி நிற்பதில்லை கொஞ்சநேரம் மொபைல் வேண்டும் பேசனும்’’ தயங்கியபடியேதான் கேட்கிறான். அவன் இப்படிக்கேட்பது முதல்முறையல்ல, அநேகமாக இது லட்சத்து ஒன்றாவது முறையாககூட இருக்கலாம்.  சேகரின் காதலி உமா, ஆவரம்பாளையத்தில்  ஒரு இரும்புக் கம்பனியில் வேலை செய்கிறாள். அவளை  ஜீனிலோ ஜூலையிலோ திருநெல்வேலிக்கு அழைத்துகொண்டுபோய் கல்யாணம் செய்துகொள்ளப்போகிற திட்டத்திலிருப்பவன். உமா 'அட்டவணை சாதி' சேகர் ........ எடுத்துகொடுத்துவிட்டு எனக்கு ‘’கால் வந்தாலும் வரும் பேசீட்டு சீக்கிரமா திருப்பிகொடுத்துடு’’ என்றேன். ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு லேசான புன்னகையுடன் போனவன்... போனவன்தான்; நேரம் கடந்துகொண்டே இருந்தது. ஒரு இடத்தில் நின்று பேசும் பழக்கம் அவனுக்கு அறவே இல்லை, சித்து ரகம். அவன். வழக்கமாக ‘உலாத்துகால்’ பேசும் மொட்டைமாடிக்குப்போனேன் அங்கும் இல்லை மேடைக்கு  தேடிப்போனேன் அவன் அங்கும் இல்லை; ஒருவேளை பேசிக்கொண்டே ஆவரம்பாளையத்துக்கே  போயிருப்பானோ என