Skip to main content

சப்பெ கொகாலு - கொகல்காரனோடு ஒரு உரையாடல்



உங்க ஊர், பேரு? 

எத்து பேரு ரெங்கன். ஊரு ஆனைகட்டி. நான் எட்டாவது படித்திருக்கேமு.

உங்கள எல்லாரும் கோகல் ரங்கன்னு சொல்லறாங்களே?

நே, கோகால் நல்லா ஊதுவே. கொகால புடித்தாக்கா ஊதிகிட்டே இருப்பே. அதுனாலதான் சொல்லுகின

எப்படி இதை  கத்துகிட்டீங்க? எப்போயிருந்து கொகால வாசிக்கறீங்க?

ஒரு 15 வயசிலிருந்து ஊதுகே. எத்து அப்பெ ஊதுவா, எங்க தாத்தாவும் ஊதுவா  அவுங்ககூட ஆட்டத்துக்கு போவே.  அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் இதுல நல்ல பேரு.  அவுங்க கொகல் புடித்தாங்கன்னா ஆனேகூட மயங்கி நிக்கூம்பா!

கொகால உடனே பழக முடிகாது....
காத்த இழுத்து உள்ளவெத்து மூச்சே கெட்டி ஊதுகோனு.. கஸ்டமாத்தான் கெடக்கும் கொஞ்சம் ஏமாந்த புல்லு போயி தொண்டக்குழியில  சிக்கிக்கு.

திருளின்னு ஒந்து கெடாக்கு. மொதல்ல அத ஊதி பழகோனும்.  அப்புறம் மங்கேன்னு ஒந்து கெடக்கு. அதையும் ஊதி பழகோனும். இது ரெண்டையும் யாரு ஊதறாங்களோ அவுங்கதா இந்த கொகால ஊத முடிகூ.

எம்த்தாளுகாகிட்ட திருளி, மங்கே, கொகால், மூன்றுவகையா ஊதறது கெடாக்கு.

திருளி,   ஆயகுழல்தான் ஆறு கண்ணு இருக்கு.  அத  புல்லாங்குழல் மாதிரி இச்சா மத்தோரமா வெச்சு  இங்க பாருங்க இப்படி வெத்து வெத்து ஊதறது.  துருளி, மூங்கல்ல செய்யறது.மங்கேங்கறது ஒந்திருக்கு  அது  நேரா வெச்சு ஊதறது இதுலயும் ஆறு கண்ணுதான் இருக்கும் அதுவும் மூங்கல்ல செய்யறதுதான்.
அப்புறம்  கொகாலு... இதுலயும்  ஆறு ஓட்டைகதான் இருக்கும் இதுல புல்லு கோழி ரக்கையெல்லாம் வெச்சு சத்தம் செரி செய்கோனூ.


இந்த கொகால வெலகொடுத்து வாங்கீட்டி வருவீங்களா?

சிரிக்கிறார்....

நேமேதே செஞ்சுக்குவோம் இப்பவும் கொகால் செய்யறதுக்குந்தே ஆளுக இருக்கின

இது நீளமா இருக்கே ஒரே மரத்துல செய்யறதா?

இல்லெ இத தனித்தனியா கழட்டி வெத்துக்கலாம். ஊதாத போது அப்படித்தான் வெத்துக்குவோம். ஊதறபோதும் இதெல்லாம் எடுத்து ஒந்தொந்தா மாட்டிக்குவோம்.

இதோ இப்படி   

தண்டு
தொப்பி
ஆனைக்கல்
கயிறு
கோழி ரெக்கே
புல்
இப்படி பலபாகமா இருக்கும்

இத ஒந்தா சேத்தாதான் கொகாலு.
இது தொப்பின்னு பேரு இத நாகலிங்க மரத்துல செய்வோம்.
கிளியமரத்துலயும் செய்வோம். கிளியமரத்தவெட்டி கத்தியில கொடஞ்சு தண்ணியில ஊறவெச்சு எடுப்போம்.
தண்டையும் ஆனைக்கால்ன்னு சொல்லற இதயும் புழுத மரத்துல செய்துக்குவோம். ஆனைகாலெ கூமலமரத்துலயும்  செய்வோம்.

இது தகடு,

இத கிளியமரத்துல வெட்டிச் செதுக்கி வட்டமா பண்ணி ஓட்டையப்போட்டு கொகல்ல மாட்டிக்குவோம்.  இப்பதான் இதெல்லா தகடுல இருக்கு. அப்பவெல்லாம் மரத்துல தான் இருக்கும்.

அப்புறம் இது கோழி றக்க.

ஒரு கோழில ஒன்னோ ரெண்டோ எறக்க தான் இப்படி ஊதறத்துக்கு வசதியா நல்லா இருக்கும். அதப் பாத்து எடுத்துக்குவோம்.  

இது புல்லு.

இது கதிரம்பள்ளியில இருக்கு. அந்த ஊருல நெறைய வெளஞ்சு கெடக்கும்.
ஒரு அஞ்சு புல்லு இருந்தா வாழக்கைபூராம் ஊதிக் கெடக்கலாம்.

இந்த கட்டுக்கயிற எருக்கலாம் செடியிலிருந்து பிரிச்சு நாராக்கி கட்டிக்குவோம்.


இதுல ஆட்டத்துக்கு தகுந்த மாதிரி வாசிக்கணுமா இல்லை ஒரே மூச்ச வாசிப்பீங்களா? வகைன்னு ஏதாவது  இருக்கா ?

ஆமாங்கே ..  ஊட்டாட்டம் கூட்டாட்டம்ன்னு ஆட்டத்துலயே ரெண்டு வகை கெடாக்கு. ஊட்டாட்டம்ங்கறது,  பொண்றீக மட்டும் ஆடறது. கூட்டாட்டம்ங்கறது ஆம்பளைகளும் ஆடறது.  இதுக்கு தகுந்த மாதிரி ஆட்டகொகாலு ஊட்டகொகாலுன்னு ரெண்டு வகையா மாத்தி மாத்தி ஊதுவோம். அப்புறம் டெல்லியாட்டம்ன்னு ஒந்து இருக்கு. அது வெளியாளுக கூட்டீட்டுபோனா ஆடறது. அதுக்கு ஒரு தினுசா ஊதுவோம்.


கொகல் இல்லாம ஆட்டமே இல்லையா?

கொகால் புடித்தாதான் பொறேயும் அடிக்கமுடியும். தவிலும் தட்டமுடியும். ஆட்டமோ பாட்டோ வரும்  கொகால்இல்லேந்தா ஒந்தும்மில்லே, எல்லத்தையும் ஆட்டிவெக்கறது இந்த கொகாலுதா. ஆட்டம் சரியில்லைந்தாலு, பொரே தப்பா அடித்தாலும், பாட்டு தப்பா போனாலும், சரி செய்து எடுத்துக்குடுக்கறது  கொகால்காரந்தான். மத்தவங்களுக்கு தெரியாத மாதிரி கொகால்யும் பொரையுலும் நாங்க பேசிக்குவோம். ஆனா பாக்குற அது உங்களுக்கு தெரியாது. எங்காவது ஆடப்போகும்போது, ஆட்டம் போதும் முடிச்சக்கலாம், சாப்பாடு ரெடியாயிருத்து, சாராயம் வந்திருத்து. அப்படீங்கறது வரைக்கும் நேமு கொகல்யே பேசீக்குவோம். இப்பகூட, சீரங்கன், புல்ல எடுக்கதான் போயிருக்கின. நே கொகால்ல ஊதி  அதச்சொல்லிட்டேன். ஊதும்போது  நாங்க கொஞ்சம் சாரயத்த குடிச்சுட்டுதான் ஊதுவோ. அப்படி ஊதுனாதான் ரொம்ப நேரத்துக்கு   நாவு வரலாம கெடக்கு.


பெண்கள் கொகலோ பொறையோ வாசிக்கறாங்களா?

ஆமா. இப்ப அப்படி ஒருத்தறம் இல்லெ. ஆனா மொதல்ல  ஒன்னு ரெண்டு பொன்றிகளும் சும்மா ஊதிட்டுதா இருந்தாங்ன்னு தாத்தா சொல்லுவின. 

எங்கெல்லாம் போயி ஊதியிருக்கீங்க ?

எல்லா சீமைக்கும் போயிறுக்கேன். மன்னார்காடு, காரமடே, கோயாமுத்தூர் இப்படி இதுவரைக்கும் நெறய இடத்துல ஊதிருப்பேன். இதெல்லாம் வெளியாளுக இருக்கற ஊரு.
ஆனா எங்காளுக இருக்குற ஊருல போய் ஊதமுடியாது. அங்க அவுங்கதான் ஊதனும். அவுங்க ஒத்துகிட்டா நாமளும் ஊதலாம்.  அப்படி அவுங்க ஒத்துக்காத எடத்துல வம்புக்கு ஊதுனா மந்திரத்துல தொண்டைய கட்டிப்போட்டுறுவாங்க. ஊதமுடியாது. இந்த புல்லும் அடைச்சுக்கும்.

ஒவ்வொரு பக்கமும் ஒருமாதிரி பாடறாங்க. சின்ன வயசுக்காரங்க  பாட்ட மாத்தி மாத்தி பாடறாங்களே?

ஆனா  மாத்தி ஊதமுடிகாது. அட்டப்பாடில ஒருமாதிரியும், வெள்ளிங்கிரியில அந்தந்த எடத்துக்கு தக்க மாதிரி பாடுவின. சில பாட்ட ஆங்கே மட்டுந்தா பாடுவினா. சில பாட்ட ஈங்க மட்டும்தான் பாடுவினா சில பாட்ட ரெண்டு பக்கமும் பாடுவின. ஆனா அங்கபாடற நாலு வரி ஈங்க இருக்காது. சிறுசுக அதுகளுக்கு தக்கபடி பாடிக்குவாங்க. அது தப்புந்தெல்லாம் சொல்லுகாக்கில்லெ.

இந்த பாட்டுல நிறைய பாட்டுக கூத்துக்காக கட்டிய பாட்டுங்கறாங்களே ?

ம்க்கூ...அச்சா இல்லே, நம்த்தாளுக  பாடுன பாட்டத்தான் கூத்து நடக்கும்போது இடையிடையில சேத்திக்குவோம்.  எங்க ஊருல என்ன நடக்குதோ அதவெத்தே பாட்ட கட்டிக்கிட்டு சாவிலும் சீரிலும் பாடுவோம். என்ன பேர மாத்தி மாத்தி பாடிக்குவோம். அவுங்க மனசு சங்கடப்படக்கூடாதில்லெ.

அதுமாதிரி ஒவ்வொருத்தரும் பாட்டுக்கு ஒவ்வொரு அர்த்தம் சொல்லறாங்களே!
எது உண்மையான அர்த்தம்ன்னு எப்படி கண்டுபிடிப்பது?

ஆமா அப்படித்தான் சொல்லுவினா. அவுங்களுக்கு தெரிந்தாப்புல கொஞ்சம் சேத்தியும் கொறச்சும் சொல்லுவினா....உண்மையான அர்த்தத்த நீவீருதெ தேடி கண்டுபுடிக்கோனு. ஆனா, அது கொஞ்சம் கஸ்டமாத்தான் கெடக்கூ.



        

Comments

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் மொழியோ    உணர்வுமொழியோ   அவருக்கு     கைகூடி வந்ததாக தெரியவில்லை , பாவம் அவர் என்ன செய்வார்...மேலும் அவருக்குமு

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள் ’ என்று இருவரையும் வேறு வேறாக்கும் பக்க சார்பான ஆய்வாளர்களின் வீச்செழுத்து எங்கும் மலினமாக காணக்கிடைக்கிறது  . ந

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி சுமந்துவரும் இசை குறிப்புகள் - நன்றி ராஜா ராமசாமி

   வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த , அந்த வனமும்   நீண்டு நெடிந்து பரந்திருந்தது .  விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது . ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த     வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் , ‘ காடுகொன்று நடாக்கிய ’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது . மலைகளை ஒட்டியிருந்த     சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள      மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது . வந்தேறிகள்     அத்தோடு நிற்கவுமில்லை . குன்றுகளில் புகலிடம்தேடி       இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது   மலைத்தாரம்   ( புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை     தொடர்ந்து நிகழ்த்தியது . அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே     இலக்கியங்கள் பாடின . இவ்வழியாகவே மேற்குத்தொடர்சி மலையின் மலைத்தாரங்கள்   அகஸ்ட்டஸ்சீசர் காலத்திய உரோமாபுரிக