Skip to main content

Posts

Showing posts from 2015

டுவெண்டி டுவெண்டி பஞ்சாயத்து - ஒரு ஆபத்தான முன்னுதாரணம்

எர்னாகுளம் மாவட்டத்தில் கீழகம்பலம் என்றுஒரு ஊராட்சியிருக்கிறது. ,’அன்னாகுரூப்ஸ்’ என்ற கம்பனி அன்னா கிட்டெக்ஸ் அன்னாடெக்ஸ்டைல்ஸ் அன்னா அலுமினியம் புராடக்ட்ஸ், அன்னா ஸ்கூல் பேக்ஸ், அன்னா வாசனை திராவியங்கள்,அன்னா உடனடிசமையல்பொருட்கள் என பல தொழில்களில் அந்தப்பகுதிகளில் ஆழமாக வேறூன்றி உள்ளது எல்ல பெரிய கம்பனிகளும் தனது வருவாயில் குறிப்பிட்ட வருவாயை தான் சார்ந்திருக்கும் பகுதிகளின் சமூகமேம்பாட்டுப்பணிக்கு செலவிடவேண்டும் என்பது ஒரு விதி கம்பனிகள் தனது சி எஸ் ஆர் (Corporate social Responsibility)பணியை உள்ளூரில் இயங்கும் நிறுவனங்களின் மூலமாகத்தான் செய்யவேண்டும் என்பது இரண்டவது விதி  ஆனால் பல நிறுவனங்கள் அப்படி உள்ளூர் நிறுவனங்களை அனுகுவதில்லை தாங்களே ஒரு அறக்கட்டளையை தொடங்கி அந்தப்ப பணத்தை அந்த அறக்கட்டளையில் போட்டு வேறு வழியில் திரும்பி கம்பனிக்கே வருமாறு பார்த்துக்கொள்ளும் இன்னொரு வ்கையில் பார்த்தால் கம்பனி தனக்கு எதிராக ஏற்படும் எல்லா எதிர்ப்புகளையும் புஸ்வாணமாக்கவும் தணித்துக்கொள்ளவுமே இந்த CSR ஐ உபயோக்கிக்கிறது ( ஏன் இந்த விதிகள் என்பதுபற்றியும் எப்படி கம்பனிகள் தனக்கெதி

இருளர் பாடல் 2 - தெக்கு மலெ கல்லூருட்டி - சப்பெ கொகாலு

சுல்தான்களின் பேச்சடங்கிவிட்டது எங்கு பார்த்தாலும்  துரைகளின் நடமாட்டம். துடிய பாட்டன் ஆண்ட,  அத்திக் காடுகளும் ஈட்டிமரங்களும்  தேக்குமரங்களும் சூழ்ந்த, காட்டெருமைகளும், கழுதைப்புலிகளின் கத்தலும் கேட்டுக் கொண்டேயிருந்த துடியனூர், இப்போது கால்மேலாய் மாறிப் போயிருந்தது.  பதிக்குப் பக்கத்தில்  நிறைய புதிய ஆட்கள் வந்து ஏற்கனவே காடழித்திருந்த இடத்தில்  விவசாயம் செய்யத் துவங்கியிருந்தனர்.  அதில் செம்பூத்தானும் ஒருவன்.  சாமையும், ராகியும், நல்ல விளைச்சலை அள்ளித் தருகிற இன்னொரு தோட்டமும்  ஆனைகட்டிக்கு கீழே  சோமையனூரில் செம்பூத்தானுக்கு இருந்தது. அதில் அவனின் முதல் மனைவி குப்பாத்தாள் பண்ணையம் பார்த்துக் கொண்டிருந்தாள்.  வேலை அதிகமாக இருக்கும்போது  இங்கிருந்து வெள்ளன், கொட்டன், காரமடை, இன்னும் சிலரை வண்டியில்  கூட்டிப்போவான் செம்பூத்தான்..ஒருவாரம் பிழிந்தெடுத்துவிட்டு திரும்பக் கூட்டிக் கொண்டு வந்து விட்டு விடுவான். அவர்கள் திரும்பி வரும்போது ராகியோ, கம்போ, சோளமோ ஆளுக்கு மூன்றுபடி கொடுத்துவிடுவான். இப்போது காரமடைக்கும் முடியாமல் போய்விட்டது. ஊஞ்ச குல மொக்கைக்கு ஓடிவிட்ட வெள்ளனை இனி எள

இருளர் பாடல் 1 - காகே டாகே பங்கித்தாலேன்னெ - சப்பெ கொகாலு

காடுகளுக்குள் நெளிந்து வளைந்து பாதைகள் மன்னர்காடு போய்க்கொண்டிருக்கிறது.இந்தவளம்கொழிக்கும்சோலை,மழைக்காடுகளின்ஒன்று.தாணிக்காயும்சாதிக்காயும்பூசைக்காயும்அள்ளஅள்ளத்தீராதஅளவில்விளைந்துகொண்டேஇருக்கும்.சீவேப்புல்லும் புளியும் ஒருவருடம் விட்டு ஒருவருடம் பூத்துக் குலுங்கும், விதவிதமான புசுகிகள் மலைவிட்டு மலை தாவிக்கொண்டிருக்கும்.  கீழே கால்வைத்தால் அட்டையில்லாமல் யாரும் நகரமுடியாது..எப்போதும் ஈரக்காற்றும் சாரலும் வீசிக்கொண்டே இருக்கும்.   இதைத்தான் கொங்கன்  சுப்பன் ஏலமெடுத்திருக்கிறான். ஏலமென்றால் ஒன்றுமில்லை. யாரும் அவரை எதிர்த்து ஏலம் கேட்க வரமாட்டார்கள்.  அவனுக்கே உரிமையை கொடுத்துவிடுவார்கள். ஏலத்துக்கான  பொருள் அவனது அகராதியில் இப்படித்தானிருக்கிறது.ஒருவருடம் எட்டு வருடமல்ல கலங்காலமாக இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.    ஒரு பீட்டுக்கு ஒரு கார்டர் வீதம் ஆறு பீட்டுக்கும் ஆட்கள் இருந்தனர். இரண்டு பீட்டுக்கு ஒரு பாரஸ்டர் வீதம் மூன்று பாரஸ்டர்கள் இருந்தனர். மூன்று பாரஸ்டர்களுக்கும் மேல்.ஒரு ரேஞ்சர்.. கோயமுத்தூரில் ஆறு ரேஞ். அந்த ஆறு ரேஞ்சுக்கும் மேலே டி.எப். ஓ இருந்தார். டி எப் ஓவுக

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள் ’ என்று இருவரையும் வேறு வேறாக்கும் பக்க சார்பான ஆய்வாளர்களின் வீச்செழுத்து எங்கும் மலினமாக காணக்கிடைக்கிறது  . ந

என் டி ராஜ்குமார் ஒரு ஜன வசிய மருத்துவன்

ஈணம் என்னும்   கவிதை நிகழ்த்தும்    முறைக்கு நாம் கொஞ்சமும்   பழக்கப்படவில்லை ஆனால் கேரளத்தில் அது மிக பரிச்சயமான ஒரு முறை.   கவிதையை கிட்டத்தட்ட ஓதுதல் நிலைக்கு தள்ளி ஒவ்வொரு நிலைக்கும் இடைவெளி கொடுத்து   மீண்டும் ஓதி. ஒரு மெளனத்தில் நிறுத்தி   நம்மை வனாந்திரத்துக்குள் விட்டுவிட்டு போய்விடுகிறார்கள்.     இப்படி மெளனம் முடியும் இடத்தில்தான் அந்தக்கவிதையை   கவிஞன் கைவிட்டுவிடுகிறான். அல்லது நமக்கு கைமாற்றிவிட்டு உறைந்துபோய்விடுகிறான்..அதற்குப்பிறகு   அது நமது   சொற்க்களன்ற   அடியாளத்தில் இறங்கி சவ்வூடுபரவலை நிகழ்த்துகிறது. ஈணம் குறித்து ஸ்ரீ யிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது பல நகைச்சுவையான விசயங்களை பகிர்ந்துகொண்டார். சீரியசாக அவர் பகிர்ந்துகொண்டது   பேராசிரியர் மதுசூதன நாயரின்   நாராணத்து பிராந்தன்   என்னும் புகழ்பெற்ற ஈணம்.      யார் இந்த நாராணத்துப்பிராந்தன்? விக்ரமாதித்த மகாராஜாவின் அமைச்சர்   வரருசி   ஒரு பிராமணன் 'விதிப்பயனாக’ அவன்   ஒரு பறைப்பென்ணை மணக்க நேர்கிறது. அது பறைப்பெண் எனத்தெரிந்ததும் தன்னைதானே சாதிவிலக்கம் செய்துகொண்டு   ஊரை காலிசெய்துவிட