Skip to main content

Posts

Showing posts from May, 2016

யார்ரா அந்தக் கபாலி..... ஹஹஹ வந்துட்டானில்ல

                                                                                                                  கபாலி பார்ட் 1  வடகலையென்றும் தென்கலையென்றும் வைணவத்தில் இரண்டுபிரிவுகள் இருந்ததைப்போலவே சைவத்திற்குள் 1 வார்மம், 2 பாசுபதம், 3 காளாமுகம், 4 பைரவம் 5 மாவிரதம், 6 கபாலிகம், என ஆறு உட்பிரிவுகள் இருந்தது ஆறு பிரிவுகளில் கபாலிகம், காளமுகம் முக்கியமானபிரிவுகள் , இந்த இரண்டு பிரிவுகளுக்குள் நடந்த சண்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது அது இயல்பான வழிபாட்டுமுறைக்கும் சமஸ்கிருத வழிபாட்டுமுறைக்கும் இடையே நடந்த மோதல் இன்னும் எளிமையாகச்சொன்னால் தலக்கறி சாப்பிடுபவர்களுக்கு தயிர்வடை சாப்பிடுபவர்களுக்கும் இடையே நடந்த சண்டை ஒரு கட்டத்தில் காளமுகம் அல்ட்ரா பில்டப்புகள் செய்து கபாலீகத்தை லபக்கென்று விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது ஆனால் காளமுகத்தால் செரித்துக்கொள்ளமுடியாத ஒரு பிரிவினர் தனித்தே வாழ்ந்தனர். **************** ’         கபாலி பார்ட் 2 கபாலிகள்.. எளிய.மக்கள் .. ஒதுக்கப்பட்டவர்கள் அவர்களின் உறைவிடம் மயானக்காடு. அவர்கள் தானம