Skip to main content

Posts

Showing posts from July, 2014

சப்பெ கொகாலு - கொகல்காரனோடு ஒரு உரையாடல்

உங்க ஊர், பேரு?  எத்து பேரு ரெங்கன். ஊரு ஆனைகட்டி. நான் எட்டாவது படித்திருக்கேமு. உங்கள எல்லாரும் கோகல் ரங்கன்னு சொல்லறாங்களே? நே, கோகால் நல்லா ஊதுவே. கொகால புடித்தாக்கா ஊதிகிட்டே இருப்பே. அதுனாலதான் சொல்லுகின எப்படி இதை  கத்துகிட்டீங்க? எப்போயிருந்து கொகால வாசிக்கறீங்க? ஒரு 15 வயசிலிருந்து ஊதுகே. எத்து அப்பெ ஊதுவா, எங்க தாத்தாவும் ஊதுவா  அவுங்ககூட ஆட்டத்துக்கு போவே.  அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் இதுல நல்ல பேரு.  அவுங்க கொகல் புடித்தாங்கன்னா ஆனேகூட மயங்கி நிக்கூம்பா! கொகால உடனே பழக முடிகாது.... காத்த இழுத்து உள்ளவெத்து மூச்சே கெட்டி ஊதுகோனு.. கஸ்டமாத்தான் கெடக்கும் கொஞ்சம் ஏமாந்த புல்லு போயி தொண்டக்குழியில  சிக்கிக்கு. திருளின்னு ஒந்து கெடாக்கு. மொதல்ல அத ஊதி பழகோனும்.  அப்புறம் மங்கேன்னு ஒந்து கெடக்கு. அதையும் ஊதி பழகோனும். இது ரெண்டையும் யாரு ஊதறாங்களோ அவுங்கதா இந்த கொகால ஊத முடிகூ. எம்த்தாளுகாகிட்ட திருளி, மங்கே, கொகால், மூன்றுவகையா ஊதறது கெடாக்கு. திருளி,   ஆயகுழல்தான் ஆறு கண்ணு இருக்கு.  அத  புல்லாங்குழல் மாதிரி இச்சா மத்தோரமா வெச்சு  இங

சப்பெ கொகாலு - பொறைக்கலைஞர் ராஜேந்திரனுடனான ஒரு உரையாடல்

உங்க  பேரு  ஊரு எல்லாம் சொல்லுங்க? எத்து பேரு ராஜேந்திர ஆகேகண்டி  கீழூரு  என்ன வேலைக்கு போறீங்க? என்னவேலை கெடய்க்குதோ அதுக்கு போறேன்  ஆமா நீவீரு எதுக்கு இதெல்லா கேக்கறே? இல்ல நான் எப்படி இதையெல்லாம் அடிக்கறீங்கறத பத்தி படிக்கவந்திருக்கேன்.சொல்லுங்க ஹேய்.. கேளுவி இருள சனங்க  என்னென்ன இசைக்கருவிகளை வாசிக்கறாங்க? ஒந்து பொறை இன்னொந்து தவிலு , அப்புறம் சால்ரா, கொகாலு, மிருதங்கம். மிருதங்கம் எப்பவாவது பஜனையில மட்டும் வாசிப்போம். இப்போ எங்காளுக ஜமாப்புகூட அடிக்கறாங்க. இதுக்கு பொறைன்னு  பேரு. இதுக்குந்தே செய்யற  பானைய கீழிருந்து வாங்கிட்டு வருவோம். வந்து மான்தோல  பதம் பண்ணி காயவெத்து கட்டிவெக்கோம். ஆட்டுத் தோலுலயும்  வெறையாட்டு தோலுலயும் கட்டிக்குவோம். இப்போ அப்படியில்லை மாட்டுத் தோலவெச்சு கட்டிக்கறோம். இத எப்படி குச்சி வெச்சு அடிச்சு வாசிப்பீங்களா? ம்க்கூம்..... குச்சியெல்லாம் இல்லெ கழுத்துல கட்டி தொங்க போட்டுக்குவோம். வயித்துல நிக்கும். ஒரட்டாங்கை பக்கமா நெஞ்சோட சேத்து  இறுக்கி அப்படியே ரெண்டு பக்கமும் அடிப்போம்.  சோத்தாங்கை பக்கம்தான் பலமா