Skip to main content
அயன்மேன்களும்.ஆதிவாசிகளும்
1
பழங்குடி மாணவர்கள் தங்கியிருக்கும் 491 விடுதிகளை இந்த கல்வியாண்டிலிருந்து மூட உத்தரவிட்டுள்ளது.மகாராஷ்ட்ரா அரசு
இந்த அறிவிப்பின் மூலம் 20,535 மாணவ மாணவிகள் வீடுகளிலிருந்து கல்லூரிக்கோ பள்ளிகளுக்கோ தினமும் வந்துபோகவேண்டும் அல்லது அவர்களாகவே தனியார் கட்டண விடுதிகளையும் உணவையும் தேடிக்கொள்ளவேண்டும்
ஏன் இப்படியொரு மனிதாபிமானமற்ற முடிவை எடுக்கவேண்டும் என்று கேட்டால்..
’’டோண்ட் வொரி ’தீன் தயாள் உபத்யாய் ஸ்வயம் யோஜனா’ என்ற திட்டத்தின்மூலம் மாதாமாதம் பெரிய நகரங்களுக்கு ரூபாய் ஆறாயிரமும் சிறிய நகரங்களுக்கு ஐந்தாயிரமும் மூன்றாம்தர நகரங்களுக்கு மூன்றாயிரமும் வழங்க நாங்கள் முயன்றுவருகிறோம்’’ என்று சொல்கிறது அரசு
மேலோட்டமாகப்பார்த்தால் ’அதானே அரசு எத்தனை கரிசனத்தோடு இவர்களிடம் நடந்துகொள்கிறது இவர்கள்தான் திருந்துவதேயில்லை’ என்ற சேற்றைவாரிப்பூசிவிட்டுப்போய்விடலாம்
ஆனால்
மாதா மாதம் இப்போது தரவேண்டிய 800 ரூபாயையை எட்டுமாதம் கழித்தே தருகிற இந்த அரசு இவ்வளவு பெரிய தொகையை மாதா மாதம் அனுப்புமா என்ற கேள்வியும்
கட்டணம் கட்டத்தாமதமானதால் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளிய கட்டணவிடுதிகளையும் அறிந்த மாணவர்களுக்கு உண்மையின் கோரமுகம் பீதியூட்டுகிறது

இதனால் என்ன பிரச்சனைகள் வரும்.?
1 அடிக்கடி விடுதியில் இருந்து நீக்கப்பட்டால் மாணவிகள் மீண்டும் கல்விகற்க வருவது என்பது பழங்குடிகளைப்பொறுத்தவரை சாத்தியமில்லாத ஒன்று
2 கட்டணம் கட்டித்தான் படித்தாகவேண்டும் என்றால் பள்ளிக்கோ கல்லூரிக்கோ பழங்குடிகள் தங்கள் குழந்தைகளை அனுப்புவது கணிசமாகக்குறைந்துபோகும்
3 தொலைதூரங்களிலிருந்து சரியான நேரத்திற்கு கல்லூரிக்கோ பள்ளிக்கோ வந்து சேர்வதோ பாதுகாப்பாய் வீடு திரும்புவதோ போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள மலைப்பகுதிகளில்..சாத்தியமே இல்லை .இதனால் ஏற்கனவே பல்வேறு சீண்டல்களை சந்தித்துவரும் பழங்குடி .மாணவர்களுக்கும். மாணவிகளுக்கும் அசம்பாவிதங்கள் நடக்கவே அதிக வாய்ப்புள்ளது.
அப்படி ஒருபகுதியில் அசம்பாவிதம் நடந்துவிட்டால் அந்த அச்சத்தின்காரணமாகவே பிற பகுதிகளிலும் குழந்தைகளை அனுப்புவது தானாகவே நின்றுபோகும்
இது பழங்குடிகளை கல்வியில் இருந்துவிலக்கிவைத்து அடிவேலைகளுக்கு கொண்டு செல்லும் சூழ்ச்சியின் இன்னொரு வடிவமாகவே பார்க்கமுடிகிறது
ஆனால் பா ஜ க இதை ஒரு பைலட்திட்டமாக எடுத்துகொண்டு தாங்கள் ஆளும் மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கம் இருப்பதாக பேசத்தொடங்கியிருக்கிறது அப்புறம்.இந்தியா முழுவதும் ஏன் அமுல்படுத்தக்கூடாது என்றுகூட கேட்கும்.
இப்படிவிரிவுபடுத்தினால் இந்து ராஜ்ஜியத்துக்கு நிறைய அடிமைகள் கிடைப்பார்கள்
அப்புறம் என்ன...கல்விக்கொள்கை 2016ன் ’வேதவாக்’கை காப்பற்றிவிடலாம்
ஆனால் மாநிலத்தின் தொலைதூரங்களில் நகரத்தின் வீதிகளில் ஆங்காங்கே பழங்குடி மாணவ்ர்கள் போராடத் தொடங்கியிருக்கிறார்கள்
2
சமீபத்தில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் எல்லா மாநில வன உயிர் காப்பாளர்களுக்கும் ( Chief wildlif wardens ) ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது இந்த ஒற்றைக்கடிதம் பல்வேறு போராட்டங்களுக்கும் சாவுகளுக்கும் பிறகு உருவாக்கப்பட்ட வனசட்டம் 2006ன் எல்லா சரத்துகளையும் தூக்கி குப்பைத்தொட்டியில் வீசிவிடுகிறது
இனிவரும் காலங்களில் புலிகள் சரணாலயங்கள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் வாழும் பழங்குடிகள் சுள்ளி பொறுக்கவோ சுணடைக்காய் எடுக்கவோ மட்டுமல்ல அவசரத்துக்குகூட காட்டுக்குள் ஒதுங்க முடியாது
அரசு , பழங்குடிகளுக்கு நூறாண்டுகளாக இழைத்த கொடுமைகளை சொல்லி, மன்னிப்பு கேட்டுவிட்டு நிறைவேற்றப்பட்ட வரலாற்றுசிறப்புமிக்க ஒரு சட்டம் அமுலில் இருக்கிறது அதை குறுக்குவழியில் தடை செய்யும் ஆணையை இந்த தேசத்தின் வனத்துறை பிறப்பிக்கிறது
இந்த ஆணையை அனுப்பியதற்காகவே வனத்துறையின் துணைப்பொது ஆய்வாளர் டாக்டர் வைபவ் மாத்தூர் மீது கிரிமினல் வழக்கும், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழும் வழக்கு ஒன்றைப் பதியமுடியும். இவ்வளவு முகாந்திரங்கள் இருக்கும் ஒரு கடித்தை எப்படி இவர்களால் அனுப்ப முடிகிறது இந்த தைரியம் எங்கிருந்து இவர்களுக்கு வருகிறது. இந்த கட்டளைகள் எங்கிருந்து பிறப்பிக்கப்படுகின்றன ..
2006 வனச்சட்டம் வரும்வரை,குறிப்பாக செட்டில்மெண்ட் பகுதிகளி வாழும்.பழங்குடிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது .கிட்டத்தட்ட வனத்துறையின் அடிமைகள் அவர்கள். 2006 வனச்சட்டம் அவர்களுக்கு சில உரிமைகளை உறுதி செய்தது
ஆனால் அந்த 2006 வனசட்டம் அமுல்படுத்தப்படாமல் இருக்க என்னெவெல்லாம் செய்யமுடியுமோ அத்தனை தகிடு தத்தங்களையும் செய்தார்கள்.கார்ப்ரேட்டுகளுடனும் என் ஜி ஓ கைக்கூலிகளுடனும் சேர்ந்துகொண்டு காடே அழிந்துவிடும் என்று தாண்டவமாடினார்கள். பழங்குடிகள் உழுதுவந்த பல ஏக்கர் நிலங்களில் மரங்களை வைத்து அது எங்கள் வனப்பகுதி என்று சொல்லி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள் . அந்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு துறை ரீதியான முட்டுக்கட்டைகளை தொடர்ந்து ஏற்படுத்தினார்கள். ரிட்டயர்டு வனத்துறை அதிகாரிகளை வைத்து வழக்குப்போட்டு இழுத்தார்கள் இந்த கேப்பில் அவசர அவசரமாக பலபகுதிகளை சரணாலயங்களாக அறிவித்தார்கள்
ஏன் இவ்வளவு அவசரப்பட்டார்கள்
வேறொன்றுமில்லை...வனசட்டம் 2006 ன்படி சரணாலயங்கள் அமைக்கவோ நிலங்களை எடுத்துக்கொள்ளவோ எந்தத்தடையும் இல்லை.பழங்குடிகளும் இதை எதிர்க்கவில்லை ஆனால் புலியோ மானோ யானையோ அணிலோ எதற்கு சரணாலயம் அமைக்கவேண்டுமென்றாலும் அந்தப்பகுதி மக்களை உள்ளடக்கிய வனஉரிமைக்குழுவின் ஒப்புதலைப் பெறவேண்டும். அந்தக்குழு தீர்மானம் இயற்றித்தரவேண்டும். அதுமட்டுமல்லாமல் எடுக்கப்பட்ட நிலங்களில் சரணாலயங்கள் அமைக்கப்படவில்லையெனில் அதை மைனிங் உள்ளிட்ட பிற பயன்களுக்காக தனியாருக்கு தாரைவார்ப்பதை வனசட்டம் 2006 தடை செய்கிறது இதன் அர்த்தம் என்னெவெனில் இனி வனத்துறையும் அரசும் தன்னந்தனியாக தடியெடுத்துக்கொண்டு நினைத்தபடியெல்லாம் ஆடமுடியாது என்பதுதான்
இதனால்தான் 
இவர்கள் 2006 வனசட்டத்தை பைபாஸ் செய்து சட்டவிரோதமாக உப்புசப்பில்லாத 1972 வனசட்டத்தின் கீழ் சரணாலயங்களை அமைத்தார்கள். ஆனால் சரணாலயங்கள் அமைக்கப்பட்ட இடங்களில் மக்கள் வாழ, நடமாட கால்நடைகளை வைத்துக்கொள்ள ஏற்படுத்திய தடைகளை, நுட்பமான சூழ்ச்சிகளை, மனிதாபிமானமற்ற பல்வேறு கட்டுப்பாடுகளை 2006 வனசட்டத்தின் சரத்துகளைக்காட்டி பழங்குடிகளும் பழங்குடி சங்கங்களும் போராட்டக்காரர்களும் தீர்க்கமாய்ப் போராடி உடைத்து ஆதிக்குடிகளுக்கான இயல்பான வாழ்வை சுதந்திரமான நடமாட்டத்தை, உரிமைகளை மீட்டெடுத்தார்கள்

இவர்களின் சூறையாடல் முயற்சிகளுக்கும் வனாளாவிய அதிகாரத்துக்கும் கார்பன் வணிக கனவுகளுக்கும் குறுக்கே நின்று இப்போது பழங்குடிகளின் இருப்பும் அவர்களின் உரிமைப்போரும் தொந்தரவு செய்கிறது
ஆகவே சரணாலாயங்கள் இருக்கும் பகுதிகளில் 2006 வனச்சட்டத்தை செயல்படுத்தவேண்டிய அவசியமில்லை என்று சர்வசாதரணமாக ஒரு ஆணையின் மூலம் சட்டம்கொடுத்த அவர்களின் அடிப்படை உரிமையை தவிடுபொடியாக்க எத்தனிக்கிறார்கள்
இதெல்லாம் சேம்பல்தான்
அறிவிக்கப்படாத போர் ஒன்றை முன்பே மத்திய வனப்பகுதிகளில் அரசு நடத்தி வருகிறது பழங்குடிகளுக்கு எதிராக இப்போது அறிவிக்கப்பட்ட போர் ஒன்றை தொடங்கியுள்ளது
இந்திய அளவில் பழங்குடிகளும் பழங்குடி சங்கங்களும் தமிழக அளவில், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கமும், தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கமும் இணைந்து அவர்களுக்கே உரிய தீரத்துடனும் அறத்துடனும் இந்தப்போரை எதிர்கொள்ளத்தயாராகி வருகிறார்கள் . மாணவர்களும் இளைஞர்களும் ஊடகங்களும் இதர அரசியல் இயக்கங்களும்.. எல்லா அரசியல்வேறுபாடுகளையும் கடந்து எந்தெந்தவகையிலெல்லாம் துணை நிற்கமுடியுமோ அந்தவகையிலெல்லாம் .... வெறுங்கையோடு நிற்கும் பழங்குடிகளுக்கு ஆதரவை அளிக்கவேண்டும்

https://www.facebook.com/photo.php?fbid=10155428044181807&set=a.10151453493681807.554597.723361806&type=3&theater

Comments

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் மொழியோ    உணர்வுமொழியோ   அவருக்கு     கைகூடி வந்ததாக தெரியவில்லை , பாவம் அவர் என்ன செய்வார்...மேலும் அவருக்குமு

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள் ’ என்று இருவரையும் வேறு வேறாக்கும் பக்க சார்பான ஆய்வாளர்களின் வீச்செழுத்து எங்கும் மலினமாக காணக்கிடைக்கிறது  . ந

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி சுமந்துவரும் இசை குறிப்புகள் - நன்றி ராஜா ராமசாமி

   வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த , அந்த வனமும்   நீண்டு நெடிந்து பரந்திருந்தது .  விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது . ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த     வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் , ‘ காடுகொன்று நடாக்கிய ’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது . மலைகளை ஒட்டியிருந்த     சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள      மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது . வந்தேறிகள்     அத்தோடு நிற்கவுமில்லை . குன்றுகளில் புகலிடம்தேடி       இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது   மலைத்தாரம்   ( புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை     தொடர்ந்து நிகழ்த்தியது . அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே     இலக்கியங்கள் பாடின . இவ்வழியாகவே மேற்குத்தொடர்சி மலையின் மலைத்தாரங்கள்   அகஸ்ட்டஸ்சீசர் காலத்திய உரோமாபுரிக