Skip to main content

வெறும்வில் சுயம்வரங்கள்


மீபத்தில் கொங்குவேளாளக்கவுண்டர்கள் அமைப்பு நடத்திய சுயம்வரம் ஒன்றில் ஆண்கள்மட்டுமே கலந்துகொண்டதாகவும் பெண்கள் யாரும் வரவில்லையென்றும் ஒரு தகவலை சீனி வாசன்அனுப்பியிருந்தார்

அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அப்படி நடப்பதற்கு சாத்தியங்கள் இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயமாக 200 சதவீத சாத்தியங்கள் இருப்பதாகவே கருதுகிறேன்
எனக்கு தெரிந்த பெண் ஒருவர்
'இம் என்றால் இன்னோவாவும், ஏன் என்றால் எர்டிக்காவும் வந்துநிற்க்கும் செல்வச்செழிப்புள்ள மாப்பிள்ளையை வேண்டமென்று மறுத்துவிட்டார் ஊரே மூக்கின்மேல் விரலைவைத்துப் பார்த்தது
'பொழைக்கத்தெரியாதவளா இருக்காளே, வந்த சீதேவியே வாசப்படியில வெச்சு வெரட்டீட்டாளே என்று அவளை கண்டபடி ஏசவும் செய்தார்கள்'
.
அசந்தர்பமாக அவளை சந்தித்தபோது ஏன் சுமதி இப்படி பண்னீட்டியாமே என்று கேட்டதுதான் தாமதம்
'ஆமா அந்தாளுக்கு வயசு 39, எனக்கு 21 சொந்தம்போகக்கூடாது சொத்துபோககூடாதுன்னு வருத்தப்பட்டவங்க பொன்னு வாழ்க்கை போகுமேன்னு வருத்தபடல, என் வாழ்கைய நான் செலக்ட் பன்னுவேன் அதுல கஞ்சியோ கூலோ குடிச்சாலும் சந்தோசமா இருப்பேன் என்று பொறிந்து தள்ளிவிட்டாள்
இன்னும் பழைய காலம்மாதிரியே நெனச்சுகிட்டிருக்காங்க. நாங்களும் படிக்கறோம் நாலு காசு பாக்கறோம் நாங்க ஹீரோக்கள தேடிகிட்டிருக்கோம் . இவுங்க இன்னும் அரைக்கெழடான நம்பியாரப்போல இருக்கிற நிலப்பிரபுக்களையே கல்யாணம் பன்ணிவெக்கனுமுன்னு ஒத்தைக்காலில் நிக்கிறாங்க' என்று பட்டாசாய் வெடித்தாள்
கட்டறுத்தல் அவர்கள் அடிமனதில் யானையின் வலசைவழிபோல் பதிந்துகிடக்கிறது. மூதைகள் வலசை வழியை அறிந்திருந்தாலும் கட்டுண்டே இருந்தார்கள்.
தாயும் பாட்டியும் தயங்கிய வலசையில் இன்று பேத்திகள் தைரியமாக நடைபோடுகிறார்கள்
1000 ம் ஆண்களுக்கு 924 பெண்கள் இருப்பதாக சொல்லும் புள்ளிவிவரங்கள் பொதுவானது
சாதிவாரியாகக்கணக்கிட்டால் ஆதிக்கசாதிகளில் பெண்கள் சதவீதம் அதிர்சியாகிற அளவுக்கு குறச்சலாகத்தான் இருக்கும்.
ஏன்னா, அப்ப சேந்தா ஆண் பிறக்கும், இப்ப சேந்தா ஆண் பிறக்கும் என்று அறுபதுடன் குறிப்புகளை ஆதிக்கசமூகம்தான் வைத்திருக்கிறது
எங்கூர்ல சிலபேர் இருந்தாங்க 'கட்டுனா கவுண்டச்சியத்தான் கட்டுவேன் இல்லன்னா கல்லவெச்சு கொட்டுவேன்'னு வைராக்யத்தோடு சுத்திகிட்டிருந்தாங்க'
‘வேற கவுண்டச்சிகளக்கூட கட்டமாட்டியா’என்று கேட்டால் நெவர் என்று சிவாஜியைபோல் வீரவசனம் பேசுவார்கள் . கடைசியில் அவங்க தம்பிக்கு 'சந்திரவெள்ளாளர்' கூட்டத்துல் போய் பெண்ணெடுத்தார்கள்
'அட இதிலென்ன இருக்கு அவுங்களும் நாங்களும் ஒன்னுதான் சின்ன சின்ன வித்திவாசந்தான் நாங்கென்ன கரமாத்திகவுண்டர்லயா போய் பொன்னெடுத்தோம்' என்று வியாக்யானம் பேசினார்கள்
கரமாத்திக்கவுண்டரெல்லாம் கீழதான், அவிய வேண்டாம் என்று முரண்டு புடிச்சுகிட்டு மூத்திரச்சந்தில் நின்னவங்க , அலஞ்சு அலஞ்சு பொண்ணு கிடைக்காம அண்ணன் ஒருவனுக்கு கரமாத்திக்கவுண்டர்லயே போய் பொண்ணெடுத்தாங்க
‘என்ன கவுண்டரேன்னு கேட்டதுக்கு 'கரமாத்திங்க எங்க சாதிதாப்பே ,சின்ன சடங்கு கையமாத்தி செஞ்சிட்டாங்க.. அதுல ஆனதுதான் கரமாத்திக்கவுண்டர். மத்தபடிக்கு எல்லா ஒன்னு’ன்னு சொல்லி கெக்கலித்தார்கள்
அப்புறம் இன்னொரு பையன் செட்டியார் பொன்ன போய் கட்டிகிட்டான்
'என்னென்னே கல்யாணம் முடிஞ்சு போச்சுன்னாங்க'
அட செட்டியாரத்தானே கட்டிகிட்டா, பொன்னாம்பையனபோல வேற ‘கீழ் சாதிப்பொண்னையா போய் கட்டிகிட்டு வந்தான் ஆனாலும் வக்காளிகூட பேச்சு வேண்டான்னு வெட்டிவுட்டேன் என்று நிலத்தைபார்த்துப்பேசினார்கள்
இதுகூடப்பரவா இல்ல, சிலபேரு அவர்களுக்குள் இருக்கும் குலமான மலையகூட்டத்துக்கு பொண்ணு கொடுக்கக்கூடாது குண்னம்குத்தீக என்று பிடிவாதம் பிடித்த காலமெல்லாம் உண்
டு
'அந்துவன் கூட்டத்தானுக ,அகலக்கையனுக அவுனுகளுக்கு பொன்னு குடுத்தா, நம்ம புள்ளக நாளைக்கு பிச்சதான் எடுக்கும் தம்பி.... ,வேற ஜாதகம் பாருங்க என்று புறம்தள்ளிய பெரியவர்களைப் பார்த்திருக்கிறேன்.
பெட்ரஸ்மாக் லைட்டேதான்வேணும் என்றநிலையில் இருந்து இறங்கி, ,அப்பனோ அம்மாளோ யாரோ ஒருத்தர் கவுண்டரா இருந்தா போதுமடா என்ற நிலைக்கு வந்து, என்ன எழவு கெரகமோ பொண்ணா இருந்தாப்போதும் கல்யாணத்த பண்னித்தொலை என்ற இடத்துக்கு அரைகுறை மனதோடு வந்து சேர்ந்திருக்கிறார்கள். அதுவும் உழைக்கும்கவுண்டர்கள்தான். உபரிக்கவுண்டர்கள் இன்னும் உப்பரிகையில்தான் இருக்கிறார்கள்
நிலவுடமை வர்க்கமாயிருந்த ஸ்டேடஸ், இப்போ கேபிடல், இம்பீரியல் ஸ்டேடஸ்க்கு போய்ட்டிருக்கு... பொண்ணுக ரொம்ப கூர்மையா எதிர்காலத்த கணிச்சி, தடைய தாண்டிட்டாங்க, பசங்கதான் அம்மா பேசும் அப்பத்தா பேசும்ன்னுட்டு குத்தவெச்சுகிட்டிருக்காங்கா
வேற சாதிக்காரன காதலித்தாள் என்பதற்காக தன் சொந்தப்பெண்னையே தென்னைமரத்துக்கு வெட்டிப்போட்ட சாதிகளையே காலம் இப்ப தென்னைமரம் ஏற வெச்சிருக்கு
காலம் ஈவிரக்கமற்றது அது எதற்க்கும் உச்சுக்கொட்டுவதில்லை
(இது அனைத்து ஆண்ட அண்டர்வார்சாதிகளுக்கும் பொருந்தும் 😜)

Comments

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் மொழியோ    உணர்வுமொழியோ   அவருக்கு     கைகூடி வந்ததாக தெரியவில்லை , பாவம் அவர் என்ன செய்வார்...மேலும் அவருக்குமு

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள் ’ என்று இருவரையும் வேறு வேறாக்கும் பக்க சார்பான ஆய்வாளர்களின் வீச்செழுத்து எங்கும் மலினமாக காணக்கிடைக்கிறது  . ந

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி சுமந்துவரும் இசை குறிப்புகள் - நன்றி ராஜா ராமசாமி

   வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த , அந்த வனமும்   நீண்டு நெடிந்து பரந்திருந்தது .  விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது . ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த     வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் , ‘ காடுகொன்று நடாக்கிய ’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது . மலைகளை ஒட்டியிருந்த     சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள      மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது . வந்தேறிகள்     அத்தோடு நிற்கவுமில்லை . குன்றுகளில் புகலிடம்தேடி       இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது   மலைத்தாரம்   ( புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை     தொடர்ந்து நிகழ்த்தியது . அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே     இலக்கியங்கள் பாடின . இவ்வழியாகவே மேற்குத்தொடர்சி மலையின் மலைத்தாரங்கள்   அகஸ்ட்டஸ்சீசர் காலத்திய உரோமாபுரிக