Skip to main content

எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை - அருள்லட்சுமியை முன்வைத்து




ஊளையிடும் குளிரில் நான் கொய்யாமரத்துக்கு அருகில் உட்கார்ந்திருக்கிறேன்.. சேகர் தயங்கியபடியே வந்து நின்றான்;  ‘’அண்ணே!  என்னோட செல்லில்  பேட்டரி நிற்பதில்லை கொஞ்சநேரம் மொபைல் வேண்டும் பேசனும்’’ தயங்கியபடியேதான் கேட்கிறான். அவன் இப்படிக்கேட்பது முதல்முறையல்ல, அநேகமாக இது லட்சத்து ஒன்றாவது முறையாககூட இருக்கலாம். 

சேகரின் காதலி உமா, ஆவரம்பாளையத்தில்  ஒரு இரும்புக் கம்பனியில் வேலை செய்கிறாள். அவளை  ஜீனிலோ ஜூலையிலோ திருநெல்வேலிக்கு அழைத்துகொண்டுபோய் கல்யாணம் செய்துகொள்ளப்போகிற திட்டத்திலிருப்பவன். உமா 'அட்டவணை சாதி' சேகர் ........

எடுத்துகொடுத்துவிட்டு எனக்கு ‘’கால் வந்தாலும் வரும் பேசீட்டு சீக்கிரமா திருப்பிகொடுத்துடு’’ என்றேன்.
ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு லேசான புன்னகையுடன் போனவன்... போனவன்தான்; நேரம் கடந்துகொண்டே இருந்தது. ஒரு இடத்தில் நின்று பேசும் பழக்கம் அவனுக்கு அறவே இல்லை, சித்து ரகம். அவன். வழக்கமாக ‘உலாத்துகால்’ பேசும் மொட்டைமாடிக்குப்போனேன் அங்கும் இல்லை மேடைக்கு  தேடிப்போனேன் அவன் அங்கும் இல்லை; ஒருவேளை பேசிக்கொண்டே ஆவரம்பாளையத்துக்கே  போயிருப்பானோ என்ற சந்தேகம்கூட எனக்கு வந்துவிட்டது அவன் அப்படியெல்லாம் செய்யக்கூடிய ஆள்தான்; கோபம்தலைக்கேறியது.   

அங்கிள்ழ்……

அருள்தான் வந்து அதை இறக்கிவிட்டாள்.அருள் எனக்குத்தெரிந்த சுட்டி ரெட்டை வால் இத்யாதி இத்யாதி,,,முகத்தில் செயற்கையாக ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டு மனநிலையை மாற்ற முயற்சி மேற்கொண்டேன்

‘’அங்கிள் இந்த குருவீங்க ஏன் கத்துது’’   

‘’அது விளையாடுது’’

‘’இல்லே அது சண்ட போடுது… பாருங்க’’

‘’இல்லம்மா’’

‘’ஆமா அது சண்டைதான் போடுது உங்களுக்கு தெரியல’’

திரும்பிப்பார்த்தேன் எனக்கு அப்படித்தெரியவில்லை

ஆனால் எதற்கு வம்பென்று ‘’ஆமாம் அருள்… சண்டதான் போடுது’என்றேன்’’ அவள் திருப்தியாகிவிட்டாள்தான்  போலிருந்தது
ஆனால் அடுத்த கேள்வி அவளிடம் தயாராகவே இருந்தது

‘’ஏன் சண்டை போடுது?’’

‘’அதுக்கு என்னமோ கோபம்….  உங்க அம்மா சோறு போட்டுவைத்தாள் எல்லாத்தையும் அதே தின்றுவிட்டு…’’  என்று எதையாவது சொல்லிவைக்கலாம்தான்

குருவீக எல்லாம் கோபப்படுமா? என்ன கோபம் அங்கிள்?  என்று கேட்காமலிருப்பாள் என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை வேறு நேரமாக இருந்திருந்தால் இந்த உரையாடல் குறைந்தபட்சம் ஒரு முழு மணிநேரத்துக்கு நீண்டிருக்கும்

நானோ சேகரின் மேலான காண்டிலிருக்கிறேன் அருள்வேறு…… உள்ளுக்குள் ஏதோ ஒன்று விழிக்க ஆரம்பித்தது.  ‘அடங்குடா’ என்ற அசரீரிக்கு மெளனித்தேன்

‘’மாமா கொஞ்சம் வேலையாயிருக்கேன் அப்புறமா பேசறேன் அதோ அம்மா கூப்பிடறாங்க போடா செல்லம்… ‘’ . போய்விட்டாள்; அப்பாடா என்றிருந்தது

…அதோ சேகர் வந்துகொண்டிருக்கிறான்

வரட்டும் அவனை இன்னைக்கு உண்டு இல்லைன்னு பண்ணிடனும்
வந்தவன் ‘’கொஞ்சம் நேரமாயிடுது’’ சொல்லிவிட்டு எந்தவித குற்றஉணர்வுமில்லாமல் மொபைலைக்கொடுத்துவிட்டு நகர ஆரம்பித்தான்

அப்புறம் கேட்கவா வேண்டும் ‘பின்னிப்படல்தான்   

ஓய்ந்த போது தலையில் ஏதோ ஊர்வது போலிருந்தது  கைகளை கொண்டுபோய் தடவிப்பார்த்தேன் இரண்டு கொம்புகள் முளைத்திருந்தது. திரும்பிப்பார்த்தேன் அருள் லட்சுமி அவற்றைப் பிடித்தபடி நின்றிருந்தாள்  

எனக்கு திடுக்கென்றிருந்தது

இந்த கொம்பு வைப்பதன் மூலம் அவள் ஏதும் எனக்கு சொல்லவரவில்லை அவளைப்பொறுத்தவரை, அந்த நேரத்துக்கு ஒரு விளையாட்டு; அவ்வளவுதான்.   ஆனால் என் மனதுக்கு  அவளின் குழந்தைமை எதையோ உணர்த்துவதாகத்தான் பட்டது  

(அவள் ஏன் கொம்பை குறியீடாக தேர்தெடுத்தாள் அதெப்படி விலங்கை கோபத்தின் குறியீடாக சொல்லமுடியும்  என்ற விவரணைகளுக்குள் நான் போக விரும்பவில்லை அவள் உண்மையில் ஏற்கனவே இழந்திருந்த கொம்பைத்தான் வைத்துவிட்டிருக்கிறாள் கூத்தன் என்னை விட்டுவிடுவார் என நம்புகிறேன்)

சிறிது நேரத்துக்கு  முன்னால் நான் யாராக இருந்தேன்? ஒரு சின்னத் தாமதம்தான்.. இப்போது நான் நானாக இருக்கிறேனா? அதுவும் கூட அவனோடு விரைவில் வாழ்வை பங்கிக்கொள்ளப்போகிறவளோடு முக்கியமான ஒன்றை  பேசிக்கொண்டிருந்திருப்பான் வேண்டுமென்றால்லாம் அவன் செய்யவுமில்லை மேலும் எனக்கு அப்படியொன்றும் கால் வரவுமில்லை   ஏன் நான்  பரிணாமத்தடத்தில்   குறுக்குவெட்டுப் பயணத்தை நிகழ்ந்த நேர்ந்தது  

(நல்லவேளை அவள் கொம்பு வைத்து எனக்கு ஒரு சின்ன நான்கமர்சியல் பிரேக்கைக்கொடுத்தாள், இல்லையென்றால் கால்கள் நீண்டு முதுகுத்தண்டு நிமிர்ந்து வால் அழிந்து  அநியாயமாக காதலைக்கவிக்கொண்டுபோய் ரயில் தண்டவாளங்களில் போட்டுவிட்டு வந்தாலும் வந்திருப்பேன்)

தினந்தோறும் நெருக்கடிகள் சதா நம்மை வெளியே இழுத்துக்கொண்டிருக்கும். 'போலப்பேசல்' நம்மை உறங்கவைத்துவிடும்.. செயல், உங்கள் கிடங்கை திடத்துப்போகவைத்துவிடும்.   இங்கே கவிதைமையை தக்கவைப்பதென்பது அவ்வளவு எளிதானதல்ல; அதற்கு  நமக்கு முன்பு இருக்கும் தீர்வுகள் சிவற்றில்

ஒன்று….. மெளனங்களை கடைவது

இரண்டு : ‘பைத்திய’த்தோடு உரையாடுவது எந்தவிதத் தடையுமற்று  நனவிலிகளில் ஊறி மிதக்கும் சித்திரங்களை சொற்கள் ஒளிந்துகொண்டிருக்கும் வீதிகளில் நடமாடவைக்கமுடியும் சிறிது நேரத்தில் நாமே அந்த சித்திரங்களாக மாறிவிடமுடியும் 

மூன்று : குழந்தைகளோடு ஊடாடுவது.  ‘சமூக ஒழுங்குக்கான’ கட்டல் தொடக்க நிலையிலிருக்கும். ஈடிபஸ் தனது தனது இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள முயன்றுகொண்டிருப்பான் நாம் வலுவற்ற பிடிமானங்களைக் கலைத்துப்போட்டு நிர்கதியாய் நிற்கமுடியும் 

தியாகுவின் கவிதைகளில் பெரும்பாலும் இந்த மனோ நிலைகளை என்னால் காணமுடிகிறது  

மனிதன் தன்னை சமூகத்தின்  பிரதியாய் நின்று  ஊடாடுவதை பார்த்திருக்கிறோம் ஒரு குற்ற உணர்சியில் இழந்த விலங்குமையை மீட்டுகொள்வதை பார்த்திருக்கிறோம் விலங்காக நின்று அதற்காக அகவுவதிலும் அதற்காக கிரீச்சிடுவதிலும் அதற்காக கர்ஜிப்பதிலும்  முன் நிபந்தனைகள் இருக்கிறது; இன்னும் ஏதோ போதமையும் நமக்கு இருக்கிறது. ஆனால் தியாகு ஓணான்களோடு நிற்க முடிகிறது அவருடைய ஓணான் உடலை தூக்கி நம்மை பார்த்து பாறையை இல்லாவிட்டாலும் ஏதோ ஒன்றை தூக்கிவீசிவிடுகிறது அது தலையில் நங்கென்றே விழுகிறது. நம் தலை இனச்சேர்க்கைக்கான காலத்தில் அதற்கு  ஏற்படும் இளஞ்சிகப்பு நிறத்தில் மாறிவிடுகிறது.

கைக்கொள்ளுமளவு கற்கள்
தாக்கவென ஒரு கல்லை
மறுகையில் ஏந்தி கண் சொருகி குறிபார்த்து நிற்கும்
ஒரு சிறுவனிடம்

ஒரே ஒரு பாறை
ஓணான்வசம் 

நான்கு கால்களிலும் பற்றித்தூக்கி
அவனை நோக்கி 
எப்படி எறியப்போகுதென்று
பார்த்துகொண்டிருக்கிறேன்

இங்கே தியாகுவின் குழந்தமையும் விலங்குமையும் எதிர் எதிராக நின்று ஒரு ஊடறுப்பைத் தொடங்குகிறது அந்த சச்சரவான கட்டமைப்பின் மீது வருகின்ற கொதிநிலையை ஜானுவும் நிஷீத்தும் இசபெல்லாவும் வந்து சமாதனப்படுத்திவைக்கிறார்கள்.

அதற்கான instinct   மங்காத பருவமது 

உணவுச்சங்கிலியின் இயல்பாக இருக்கக் கூடிய ஒரு  இரை இன்னொரு உயிரியை  சிதைப்பதைக்கூட அவர்கள் உலகம்  விரும்புவதில்லை,

இதோ இசபெல்லா அவள் தரையில் அமர்ந்துகொண்டு மடியில் ஏதோ புத்தகத்தை வைத்திருக்கிறாள்

தவளையை இரை எடுக்க
பாம்புக்கு
வழிகாட்டக்கேக்கும்
சிக்கலானவரைபடம்
நான்குவயது இசபெல்லாவிடம்

பாவம் தவளைஎன்று
வழிகாட்ட மறுக்கும்
அடம்பண்ணும் அவளிடம்
பேச வார்த்தைகள் இல்லை
என்னிடம்
சிரிப்பதைத்தவிர   


பக்கவாட்டில் வனாந்திரங்களை தேக்கிவைத்திருக்கிற குழந்தையின் பச்சையம்    மொழிபெயர்க்கப்படுகிறது

தாய் யானையின் நிழலிலேயே நடக்கிறது
குட்டியானைகள் வனாந்திரத்தில்

மின் துண்டிப்பு

இப்போது
டீ வி பெட்டியின் பக்கவாட்டில்
கண்களை சுழற்றுகிறான் நிஷீத்


இது அவர்களால்மட்டுமே சாத்தியப்படுகிறது


அப்புறம் பிரதி நிழலாகி நம்முடைய நிஜத்தை தூக்கி தோளில் போட்டுகொண்டு ஒரு நெடிய பயணத்தை மேற்கொள்கிறது
அத்ற்கு கிடைக்க நிறைய மரங்களையும் இங்கே காணமுடிகிறது 

நிழல் 1 ல்

வானம் பின்புலமாக……

நாம் தேட விளையாதவரை
எதிர்திசையில்
எங்கேனும் வீர்றிருக்கலாம்
கரைந்தபடி 
வானவில்லின் ஏழு நிறங்களில்
ஏதேனும் ஒரு நிறம்கொண்ட காகம் 


'நார்சிஸ்தான் கண்ணாடியாக பிறந்திருக்கிறான்' என்று எங்கோ படித்த தொன்மம் மனதுக்குள் வந்து போகிறது  எல்லா உருவங்களையும் அது தனக்குள் சேமித்துகொண்டு நாம் சிலிர்க்கும்போது  உதிர்ந்துவிழுகிறது. அதன் ஒவ்வொரு துளியிலும் நமது குருவிகள் பொலபொலப்பதை தவிர்க்கமுடியவில்லை.  அது பார்த்துகொண்டிருக்கும் கண்ணாடி  பல்வேறு வாசிப்புகளில் என்னை பலவாறாக கொத்தத்தொடங்குகிறது. ‘நாகரீக’ நீக்கத்தைக்கோருகிறது. ஆதிமை. குழந்தைமை. மனிதமை,விலங்குமை இவற்றுக்கிடையில் நூலளவு வித்தியாசங்களைக் களைகிறது. ஆதி மனிதர்களை நோக்கிய ஈர்ப்பை அது அதிகப்படுத்துகிறது.

இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது

இப்படியாக அல்வேதியை நிகழ்த்தும் தியாகு, இளையவர்களில் குறிப்பிடவேண்டிய பட்டியலுக்குள், மிக மிக அருகாமையில் வந்து நிற்க்கிறார். சமீபத்தில் படித்த சிறந்த கவிதைளின் உத்தேசப்பட்டியலை யாராவது கேட்டால்.. நிச்சயம்  எலிக்குஞ்சுகளோடு  எனக்கு குரோதமில்லையிலிருந்து பல கவிதைகளை தயங்காமல் சுட்ட முடியும்.

ஆரத்தழுவல் தியாகு

Comments

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் மொழியோ    உணர்வுமொழியோ   அவருக்கு     கைகூடி வந்ததாக தெரியவில்லை , பாவம் அவர் என்ன செய்வார்...மேலும் அவருக்குமு

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள் ’ என்று இருவரையும் வேறு வேறாக்கும் பக்க சார்பான ஆய்வாளர்களின் வீச்செழுத்து எங்கும் மலினமாக காணக்கிடைக்கிறது  . ந

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி சுமந்துவரும் இசை குறிப்புகள் - நன்றி ராஜா ராமசாமி

   வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த , அந்த வனமும்   நீண்டு நெடிந்து பரந்திருந்தது .  விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது . ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த     வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் , ‘ காடுகொன்று நடாக்கிய ’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது . மலைகளை ஒட்டியிருந்த     சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள      மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது . வந்தேறிகள்     அத்தோடு நிற்கவுமில்லை . குன்றுகளில் புகலிடம்தேடி       இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது   மலைத்தாரம்   ( புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை     தொடர்ந்து நிகழ்த்தியது . அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே     இலக்கியங்கள் பாடின . இவ்வழியாகவே மேற்குத்தொடர்சி மலையின் மலைத்தாரங்கள்   அகஸ்ட்டஸ்சீசர் காலத்திய உரோமாபுரிக