உங்க பேரு
ஊரு எல்லாம் சொல்லுங்க?
எத்து பேரு ராஜேந்திர ஆகேகண்டி கீழூரு
என்ன வேலைக்கு
போறீங்க?
என்னவேலை கெடய்க்குதோ அதுக்கு போறேன்
ஆமா நீவீரு எதுக்கு இதெல்லா கேக்கறே?
இல்ல நான் எப்படி இதையெல்லாம்
அடிக்கறீங்கறத பத்தி படிக்கவந்திருக்கேன்.சொல்லுங்க
ஹேய்.. கேளுவி
இருள சனங்க என்னென்ன இசைக்கருவிகளை வாசிக்கறாங்க?
ஒந்து பொறை இன்னொந்து தவிலு , அப்புறம் சால்ரா, கொகாலு, மிருதங்கம்.
மிருதங்கம் எப்பவாவது பஜனையில மட்டும் வாசிப்போம். இப்போ எங்காளுக ஜமாப்புகூட
அடிக்கறாங்க.
இதுக்கு பொறைன்னு பேரு.
இதுக்குந்தே செய்யற பானைய கீழிருந்து
வாங்கிட்டு வருவோம். வந்து மான்தோல பதம்
பண்ணி காயவெத்து கட்டிவெக்கோம். ஆட்டுத் தோலுலயும் வெறையாட்டு தோலுலயும் கட்டிக்குவோம்.
இப்போ அப்படியில்லை மாட்டுத் தோலவெச்சு கட்டிக்கறோம்.
இத எப்படி குச்சி
வெச்சு அடிச்சு வாசிப்பீங்களா?
ம்க்கூம்..... குச்சியெல்லாம் இல்லெ கழுத்துல கட்டி தொங்க போட்டுக்குவோம்.
வயித்துல நிக்கும். ஒரட்டாங்கை பக்கமா நெஞ்சோட சேத்து இறுக்கி அப்படியே ரெண்டு பக்கமும் அடிப்போம். சோத்தாங்கை பக்கம்தான் பலமா ஓங்கி அடிக்கமுடியும்.
ஒரட்டாங்கைபக்கம் அப்படி பலமா அடிக்க முடியாது.
சுதி சேக்கறதுக்காக குப்பைகளைப் போட்டு சூடு செஞ்சு அடிச்சு பாப்போம். சுதி
சேரலைன்னா மறுபடியும் கொஞ்சம் சூடு
செய்வோம். இப்படி நல்லா சுதி ஏறறவரைக்கும்
சூடு செஞ்சு அடிப்போம். ஒரு முறை சூடு செஞ்சாலெ அது பாட்டுக்கு கும்கும்க்கு கும் கும்க்குன்னு எசச்சு
கெடக்கும். ஒரு நாள் முழுக்க வெரப்பா இருக்கும், பிரச்சனையிருக்காது
மிருதங்கம் மாதிரியே
இருக்கே இது?
இதுக்குதவில்ன்னு பேரு, இத மொதல்ல மரத்துல ஒரல் மாதிரி குழியில்லாம இருந்துச்சா.
இத தட்டி தட்டிதான் பந்தி மானையெல்லாம் தொரத்துவாங்களாம். அடிச்சு அடிச்சு ஒரு
பக்கம் குழியா ஆயிருச்சம். அப்புறமா அத திருப்பிப் போட்டு இன்னொரு பக்கமும்
அடிச்சாங்களாமா. அந்தபக்கமும் குழியாரிச்சாம். அப்புறந்தா தோல வெச்சு
ரெண்டுபக்கமும் கட்டி அடித்தாங்களாமா.
இதுவும் வெளியில்
இருந்துதான் வாங்கி வருவீங்களா?
ம்க்கூ நேமே செஞ்சுக்குவோ கிளிய
மரம் இசுவே மரம் , தாளிமரம் இந்த
மூன்று மரத்துல இருந்து தோதான வாத
கொண்டுவந்து ரெண்டு பக்கமும் கொடஞ்சு
கொடஞ்சு குழியாக்கி நெழல்ல காயவெச்சு அப்பப்ப தண்ணிய உட்டு பதமாக்குவோம். கொஞ்ச நாள் கழிச்சு மான் தோல கட்டி அடிச்சா
இப்படி குமு குமுகுமுக்குன்னு அடிச்சு
கடக்கும்.
இந்த ஒன்ன மட்டும்
தனியா அடிச்சுட்டு ஆடுவீங்களா?
ஹ ஹ ஹா..... இல்லே முடிகாது. இது பொறைக்கு தம்பி மாதிரி, இது கூட இருந்தா
அடிக்காக்கு நல்லா கெடாக்கு. பொறைய மண்ணுல செய்குவோ. தவில மரத்துல செய்குவோ. மண்ணு சத்தத்த உள்ள இழுக்கூ, மரம் அச்சா இல்லெ.
சத்தத்த வெளிய தள்ளும். அதுனால ஒந்துக்கொந்து ஒத்தாசையா இருந்து ஆட்டத்தே எடுத்துக்குடுப்பின.
Hard Rock Hotel & Casino - MapyRO
ReplyDeleteHard Rock Hotel 경상남도 출장안마 & 군포 출장샵 Casino in Hollywood, FL. 3.7 mi (5.9 km) from 동두천 출장샵 Seminole Hard Rock Hotel & 여수 출장안마 Casino. Rating: 7.7/10 · 3,906 votes 서산 출장안마 · Price range: $$