Skip to main content

Posts

Showing posts from January, 2018

ஒரு கிராமத்து குயில்

இந்துஸ்தான் கல்லூரியில் ‘ ஒரு கிராமத்து குயில் ’ ஆவணப்படத்தின் வெளியீட்டுவிழா நடக்கிறது .. நீங்கள் கட்டாயம் வரவேண்டும் ’’ என்று பெருமன்றத்தின் பொறுப்பாளர்கள் அழைத்திருந்தார்கள் . நானும் நிகழ்வுக்கான அழைப்பு என்று . வந்துவிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன் ஆனால்   தோழர்கள் அழைப்பிதழில் போட்டுவிட்டு படத்தையும் அனுப்பிவிட்டார்கள் . நல்வாய்ப்பாக அதன் ஆவணப்படத்தின் நாயகன் தோழர் பத்திரப்பன் ஏற்கனவே அறிந்தவராக இருந்தார் . தோழர் பத்திரப்பன் ஒரு ஒயிலாட்டகலைஞர் மேட்டுப்பாளையத்துக்கு அருகில் உள்ள தாசம்பாளையம் என்னும் கிராமத்தைச்சேர்ந்தவர் இந்த சுற்றுவட்டாரங்களில் பெண்களை முதன்முதலாக ஒயிலுக்குள் கொண்டுவந்தவர் ..  85 வயதைக்கடந்து இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிற ஆளுமை . இந்தப்படம் இரண்டுவகையில் முக்கியத்துவம் உடையதாகக் கருதுகிறேன் 1 ஒரு ஒயில் கலைஞனின் வாழ்வுகுறித்து எடுக்கப்பட்டிருக்கிற முதல் ஆவணப்படம் . 2 மேட்டுப்பாளையம் மாதிரி எந்நேரமும் மதச்சண்டைகளை தொடங்க முண்டாசு தட்டிக்கொண்டிருக்கிற இடத்திலிருந்து சிக்க