Skip to main content

Posts

Showing posts from 2018

சித்திராக்களும் மாரிகளும்

கோவையிலிருந்து வெகு தொலைவுதள்ளி அடர்வனங்களுக்குள்ளிருக்கும் பள்ளி ஒன்றிற்கு சென்றிருந்தோம் . சிண்டிகேட் வங்கியின் ஓய்வுபெற்ற மேலாளர் பார்த்திபன் குழந்தைகளுக்கான சீருடைகளை ஏற்பாடு செய்திருந்தார் அவரே நேரடியாகச் சென்று துணிகளை வாங்கி தைத்து எடுத்துக்கொண்டுவந்திருந்தார். 'நானும் உங்களோடு பைக்கிலேயே வந்துடறேன் சார்' கூடவே அமர்ந்துகொண்டு மொத்தமாக 80 கிலோமீட்டரை இருசக்கரவாகனத்திலேயே கடந்துவந்தார். குண்டும் குழியும், யானைப்பிளிறலும் நிறைந்த சாலையில் எந்த இடத்திலும் அவரிடத்தில் சலிப்பையோ களைப்பையோ காணமுடியவில்லை. வரும்வழியெல்லாம் மலைப்பகுதிகளில் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அக்கறையாகக் கேட்டுக்கொண்டே வந்தார்.. தனது தந்தை தொடக்கப்பள்ளி ஆசிரியாக இருந்ததை ஓரிரு இடங்களில் குறிப்பிட்டார். 11.40 க்கு பள்ளிக்கு போய்விட்டோம். காட்டில்கிடைத்த பூக்களைதொடுத்து ஒரு பொக்கேபோலாக்கிக்கொடுத்து குழந்தைகள் வரவேற்றார்கள் வாஞ்சையுடன் அதைவாங்கிக்கொண்டார் 'நோ..பார்மாலிட்டி' சொல்லிவிட்டு ஒவ்வொரு வகுப்பாய் ஒவ்வொருவராய் அழைத்து சீருடையைக் கொடுத்தார் அநேகமாக இது அவரது தந்த

சூயஸ் என்னும் சூனியக்காரன்

கோவையில் உள்ள சுடுகாடுகளின் கட்டுப்பாடு, ஈஷாவிடம் இருக்கிறது சாலைகளின்கட்டுப்பாடு, ஐவிஆர் எல்டி& எல் என் டி கம்பனிகளிடம் இருக்கிறது மருத்துவமனைகளின் கட்டுப்பாடு குறிப்பிட்ட கம்பனிகளிடம் இருக்கிறது கோவையில் உள்ள குளங்களின் கட்டுப்பாடு, ஒருகட்டத்தில் சிறுதுளியிடம் இருந்தது கடைசியாக மாநகராட்சியின் நீர்க்கட்டுப்பாடு சூயஸ் கம்பனியிடம் சிக்கியிருக்கிறது இப்படி நாலாப்புறமும் கட்டப்பட்டிருக்கிற பெருநகரம்,ஒரு பம்பாய்மிட்டாய்காரனின் கையிலிருக்கும் பொம்மைபோல் அசையப்போகும் ஒரு கணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசென்று ஒன்று இருப்பதாகவும், அது இயங்குவதாகவும் இன்னும் நம்புவது ஆச்சரியமளிக்கிறது அது வெறும் மூடநம்பிக்கையேதவிர, வேறெதுவும் இல்லை. சூயசை பொறுத்தவரை அது மிகப்பெரிய நிறுவனம்.அதன் வலைப்பின்னல் பிரம்மாண்டமானது அதன் வியாபாரம் குடிநீரோடு மட்டும் நிற்காது. சாக்கடை நீரைமறு சுழற்சி செய்வது, அதை கம்பனிகளுக்கு விற்பது, கம்பனிகளுக்கு ட்ரீட்மெண்ட் பிளாண்ட் அமைப்பது, என இன்னும் இதோடு தொடர்புடைய வியாபாரங்களின் பட்டியல் கற்பனைக்கெட்டாத அளவுக்

வெறும்வில் சுயம்வரங்கள்

ச மீபத்தில் கொங்குவேளாளக்கவுண்டர்கள் அமைப்பு நடத்திய சுயம்வரம் ஒன்றில் ஆண்கள்மட்டுமே கலந்துகொண்டதாகவும் பெண்கள் யாரும் வரவில்லையென்றும் ஒரு தகவலை சீனி வாசன் அனுப்பியிருந்தார் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அப்படி நடப்பதற்கு சாத்தியங்கள் இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயமாக 200 சதவீத சாத்தியங்கள் இருப்பதாகவே கருதுகிறேன் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் 'இம் என்றால் இன்னோவாவும், ஏன் என்றால் எர்டிக்காவும் வந்துநிற்க்கும் செல்வச்செழிப்புள்ள மாப்பிள்ளையை வேண்டமென்று மறுத்துவிட்டார் ஊரே மூக்கின்மேல் விரலைவைத்துப் பார்த்தது 'பொழைக்கத்தெரியாதவளா இருக்காளே, வந்த சீதேவியே வாசப்படியில வெச்சு வெரட்டீட்டாளே என்று அவளை கண்டபடி ஏசவும் செய்தார்கள்' . அசந்தர்பமாக அவளை சந்தித்தபோது ஏன் சுமதி இப்படி பண்னீட்டியாமே என்று கேட்டதுதான் தாமதம் 'ஆமா அந்தாளுக்கு வயசு 39, எனக்கு 21 சொந்தம்போகக்கூடாது சொத்துபோககூடாதுன்னு வருத்தப்பட்டவங்க பொன்னு வாழ்க்கை போகுமேன்னு வருத்தபடல, என் வாழ்கைய நான் செலக்ட் பன்னுவேன் அதுல கஞ்சியோ கூலோ குடிச்சாலும் சந்தோசமா இருப்

ஒரு கிராமத்து குயில்

இந்துஸ்தான் கல்லூரியில் ‘ ஒரு கிராமத்து குயில் ’ ஆவணப்படத்தின் வெளியீட்டுவிழா நடக்கிறது .. நீங்கள் கட்டாயம் வரவேண்டும் ’’ என்று பெருமன்றத்தின் பொறுப்பாளர்கள் அழைத்திருந்தார்கள் . நானும் நிகழ்வுக்கான அழைப்பு என்று . வந்துவிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன் ஆனால்   தோழர்கள் அழைப்பிதழில் போட்டுவிட்டு படத்தையும் அனுப்பிவிட்டார்கள் . நல்வாய்ப்பாக அதன் ஆவணப்படத்தின் நாயகன் தோழர் பத்திரப்பன் ஏற்கனவே அறிந்தவராக இருந்தார் . தோழர் பத்திரப்பன் ஒரு ஒயிலாட்டகலைஞர் மேட்டுப்பாளையத்துக்கு அருகில் உள்ள தாசம்பாளையம் என்னும் கிராமத்தைச்சேர்ந்தவர் இந்த சுற்றுவட்டாரங்களில் பெண்களை முதன்முதலாக ஒயிலுக்குள் கொண்டுவந்தவர் ..  85 வயதைக்கடந்து இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிற ஆளுமை . இந்தப்படம் இரண்டுவகையில் முக்கியத்துவம் உடையதாகக் கருதுகிறேன் 1 ஒரு ஒயில் கலைஞனின் வாழ்வுகுறித்து எடுக்கப்பட்டிருக்கிற முதல் ஆவணப்படம் . 2 மேட்டுப்பாளையம் மாதிரி எந்நேரமும் மதச்சண்டைகளை தொடங்க முண்டாசு தட்டிக்கொண்டிருக்கிற இடத்திலிருந்து சிக்க