Skip to main content

Posts

Showing posts from 2017

சூழலியல் அடிப்படைவாதம்

வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம்அடிப்படைவாதம் நம்மை தரதரவென்று இழுத்துப்போய் ஒரு ’மாயாலோக’த்துக்குள் நிறுத்திசாம்பிராணிப்புகை போட்டுவிடுகிறது. ரியர்வியூ மிரரில் தெரியும் ரியல் எதிரிகளை கண்டும் காணாமல் இருக்கவைத்து கற்பனையான எதிரிகளின் மேல் கைவாளை வீசச்சொல்லிக்கொடுக்கிறது அத்தோடு நின்றுவிடாமல் அரசின் அடியாளாய், கார்ப்ரேட்டின் கண்மூடித்தனமான கைக்கூலியாய் மெல்ல மெல்ல நம்மை மாற்றி சொந்த மக்களுக்கு எதிராக அது நிறுத்திவிடுகிறது நான் பேசிக்கொண்டிருப்பது வெறும் நாற்பது பக்கமே கொண்ட அருண் நெடுஞ்செழியனின் சூழலியல் அடிப்படைவாதம் என்ற நூல் குறித்துத்தான் சூழலியல் பற்றி பேசுவதென்பதும் செயல்படுவதென்பதும் ஒரு குறிப்பிட்டாகாலம்வரை குறிப்பிட்ட ஆட்களின் கக்கத்தில்தான் இருந்துவந்தது அதற்காக செயல்பட்ட நிறுவனங்களை ஆட்களைப் பட்டியலிட்டால் அந்த ஆட்கள் யார் , ஏன் பேசினார்கள் என்பதைக்கூட எளிதாக  இனம் கண்டுவிடமுடியும் பல்வேறு வளச்சுரண்டல்களை கண்கூடாகப்பார்த்துசலித்து கோபம் கொண்ட ஒரு சமூகம், எல்லைகடக்காமல், சாந்த சொரூபியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் வேலையை அந்தப் பச்சை பசலிகள் வட்டம் செவ்வனே செய
அயன்மேன்களும்.ஆதிவாசிகளும் 1 பழங்குடி மாணவர்கள் தங்கியிருக்கும் 491 விடுதிகளை இந்த கல்வியாண்டிலிருந்து மூட உத்தரவிட்டுள்ளது.மகாராஷ்ட்ரா அரசு இந்த அறிவிப்பின் மூலம் 20,535 மாணவ மாணவிகள் வீடுகளிலிருந்து கல்லூரிக்கோ பள்ளிகளுக்கோ தினமும் வந்துபோகவேண்டும் அல்லது அவர்களாகவே தனியார் கட்டண விடுதிகளையும் உணவையும் தேடிக்கொள்ளவேண்டும் ஏன் இப்படியொரு மனிதாபிமானமற்ற முடிவை எடுக்கவேண்டும் என்று கேட்டால்.. ’’டோண்ட் வொரி ’தீன் தயாள் உபத்யாய் ஸ்வயம் யோஜனா’ என்ற திட்டத்தின்மூலம் மாதாமாதம் பெரிய நகரங்களுக்கு ரூபாய் ஆறாயிரமும் சிறிய நகரங்களுக்கு ஐந்தாயிரமும் மூன்றாம்தர நகரங்களுக்கு மூன்றாயிரமும் வழங்க நாங்கள் முயன்றுவருகிறோம்’’ என்று சொல்கிறது அரசு மேலோட்டமாகப்பார்த்தால் ’அதானே அரசு எத்தனை கரிசனத்தோடு இவர்களிடம் நடந்துகொள்கிறது இவர்கள்தான் திருந்துவதேயில்லை’ என்ற சேற்றைவாரிப்பூசிவிட்டுப்போய்விடலாம் ஆனால் மாதா மாதம் இப்போது தரவேண்டிய 800 ரூபாயையை எட்டுமாதம் கழித்தே தருகிற இந்த அரசு இவ்வளவு பெரிய தொகையை மாதா மாதம் அனுப்புமா என்ற கேள்வியும் கட்டணம் கட்டத்தாமதமானதால் கழுத்தைப்பிடித்து