Skip to main content

டுவெண்டி டுவெண்டி பஞ்சாயத்து - ஒரு ஆபத்தான முன்னுதாரணம்



எர்னாகுளம் மாவட்டத்தில் கீழகம்பலம் என்றுஒரு ஊராட்சியிருக்கிறது.

,’அன்னாகுரூப்ஸ்’ என்ற கம்பனி அன்னா கிட்டெக்ஸ் அன்னாடெக்ஸ்டைல்ஸ் அன்னா அலுமினியம் புராடக்ட்ஸ், அன்னா ஸ்கூல் பேக்ஸ், அன்னா வாசனை திராவியங்கள்,அன்னா உடனடிசமையல்பொருட்கள் என பல தொழில்களில் அந்தப்பகுதிகளில் ஆழமாக வேறூன்றி உள்ளது
எல்ல பெரிய கம்பனிகளும் தனது வருவாயில் குறிப்பிட்ட வருவாயை தான் சார்ந்திருக்கும் பகுதிகளின் சமூகமேம்பாட்டுப்பணிக்கு செலவிடவேண்டும் என்பது ஒரு விதி
கம்பனிகள் தனது சி எஸ் ஆர் (Corporate social Responsibility)பணியை உள்ளூரில் இயங்கும் நிறுவனங்களின் மூலமாகத்தான் செய்யவேண்டும் என்பது இரண்டவது விதி 
ஆனால் பல நிறுவனங்கள் அப்படி உள்ளூர் நிறுவனங்களை அனுகுவதில்லை தாங்களே ஒரு அறக்கட்டளையை தொடங்கி அந்தப்ப பணத்தை அந்த அறக்கட்டளையில் போட்டு வேறு வழியில் திரும்பி கம்பனிக்கே வருமாறு பார்த்துக்கொள்ளும்

இன்னொரு வ்கையில் பார்த்தால் கம்பனி தனக்கு எதிராக ஏற்படும் எல்லா எதிர்ப்புகளையும் புஸ்வாணமாக்கவும் தணித்துக்கொள்ளவுமே இந்த CSR ஐ உபயோக்கிக்கிறது
( ஏன் இந்த விதிகள் என்பதுபற்றியும் எப்படி கம்பனிகள் தனக்கெதிரான எதிர்ப்புகளை இந்த சி எஸ் ஆரை வைத்து தணிக்கிறது என்பது பற்றியும்  தனியாக உரையாடலாம்)
இப்போது அன்னா கம்பனிக்கு வருவோம்
அன்னா கம்பனி தனது கார்பரேட் சோசியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி (CSR) மூலமாக பணிகளை செய்ய ’டுவெண்டி டுவெண்டி’ என்ற அமைப்பை தானே நிறுவுகிறது அதன்மூலமாக கீ்ழ்கம்பலத்தில் பல சமூகப்பணிகளை செய்யத்தொடங்குகிறது அந்த பணிகளின் மூலமாக அது தனக்கான ஆதரவை கொஞ்சம் கொஞ்சமாக பெருக்கிக்கொண்டு ஒரு பூதம்போல் உயர்ந்துநிற்க்கிறது
கேரளாவில் உள்ளாட்சித்தேர்தல் அறிவிக்கப்படுகிறது ஏற்கன்வே போட்டுவைத்த திட்டத்தின்படி அந்தத் தேர்தலில் போட்டியிடுவதென்று அன்னா உருவாக்கிய டிவெண்டி டிவெண்டி முடிவுச் செய்கிறது.போட்டியும் இடுகிறது அது தான் போட்டியிட்ட 19 வார்டுகளில்17 லில் காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட் இதரகட்சிகள் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி வெற்றி பெறுகிறது.
மேலோட்டமாகப்பார்க்கும்போது இது ஏதோ மகத்தான புரட்சிபோலத்தோன்றலாம். இங்கே உள்ள பத்திரிக்கைகள் அப்படித்தான் இதை அதை கொண்டாடித்தீர்த்தது  ஆனால் கம்பனியே நேரடியாக ஆளுகின்ற இப்படியான டுவெண்டி டுவெண்டி போக்குகள் பரவுமானால் கார்ப்ரேட் CEO க்களின் கையில் மாவட்டபஞ்சாயத்துகளும் ஒன்றியங்களும் போய்விடுவதற்கான எல்லாஆபத்துகள் நிறைந்திருக்கின்றன.
அப்படிப்போனால்......
இப்போது அன்னா கம்பனி கீழக்கம்பலத்தில் 15 வது வார்டில் ஒரு ஆலையை நிறுவுகிறது.என்று வைத்துக்கொள்வோம். அது உள்ளூரின் வளங்களை ஈவு இரக்கமின்றி உறுஞ்சி தனது வியாபாரத்துக்காக பயன்படுத்த எண்ணுகிறது அல்லது தனது கழிவுகளை  அங்கேயே கொட்டமுனைகிறது 
அதைத்தடுத்தோ அல்லது கண்டித்தோ அந்த 15வது வார்டு மெம்பரோ அல்லது மீதமுள்ள 16 வார்டுமெம்பர்களோ குரல் எழுப்புவார்களா?

குரல் எழுப்பிவிட்டு ஊராட்சி உறுப்பினராக  நீடித்துவிட முடியுமா?

இப்படிக்கேட்டுப்பார்க்கலாம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டபோது அதில் உள்ள பல்வேறு ஆபத்துகளை சுட்டிக்காட்டி 9 பஞ்சாயத்துகளும் மக்களோடு நின்றது வீரம்செரிந்த .நீண்ட நெடிய போராட்டத்தை முன்னெடுத்துச்சென்றன. அகோரமான வியாபாரவெரியோடும் அசுர பலத்தோடும் வந்திறங்கிய கொக்ககோலாவின் பாட்டில் கம்பனியை பாலக்காட்டின் பெருமாட்டி பஞ்சாயத்து தன் ஒற்றைவிரலைக்காட்டி எச்சரித்து திருப்பி அனுப்பியது. மற்ற மாநிலங்களில் பல்வேறு போராட்டங்களில் பல்வேறு ஊராட்சிகள் தனது அதிகாரத்தின் மூலம் கார்பரேட்டுகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்துவருகிறது
இந்த இடங்களில் ’’டுவெண்டி ட்வெண்டீ’’க்கள் இருந்திருந்தால்....
அவ்வளவு ஏன்..... சமீபத்தில் வந்த தகவல்
இதே கீழக்கம்பலம் பஞ்சாயத்து இதே அன்னா கம்பனி தனது கிராமத்தில் நீராதாரங்களை பாழ்படுத்துகிறது என்ற காரணத்துக்காக லைசென்ஸை மறுத்து 2012 ல் ஒரு  தீர்மானம் போட்டிருக்கிறது . அப்போது அதன் தலைவர் காங்கிரஸ்கட்சியைசார்ந்த பேபி

இனி யார் அந்தக்கம்பனியை எதிர்க்கமுடியும் ?

இனி யார் உரிமம் இல்லையென்று  மறுப்பது?

கிராமசபையே கம்பனியின் கெஸ்ட் ஹவுசில்தான் நடக்கும் .

அந்நிய கம்பனிகளின்  கூட்டாளிகளாக இருக்கும்  பெருமுதலாலிகளின் 
கல்லாப்பெட்டிகளில்தான் இந்த  அரசு கிடக்கிறது,இந்த அரசு  அவர்களின் கண்ணசைவுகளுக்காகவே நடனமாடுகிறது.அந்த நடனம் சகிக்கவில்லையென்றால் அது வேறு நடனதாரர்களை அமர்த்திக்கொள்ளும்  என்பதை பலமுறை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறோம் இது மேலிருந்து ஆளுவது    

கீழிருந்து  நேரடியாகவே மக்களை ஆளும் வாய்ப்பை இப்படி கம்பனிகளுக்கு வழங்குவதும் அதை கொண்டாடுவதும் ஜனநாயகவிரோதமானது மட்டுமல்ல ஒரு ஆபத்தான தொடக்கமும்கூட  

Comments

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் மொழியோ    உணர்வுமொழியோ   அவருக்கு     கைகூடி வந்ததாக தெரியவில்லை , பாவம் அவர் என்ன செய்வார்...மேலும் அவருக்குமு

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள் ’ என்று இருவரையும் வேறு வேறாக்கும் பக்க சார்பான ஆய்வாளர்களின் வீச்செழுத்து எங்கும் மலினமாக காணக்கிடைக்கிறது  . ந

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி சுமந்துவரும் இசை குறிப்புகள் - நன்றி ராஜா ராமசாமி

   வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த , அந்த வனமும்   நீண்டு நெடிந்து பரந்திருந்தது .  விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது . ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த     வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் , ‘ காடுகொன்று நடாக்கிய ’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது . மலைகளை ஒட்டியிருந்த     சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள      மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது . வந்தேறிகள்     அத்தோடு நிற்கவுமில்லை . குன்றுகளில் புகலிடம்தேடி       இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது   மலைத்தாரம்   ( புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை     தொடர்ந்து நிகழ்த்தியது . அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே     இலக்கியங்கள் பாடின . இவ்வழியாகவே மேற்குத்தொடர்சி மலையின் மலைத்தாரங்கள்   அகஸ்ட்டஸ்சீசர் காலத்திய உரோமாபுரிக