573 வகையான பழங்குடிகள் இங்கே வாழ்கிறார்கள் . அவர்களின் மொத்த மக்கள் தொகை 67 மில்லியன்பேர்க்கு மேல் என்கிறது அரசு ஆவணம். ஆனால் இதுவரை உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கைகள், பெரும்பான்மை சமவெளிமக்களை கருத்தில்கொண்டேதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகளின் உண்மையான வாழ் நிலையையோ அவர்களின் பிரச்சினைப்பாடுகளையோ கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதற்கு இக்கொள்கைகளில் உள்ள பல சரத்துக்கள் சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது . பல்வேறு முயற்சிகள் எடுத்தபின்னும் பழங்குடிகள் கல்விக்கு வெளியே நின்றிருப்பதற்கு இதுவே முக்கியமான காரணமாகப்படுகிறது பிரிட்டிஷ் அரசின் ஆளுகையின்கீழ் இந்தியா இருந்தபோது பழங்குடிகளுக்கான கல்வி, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது விரும்பப்படவில்லை. அதற்குப் பதிலாக பழங்குடிப்பகுதிகளில் கிருத்துவ மிஷினரிகள் கல்விப்பணிகளை செய்ய அனுமதித்தினர் இந்திய சுதந்திரத்திற்குப்பிறகு உருவாக்கப்பட்ட பல கல்விக்கொள்கைகள் பழங்குடிகளின் பார்வையில் ஏற்படுத்தப்படவில்லை ஆனால் அவற்றில்கூட ஒரு கரிசனம் இருந்தது. ஆனால் மத்திய அரசால் தற்போது...