சரைப்பதுதான் உனக்குத்தொழில்.
என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘ ‘கவிதை
எனக்கு மயிறு’ என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.
கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில் அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில்
மருந்தாளுனராக இருந்த ஆதி மருத்துவர்கள்தான்
படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு‘சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள்.
இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட கூட்டுச்சதியின் வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள் ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது.
இதன் வாசிப்பு பல புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது
மட்டுமல்லாமல் சிறு வயதின் பல நினைவுகளை தொடர்பெடுத்து தொடர்பெடுத்து மனதை கணக்கவைக்கிறது
அம்பட்டர்கள் நாவிதர்கள்
மருத்துவர்கள் இவர்களெல்லாம் யார்?
‘அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள் மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள் காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள்’
என்று இருவரையும் வேறு வேறாக்கும் பக்க சார்பான ஆய்வாளர்களின் வீச்செழுத்து எங்கும்
மலினமாக காணக்கிடைக்கிறது .நமக்கு
மழிப்பவன் மழிப்பவன்தான் அவனுக்கு இசையும்
மருத்துவமும் தெரிந்திருக்கக்கூடாது’ என்ற சாதிய மனநிலையில் இருந்து
எழும் இது போன்ற கருதுகோள்களை நாம் ஒரு தெளிவுக்கு பின் புறந்தள்ளிவிடமுடியும். .
அம்பட்டர்களையும் நாவிதர்களையும் வேறு வேறாக பிரித்துப்பார்ப்பதே அபத்தமானது பல்வேறுபகுதிகளில் அம்பட்டன் என்ற பெயர் இன்றும் கூட நாவிதர்களுக்கு வழங்கி வருகிறது அவர்கள் சில நுட்பமான மருத்துவ முறைகளையும்கூட கடைபிடிக்கிறார்கள் சடங்குகளில் முன்னனியில் நின்று சில பாடல்களையும்கூட இசைக்கிறார்கள் எனவே அம்பட்டர்களும் நவிதர்களும் வேறு வேறு அல்ல என்பதை இன்னொருசாரார் வலுவாக நிறுவுகிறார்கள்
சில அறிஞர்கள் இன்னும் ஒருபடி மேலாகப்போய், சைவர்களால் வீழ்த்தப்பட்ட
சமணர்கள்தன் அம்பட்டர்கள். அம்பட்டர்கள், நாவிதர்கள் மருத்துவர்கள். இன்னும்கூட வெவ்வேறு
பெயர்களால் சுட்டப்படுகிற இவர்கலெல்லாமே சமண
சமூகத்துக்குள் இருந்த சில அனுபவம்தோய்ந்த பிரிவினரைக் குறிப்பனவையே என்று கொண்டாடுகிறார்கள். இதற்கான சாட்சியங்கள் அவ்வளவு வலுவானதாக இருக்கிறதா
என்று தெரியவில்லை.ஆனால் அன்றைய கட்டத்தில்
உடற்கூறு அறிதலிலும் அறுவை மருத்துவத்திலும்
சமணர்களே முன்னோடிகளாக இருந்திருப்பதும்,
சொந்தமாய் கடவுள்கள் ஏதுமற்ற ஒரு சமூகமாய்
நாவிதர்கள் இன்றைக்கும் இருந்துவருவதும். மருத்துவர்கள் என்று இன்றும் இன்னொரு பெயர் நாவிதர்களுக்கு வழங்கிவருவதும் சமணர் நாவிதர்
கருத்துக்கு ஒரு கூடுதலான அழுத்தத்தை சேர்த்து நிற்க்கிறது
இரண்டாம் குலோத்துங்க சோழன் கொங்குப்பகுதியை தனது கொடையின் கீழ்
வைத்திருந்த 11 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாகச்சொல்லப்படும் ஒரு சம்பவம் இன்னும் சுவராசியம் கூட்டுகிறது
ஒரு பெருமழைக்காலம்நீண்டு தொடருகிறது காவிரி கரிகாலன் கட்டிவைத்த
மதிற்கரையை உடைத்துக்கொண்டு அங்கிங்கெணாதபடி எங்கும் பாய்கிறாள் கட்டுக்கடங்காத அவள்
கோபம் சோழனுக்கு அச்சத்தை கூட்டுகிறது பல யாகங்களை செய்து பார்க்கிறான் ஆனால் அவள்
அதற்கெல்லாம் மசிவதுமாதிரி தெரியவில்லை. அப்போது ஒரு அறிவிப்பு வருகிறது காவிரியை எவராவது அடக்கிக்கட்டினாள் அவர்களுக்கு
இந்த ஆட்சியின் எதிர்பாராத வெகுமதி காத்திருக்கிறது முயற்சியுங்கள் கம்பனும் கம்பனது சீடர்களும் முயற்சிக்கிறார்கள்
கன்னி அழிந்தனள் கங்கை திரும்பினாள்
பொன்னி கரை கடந்து போயினாள் என்று இன்னீர்
உரைகடக்க லாமோ உலகுடைய தாயே
கரைகிடக்கல் ஆகாது காண்
என்று கரையை நோக்கி இறைஞ்சுகிறார்கள்
காவிரி பாடலுக்கு பணிகிறாள். அலைகளை தனது எல்லைக்குள் இழுத்துக்கொண்டு
எப்போதும் போலவே சலனமில்லாமல் ஓடத்தொடங்குகிறாள் சோழனுக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.
தனது குடிகள் செலுத்தும் ஒரு கழஞ்சு திருமணவரியை
கம்பனுக்கு செலுத்துமாறு கட்டளையிடுகிறான் கம்பன் அதை தன்னிடமிருந்த சீடர்களான மங்கலர்களுக்கு
கொடுத்துவிட அரசனை கோருகிறான் அது அவ்வாறே கொடுக்கப்படுகிறது
வெறுமனே அந்தப்பரிசை பெற கம்பனோ கம்பனின் சீடர்கள் விரும்பவில்லை அதற்க்கு ஈடாக
இன்னும் ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்புகிறார்கள். திருமண வரியை பெறுவதால் அங்கு
பாட ஒரு வாழ்த்துப்பாடலை கொடுக்க விரும்புகிறார்கள் எழுதியும் கொடுக்கிறார்கள்.அதை
அப்படியே பாட வேண்டுமே.. அதற்கு மங்கலர்களே
நேரடியாக குடிகளின் திருமணத்தில் போய் பாடத்தொடங்குகிறார்கள்
மங்கலவாழ்த்து என்றே அது இன்றும் புழக்கத்தில் இருக்கிறது.
அதுமட்டுமல்லாது திருமணத்தில் பெரும்பாலான சடங்குகளை சீடர்கள்
மங்கலர்களே முன்னின்று நடத்தத்தொடங்குகிறார்கள்.. முக்கியமாக இணைச்ச்சீர். இணைச்சீரின்போது
மணமக்களுக்கு முன்னால் தட்டுவைக்கப்படுகிறது தட்டில் படி அரிசி குமிக்கப்படுகிறது அந்த
அரிசித்தட்டுக்கு எதிர்திசையில் மணமகளின் சகோதரன் அமர்ந்திருக்கிறான் மூன்று பேரும்
அந்த அரிசியின் மேல் கைவைக்கிறார்கள் பெரியவர் ஒருவர் அந்த அரிசியை அள்ளி வெற்றிலையில் வைத்து மங்கலன் கையில் கொடுக்க மங்கலன் வாழ்த்துப்பாடிய படியே அதை அட்சதை போல்
தட்டில் தூவிவிடுகிறார் இது இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான்
இருக்கிறது
அந்த மங்கலவாழ்த்தில் ‘’என் குரு கம்பர் இணையடி வாழ்க’’
என்று ஒரு வாசகம் வருகிறது. அப்படியென்றால் அதை கம்பரே பாடியிருக்க எந்த வாய்ப்புமில்லை.
அது கம்பரை எந்நேரமும் சுற்றியிருந்த மங்கலர்களால்தான் எழுதப்பட்டிருக்கவேண்டும் அவர்களால்தான்
அது முதன் முதலாகக்கூட பாடப்பட்டிருக்கவேண்டும் அப்படியானால் அந்த மங்களர்கள் யார்? அவர்கள் என்ன ஆனார்கள். இந்த கேள்விகளுக்க்கான விடை
மிக எளிதாக கிடைத்துவிடுகிறது
அந்த மங்கலர்கள் வேறு யாருமில்லை.
இப்போதும் வேளாளர்களின் திருமணச்சடங்கின் போது சீர்களை முன்னின்று
நடத்தும் நாவிதர்களை மங்கலன் என்றுதான் அழைக்கிறார்கள் ‘மங்கலன் முகம் துடைக்கும் சடங்கு’
என்றுகூட ஒன்று நடக்கிறது அதில் மணமகனை முக்காலியில்
அமரவைத்து நாவிதர்தான் முகம் மழித்து விடுகிறார்
தெலுங்கில் நாவிதர்களை மங்கலவாடு என்றே இன்றும் அழைக்கிறார்கள்
தெலுங்கில் நாவிதர்களை மங்கலவாடு என்றே இன்றும் அழைக்கிறார்கள்
இவையெல்லாம்... நாவிதர்கள்தான் மங்கலர்கள் என்பதற்கும் அவர்கள் இசைவாணர்கள் என்பதற்க்கும்
சாட்சியாக வந்து நிற்க்கிறது.
'மங்கலன் என்பது மரபு மட்டுமே மங்கலவாழ்த்தை எழுதியது ஒச்சர் என்னும் புலவர்கள் மரபினர் என்றும் சிலர் வாதிடுகிறார்கள். மங்கலர்கள் யார்? அவர்கள் இசைவாணர்களா இல்லையா என்பது நமது கேள்விகளாக இருக்கும்போது ஒச்சர் விவாதத்துக்குள் நாம் அவ்வளவுதூரம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்..மேலும் மங்கலர்கள் என்ற மரபின் பூர்வீகம் பற்றியும் அவர்கள் வேளாளர் மணச்சடங்கில் பெற்ற முக்கியத்துவம் குறித்தும் மேற்சொன்ன மேற்கோள் மெளனமே சாதிக்கிறது
ஒரு கட்டத்தில் தமிழகத்தில் கொங்கு நாவிதர்கள் வேட்டுவ நாவிதர்கள் பாண்டிய நாவிதர்கள் என்று மூன்று பிரிவுகளாக அவர்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் அவ்வாறு ஆக்கப்பட்டதும் பாண்டியப்பிரிவு மற்றையதைவிடவும் தாழ்ந்ததாகவே கருதப்படுவதும். இன்னுமொரு சுவராசியமான ஆய்வின் தொடக்கப்புள்ளியாகக்கூட அமையக்கூடும்
கி பி 1067 ஆம் ஆண்டைச்சேர்ந்த வீரராசேந்திரனால் அமைக்கபட்ட திருமுக்கூடல் கல்வெட்டு ஒரு கோவிலால் நடத்தப்பட்ட ஆதுலர்சாலை குறித்து பேசுகிறது அது அந்த மருத்துவமனையில் பணியாற்றியவர்களையும் அவர்களுக்கு செய்யப்பட்ட செலவுப்பட்டியலையும் குறிப்பிடுகிறது. அதில் . சிறு சிறு அறுவை சிகிச்சைகளை செய்வத்ற்க்கு நாவிதர் ஒருவர் நியமிக்கப்பட்டதையும், அவருக்கு 15 கல நெல் வழங்கப்பட்டத்தையும் பேசுகிறது. .
திருமலை நாயக்கன் அரண்மணையில் கொமார முதலி கெட்டி முதலி என்ற இரண்டடு எடுபுடிகள் இருந்திருக்கிறார்கள் தான் செய்த பிழைக்கு அஞ்சி மன்னனிடமிருந்து தப்பிப்பிழைத்து கொங்குப்பகுதியில் தஞ்சமடைகிறார்கள். வந்த இடத்தில் அவர்களை பாம்பு கடிக்க அதை முறிக்கும் மருந்து தந்து அவர்களுக்கு மருத்துவமும் கற்றுத்தந்த நாவிதர் ஒருவர் குறித்தும்,கெட்டி முதலி பிற்காலத்தில் நாவிதர் கற்றுத்தந்த மருத்துவத்தின் உதவியால் அறியணையில் ஏறுவதையும் ஒரு வாய்வழி வரலாறு பேசுகிறது..
மற்ற நிலப்பகுதிகளிலும் இது
போன்ற கருதுகோள்கள் இருக்கக்கூடும்
நந்தர்கள் என்ற ஒரு வம்சம் வட இந்தியாவில் அதிகாரத்திலிருந்த காலம் ஒன்று இருந்திருக்கிறது
அவர்கள் நாவிதர்பின்னணியில் வந்தவர்கள் என்று கருதப்படுகிறது. அதே போல் சந்திரகுப்த மெளரியரின் பாட்டனார்கூட ஒரு நவிதர்
என்றுதான் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் அதை அவர்கள் மெய்ப்பிக்கவும்கூடும்
இரண்டாம் நூற்றாண்டில் நடந்த இன்னொரு சம்பவம் இதற்க்கு இன்னும் கூடுதல் வலுவை ஊட்டுகிறது
அந்த கந்தபுரத்து மன்னனின் மகள் ஒருவளுக்கு பிரசவ வலி நீண்டுகொண்டே இருந்தது. வலியில் துடித்த அவள் மயக்கநிலைக்கு போய்க்கொண்டிருந்தாள். பல்வேறு மருத்துவச்சிகள் மருத்துவம் பார்த்தும் முடியாமல் போகவே குழந்தையை கொன்று எடுத்து மகளை பிழைக்கவைக்கலாம் என்று அரண்மனை வைத்தியர்கள் ஆலோசனை சொல்கிறார்கள் ஆனால் .அரசனுக்கு குழந்தையைக்கொன்று எடுக்க மனமில்லை
இரண்டாம் நூற்றாண்டில் நடந்த இன்னொரு சம்பவம் இதற்க்கு இன்னும் கூடுதல் வலுவை ஊட்டுகிறது
கிபி 143 - 400 வரை கொங்குநாட்டை ஒன்பது மன்னர்கள் கந்தபுரத்தில் இருந்து ஆண்டு வந்தனர். கொங்கு 24 நாடுகளில் ஒடுவாங்க நாடும் ஒன்று.
பவானிசாகர் பகுதியான ஒடுவாங்கநாட்டின் தலைநகரம் கந்தபுரம்
அந்த கந்தபுரத்து மன்னனின் மகள் ஒருவளுக்கு பிரசவ வலி நீண்டுகொண்டே இருந்தது. வலியில் துடித்த அவள் மயக்கநிலைக்கு போய்க்கொண்டிருந்தாள். பல்வேறு மருத்துவச்சிகள் மருத்துவம் பார்த்தும் முடியாமல் போகவே குழந்தையை கொன்று எடுத்து மகளை பிழைக்கவைக்கலாம் என்று அரண்மனை வைத்தியர்கள் ஆலோசனை சொல்கிறார்கள் ஆனால் .அரசனுக்கு குழந்தையைக்கொன்று எடுக்க மனமில்லை
ஒடுவாங்க நாட்டின் கட்டுக்குள் இருந்த ஓரு சின்ன கிராமம் நறையூர் அங்கே மங்கலை ஒருவள் இருந்தாள். பிரசவ மருத்துவத்தில் கைதேர்ந்தவள். எப்போதோ இதைக் கேள்விப்பட்டிருந்த மன்னன் நறையூருக்கு அரண்மனை ஆட்களை அனுப்பிவைத்து மங்கலத்தியை சகலமரியாதையோடும் அழைத்து வருகிறான்
மங்கலத்தி வந்து ஆகவேண்டிய அனைத்தையும் செய்து அரசமகளின் வயிற்றைக்கிழிக்கிறாள் குழந்தையை உயிரோடு எடுத்துக்குளிப்பாட்டி மன்னனிடம் கொடுக்கிறாள். பின்னர் கிழித்த இடத்தை தையலிட்டு அந்தப்புண் ஆறும் வரை கூடவே இருந்து மருத்துவவிடை செய்கிறாள். அகமகிழ்ந்த கந்தபுரத்து அரசன் அவன் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு ஊருக்கு மங்கலைப்பட்டி என்று பெயரைச்சூட்டுகிறான். பெயர்சூட்டியதோடு நிற்க்காமல் இறுதியில் அந்த ஊரை அவளுக்கே இறையிலி நிலமாகக்கொடுத்துவிடுகிறான்.மங்கலைபட்டி என்ற ஊர்கள் இன்றும் இருப்பது செய்தியின் உண்மைத்தன்மைக்கு உயிரூட்டுகிறது
இப்படியாக.......நீண்டு தொங்கும் கூந்தலை பெரிய பாறையில் விரித்துப்போட்டு கற்காளால் கொட்டியும் வெட்டுகற்களால் திருத்தியும் அலைந்து கொண்டிருந்த கூட்டு சமூக காலத்துக்கும் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்
சாய்வுக்கட்டிலில் அமர்ந்துகொண்டு ஹேர் கலரிங் செய்யும் உலகமயமாகிவிட்ட இந்த காலத்துக்கும்
இடையில் ஒரு சமூகம் சந்தித்திருக்கிற இடப்பெயர்சியும் நிலைப்பெயர்சியும் வலி மிகுந்த மீட்டுருவாக்கமாகவே இருக்கக்கூடும்
படம் 1 கற்கால சவரக்கற்க்கள் படம் 2 உலோக
கால சவரக்கத்திகள்
முற்கால எகிப்தில் முடி என்பது கெட்ட ஆவிகள் வசிக்கும் இடமாகவே கருதப்பட்டது . கெட்ட ஆவிகள் தங்குவதை தடுக்கவே முடிகள் மழிக்கப்பட்டது. தங்கியிருக்கும் ஆவிகளை விரட்டும் ப பூசாரிகளிடமும் புத்திஜீவிகளிடம் விடப்பட்டது. மழித்தலை மேற்கொண்ட பூசாரிகளுக்கு சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்த்து வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கான சிறிய சிலையொன்று தற்போது கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. பேய் பிடித்தவன் முடியை பிடுங்கி ஒரு ஆணியோடு கட்டி மரத்தில் அடிக்கும் பழக்கம் நம்மிடையே இருப்பதை இத்தோடு பொருத்திப்பார்க்கலாம். சில பகுதிகளில் நாவிதர்கள் இப்பணியின்போது கூட இருப்பதாக சொல்லப்படுகிறது
கி பி 400 ல் ரோமர்களை அதிர்வுக்குள்ளாக்கிய அய்யோப்பிய பழங்குடிகளான விசிகோத்கள் மற்றும் பிராங்குகளை ரோமர்கள் காட்டுமிராண்டிகள்(barbarians) என்றுதான் அழைத்தார்கள். பார்பரா என்ற லத்தின் சொல்லுக்கு தாடி என்று பெயர். தாடிகளுக்கு பெயர்பெற்ற இப்பழங்குடிகள் நமது களப்பிரர் காலம்போல் ஏறி அடித்துவிளையாடி பின் அடையாளமற்றுப்போனார்கள். ரோமாபுரி அதற்க்குபிறகு பல ஆட்சி மாற்றங்களையும் பல நூற்றாண்டுகளையும் கடக்கிறது. பார்பேரியன் என்று அழைக்கப்பட்ட அந்தப் பழங்குடிகள் விளிம்புநிலைக்கு இப்போது தள்ளப்பட்டிருந்தனர். இந்த காலகட்டத்தில் ஆட்சிக்கட்டிலில் இருந்தவர்களிடமிருந்து ஒரு அறிவிப்பு வருகிறது. அந்த அறிவிப்பு எல்லா அறுவை சிகிச்சைகளையும் மதகுருக்களிடன் விடுவதற்கானது. அறுவை சிகிச்சைகளுக்கு உதவவும் சில பாரம்பரிய மருத்து நுட்பங்களை பெறுவதற்க்கும் சிகை அலங்காரங்களில் அசத்துபவாராகவும் குறிப்பிட்ட மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவ்ர்களாகவும் இருந்த பழங்குடிகளை துணைக்கழைக்கிறார் மதகுரு. ஏற்கனவே ஆழமான அறிவுபெற்றிருந்த பழங்குடிகள் ஒருகட்டத்தில் மதகுருருக்களை தாண்டி வந்துவிடுகிறார்கள்
கி பி 400 ல் ரோமர்களை அதிர்வுக்குள்ளாக்கிய அய்யோப்பிய பழங்குடிகளான விசிகோத்கள் மற்றும் பிராங்குகளை ரோமர்கள் காட்டுமிராண்டிகள்(barbarians) என்றுதான் அழைத்தார்கள். பார்பரா என்ற லத்தின் சொல்லுக்கு தாடி என்று பெயர். தாடிகளுக்கு பெயர்பெற்ற இப்பழங்குடிகள் நமது களப்பிரர் காலம்போல் ஏறி அடித்துவிளையாடி பின் அடையாளமற்றுப்போனார்கள். ரோமாபுரி அதற்க்குபிறகு பல ஆட்சி மாற்றங்களையும் பல நூற்றாண்டுகளையும் கடக்கிறது. பார்பேரியன் என்று அழைக்கப்பட்ட அந்தப் பழங்குடிகள் விளிம்புநிலைக்கு இப்போது தள்ளப்பட்டிருந்தனர். இந்த காலகட்டத்தில் ஆட்சிக்கட்டிலில் இருந்தவர்களிடமிருந்து ஒரு அறிவிப்பு வருகிறது. அந்த அறிவிப்பு எல்லா அறுவை சிகிச்சைகளையும் மதகுருக்களிடன் விடுவதற்கானது. அறுவை சிகிச்சைகளுக்கு உதவவும் சில பாரம்பரிய மருத்து நுட்பங்களை பெறுவதற்க்கும் சிகை அலங்காரங்களில் அசத்துபவாராகவும் குறிப்பிட்ட மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவ்ர்களாகவும் இருந்த பழங்குடிகளை துணைக்கழைக்கிறார் மதகுரு. ஏற்கனவே ஆழமான அறிவுபெற்றிருந்த பழங்குடிகள் ஒருகட்டத்தில் மதகுருருக்களை தாண்டி வந்துவிடுகிறார்கள்
ஒட்டுமொத்தமாக இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரு பின்னணியில் வைத்துக்கொண்டுதான் இந்ததொகுதிக்குள் நுழையவேண்டும் என்ற அவசியம் இல்லை. கவிதை மயிறுகளுக்குள் நுழைந்தும்கூட மேற்சொன்ன முடிவுகளுக்கு நாம் வந்து நிற்க்கமுடியும்
* * *
எல்லா ஊர்களிலும் இருப்பதுபோலவே எங்கள் ஊரிலும் ஒரு ராயன் இருந்தார்
.ராயனுக்கு எங்கள் குடும்பத்தோடு ஒரு நெருக்கம் உண்டு .ராயனின் தந்தை செங்கன் எனது
தாத்தா சமையதாரருக்கு சேவைக்கூத்தில் கூடவே இருந்தவர். தாத்தாவின் அலங்காரம் முழுக்க
செங்கன்னின் கைவண்ணம்தான் இருக்குமாம். . கருப்பையில் நான் இருந்தபோது என்னோடு இன்னொருவரும்
இருப்பதை முன்கூட்டியே அறிந்து இரட்டை என்று சொன்னவர் செங்கனின் மனைவி கன்னி என்று
அம்மா சொல்லக்கேட்டிருக்கிறேன்..
ஆடு அறுப்பதை அவர்கள் குடும்பம்
ஒரு கலையாகவே வைத்திருந்தது ஆட்டை மல்லாக்கப்பரத்தி
பென்சிலால் கோடுபோட்டதுபோல் அவர் தோலை உரிக்கும்
நேர்த்தியும் அதை உதறி உப்புத்தடவி தொங்கப்போடும் லாவகமும் குடலைக்கழுவி குண்டாமணியை
உருவி, ஈரலை அறுத்து உள்ளிருக்கும் ஒவ்வொரு உறுப்பையும் சேதாரமில்லாமல் தனித்தனியாக பிரித்தெடுத்துக்கூறுவைக்கும்
அழகும் அவர்களின் நனவிலிக்குள் தேங்கிக்கிடக்கும் தேங்கிக்கிடக்கும் ஆதி மருத்துவரை அப்படியே நகலெடுத்துக்காட்டும். அந்த கர்வம் மிகுந்த கம்பீரத்தை தேர்ந்த அறுவை சிக்கிச்சைக்கூடங்களில்தான்
காணமுடியும்.அதனால்தான் எல்லா கிடாவெட்டும் அவரில்லாமல் எபோதும் நிகழ்ந்ததில்லை அவர்மட்டுமல்லாமல்
அவர் உறவினர்கள் பலரும் அருகில் உள்ள சிறு நகரங்களில் இப்போதுகூட கரிவெட்டும் தொழிலில் சிறப்புவாய்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
வருடமெல்லாம் மழிப்பதற்கு தைமாத அறுவடை காலங்களில் ஒரே
ஒருமுறைதான் தவசம் கிடைக்கும். .அப்படி கிடைக்கும் தவசத்துக்காக தகரப்பெட்டியோடு வீடு
வீடாக அலைந்த ராயனின் இறுதிக்காலம் கண்முன்னே
விரிவதை எதுகொண்டும் தடுத்துவிடமுடியவில்லை. காமாலையால் பாதிக்கப்பட்டு உடல் நொடித்துக்கிடந்த
அந்த நேரத்தில்கூட கட்டாயத்தின் பேரில் சடங்குகளுக்கு வந்து மயங்கி விழுந்த கருப்படித்த அந்த சாதிய இரவு அவ்வளவு
சீக்கிரமாய் அகல்வதாக இல்லை.
ராயன் இறப்புக்கு பிறகு கந்தலான தனது சேலையின் முந்தானையை அவிழ்த்து குடியானவர்களின் வீட்டின் பின்வழியாக வந்து எட்டிநின்று படியளக்கும் தவச சோளத்தை கோரி மனைவி ரங்கம்மாள் சாமீ என்று இழுக்கும் ஈனக்குரல் செவிப்பரைக்குள்ளேயே சுழன்றடிக்கிறது
தீபாவளி அதிகாலைகளில் கசங்கிய கண்களோடு ஊர்பெருசுகளின் தலைக்கு எண்ணெய் தேய்க்க போகும் ராயனின் மகன் கருப்பனும் அவனுக்கென்று பள்ளியில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த
மதிய உணவுத்தட்டும், அப்பனுக்குப்பிறகு ஊருக்காகாக சரைக்க ஏற்பட்ட நிர்பந்தத்தில் ஏழாவது வகுப்போடு படிப்பை விட்டுவிட்டு உறவினர்
ஒருவரிடத்தில் நாவிதம் படிக்கப்போனதும், மேலெழும்பி வருகிறது
படிக்கும் போது பக்கத்து பெஞ்சில் இருந்த சாமியப்பன் நாசுவத்தாயோலி என்று வைததால் நட்பை அறுத்துகொண்டவன் கருப்பன் ‘தொழில் பழகி’ வந்த பின்பு ஊர் வழக்கத்தின் பேரில் அவனுக்கு முடிவெட்டிவிட நேர்ந்தபோது காட்டிய கரடுமுரடான வேகத்தின் பின்னால் இருந்த வலியும் கோபமும் இப்போதுதான் புரியத்தொடங்குகிறது.
இன்னும் இதன் வாசிப்பு பல நினைவுகளை தொடர்புபடுத்தி மனதை கணக்கவைக்கிறது
உணர்சிவயப்பட்ட நிலை ராயனுக்கும் ராயனின் அம்மா கன்னிக்கும் அவரது மனைவி ரங்கம்மாளுக்கும் அஞ்சலி
செலுத்த கூப்பிய கரங்களோடு அடிக்கடி புதைகுழியை தேடிபோகவைத்துவிடுகிறது
நீண்ட காலத்துக்குப்பிறகு
ஒரு கவிதை நூல் பரவலாக அறியப்பட்டிருப்பதும் குறுகிய காலத்தில் பல பதிப்புகளை
கண்டிருப்பதும் மற்ற மொழிகளில் பெயர்க்கப்பட்டிருப்பதும் கவிதைக்கான வடிவத்தில் அதன் புழங்கு மொழியில் நிராகரிக்கப்பட்டிருந்த ஒரு வெளியை தேவை நிறைந்ததாக உணர்த்துகிறது. நாம் இயல்பற்று கொண்டிருந்த சில
நிலைகளின்மேல் ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
என்று சொன்னால் அது மிகையில்லையென்றே தோன்றுகிறது..
குறிப்புதவி நூல்கள்
1 ஆதி மருத்துவர் சவரத்தொழிலாளர்
ஆக்கப்பட்ட வரலாறு - கோ ரகுபதி 2 கொங்கு வேளாளர் சீர்களும் இலக்கியங்களும் - செ ராசு
விலை ரூ 75
அறம் வெளியீடு
அறம் வெளியீடு
9487568122







வரலாற்றுப் பின்னனிதகவல்களுடன் மிக அருமையான விமர்சனம் இலட்சு. அடிகடி நிறைய எழுதவேண்டும் நீங்கள்..!
ReplyDelete-பொள்ளாச்சி அபி -
மிக்க நன்றி அக்பர்
ReplyDeleteஉங்கள் வார்த்தை பலிக்கட்டும்
Sir, இந்த Book கடையில கிடைக்கல
Deleteமிக்க நன்றி என்னுடைய வரலாறு புதைந்து என்று நினைத்தேன் மீண்டும் எழுச்சி கொள்ளுவேன் எனது சமுதாயத்தை காக்க நன்றி ஜயா 9585486048
ReplyDeleteஇங்க ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட மருத்துவ இனம், சவரம், முடி திருத்தம் செய்யும் பழக்கமே இல்லாத தமிழர்கள் வரலாற்றில் பல சதி வேலைகளால் இங்கிலிஹ் மெடிசன் கொண்டுவருவதர்க்காக உலகிலே கத்தி வைத்து முதன் முதலாக அறுவை சிகிச்சை செய்தவர்கள், நம் முன்னோர்கள் சுக பிரசவம் சுலபமாக பெற்றேடுக்கவும் தமிழ் மருத்துவர்கள் இருந்துள்ளனர் இப்படி ஒரு இனத்தை ஆங்கிலேயர்கள் கட்டாய முடி திருத்தும் தொழிலில் ஈடுபட வைத்துள்ளனர், நம் நாட்டை சுரண்டியதை விட முதல் தாக்குதல் மருத்துவ குலத்தை திட்டம் போட்டு ஒழித்துள்ளனர், இப்போது பார்ப்பனர்களை ஒழித்தால் இந்துக்களை அழித்து அறிவியல் மிக்க இந்து கோவிலை கைப்பற்ற தான், அதனால் தான் வேகமாக மதம் மாற்றம் நடக்கிறது, உலகில் எங்கும் இல்லாத மூலிகை சிலை தமிழ் மண்ணில் தான் இருக்கிறது, தயவு செய்து ஊடகங்கள் உதவி புரிய வேண்டும்
DeleteSuper
ReplyDeleteKhelraja offers a reliable platform for real money sports betting in india, combining security with smooth performance. Users can enjoy sports action with fast deposits, quick withdrawals, and clear gameplay rules. Designed for Indian players, Khelraja emphasizes trust, transparency, and responsible entertainment
ReplyDelete