பழங்குடிகள் காட்டுக்குள் இருக்கலாம் ஆனால் எப்போது வனத்துறை சட்டிய தூக்கசொன்னாலும் தூக்கிவிட வேண்டும்.. இல்லாவிட்டால் அவர்களே ஏதாவது ஒரு கேசைப்போட்டு தூக்கி எறிந்துவிடுவார்கள் .
இது 2005 வரை இருந்த நிலமை. ஆனால் வனச்சட்டம் 2006 வந்த பிறகு இந்தியாவின் மிகப்பெரிய ஜமீன்தாராக கெட்ட ஆட்டம்போட்ட வனத்துறை ,தனது குண்டாந்தடியை கீழே போடவேண்டியதாயிற்று.
‘’வனச்சட்டம் 2006’’ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?
ஆம் என்றுகூட சொல்லலாம்.
வனச்சட்டம் 2006 பழங்குடிமக்களின் நில உரிமையை உறுதி செய்தது.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் நிலத்தில் இருந்து குடும்பம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10 ஏக்கர்வரை பட்டாப்போட்டு கொடுக்கவேண்டும் என்று அழுத்தந்திருத்தமாகக்கூறியது
கடுக்காய் நெல்லிக்காய் பூச்சைக்காய் புளி போன்ற பொருட்களை அவர்களே எடுத்து அவர்களே விற்பனை செய்துகொள்ளலாம் என்றது
வனக் கிராமங்களை தேவைப்பட்டால் வருவாய்க் கிராமங்களாகக்கூட மாற்றிக் கொள்ளலாம் என்றது
யார் யார்க்கு என்ன கொடுக்கவேண்டும் என்பதை மேலிருந்து யாரும் முடிவு செய்யக்கூடாது பழங்குடி மக்களால் உருவாக்கப்பட்ட கிராமசபையே முடிவு செய்யும் என்றது (இங்கே கிராமசபையென்பது நமது பஞ்சாய்த்தின் கிராமசபை அல்ல)
யார் உள்ளே வரவேண்டும் யார் வெளியே போகவேண்டும் என்று பேசும் சொல்லும் செயல்படும் அதிகாரம் அந்த மக்களுக்கே உள்ளது என்றது
அது காட்டின் சாவியை திரும்பவும் பழங்குடிகளிடமே தரவேண்டும் என்றது
இதை அமுல்படுத்துவார்களா? அசையவே இல்லை
இந்த சட்டத்தை அமுலபடுத்தவேண்டும் என்று இங்கேயும் செயல்பாட்டாளர்களால் பல கவனஈர்ப்புகள் முன்னெடுக்கப்பட்டன. அரங்கக்கூட்டங்கள் நடந்தன. இடதுசாரி அமைப்புகள் மாபெரும் ஊர்வலத்தை நடத்தினார்கள்.
ஆங்காங்கே தன்னிச்சையாக பல குழுக்கள், உரிமைக்குழுஅமைத்தல் விண்ணப்பம் பெறுதல் சட்டம் பற்றிய விளக்ககூட்டம் நடத்தல் என பம்பரமாக சுழலத்தொடங்கியது.
வேலைகள் வேகமாக நடந்துவந்ததை பெருமூச்சுடன் பார்த்த ஒரு கூட்டம் நம்பியாரைப்போல் கைகளை பிசைந்து நின்றது. எப்படியாவது குலைக்கவேண்டும் என்று, நண்டுக்கு காயம்பட்டால்கூட நாண்டுகிட்டு சாகப்போகும் போலி சூழல் வாதிகளோடு சேர்ந்து அற்பத்தனாமாக ஒரு காரியத்தில் இறங்கியது .
,
கார்ப்ரேட்டுகளை பின்பலத்தில் வைத்துக்கொண்டு ரிட்டையர்டு வனஅதிகாரிகள் ‘இச்சட்டத்தால் காடு அழிந்துபோவதற்க்கு வாய்ப்பிருக்கிறது ஆகவே இதை நிறுத்திவைக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுபோட்டார்கள்
''நிறுத்திவைக்கலாம்... நிலங்களை அளப்பதற்க்கும் அத்ற்கான ஆவணங்களை தயார் செய்வதற்க்கும் எந்த தடையும்போடமுடியாது ஆனால் கோர்ட் அனுமதியின்றி பட்டா வழங்குவதை தடை செய்கிறோம்'' என்று ஒரு ஆணையை வழங்கியது
இதுபோதுமே இவர்களுக்கு.....
இச்சட்டத்துக்கு தடை பெற்றுவிட்டோம் என்று மாவட்ட வன அலுவலகம் முதல் , சரக அலுவலகம் வரை தண்டோரா போட்டார்கள். ஊர் ஊராகப் போய் குய்யோமுறையோ என்று கத்த ஆரம்பித்தார்கள். ரிசாட்டுகளில் தண்ணியடித்து How to Preserve spider என்று லெக்சர்கள் எடுத்தார்கள். அழுகிபோன சில ஆவணப்படங்களை ஊர் ஊராக சுமந்துபோய் விற்க்க ஆரம்பித்தார்கள் . லாலிபாப்பெல்லாம் வாங்கிக்கொடுத்து லாபிசெய்ய ஆரம்பித்தார்கள்
ஏதாவது கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்த நமது மாநில அதிகாரிகளுக்கு இந்த பேச்சு ஒரு சாக்காகிப்போனது. இதற்காகவே காத்திருந்ததுபோல் கிட்டத்தட்ட எல்லா வேலையையும் அப்ரப்டாக கிடப்பில் போட்டுவிட்டு அவரவர் வேலையை பார்க்க போய்விட்டார்கள்
வனஉரிமைக்குழுவை அமைத்து நிலங்களை அளந்து பக்கத்து மாநிலங்கள் பட்டா கொடுக்கும்விழாக்களை நடத்திக்கொண்டிருந்தபோது நம் அரசு ஒரு சின்ன துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை
செயல்பாட்டாளர்கள் கரடிபோல கத்திப்பார்த்தார்கள். கண்டுகொள்ளவில்லை. கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால்கூட பரவாயில்லை... கத்தியவர்களின் வீட்டுக்கேபோய் மாவோயிஸ்டுகளுக்கு மயில்மார்க் சம்பாரவை வாங்கிக்கொடுத்தீர்களா என்று போலிசார்களை வைத்து செல்லமாக விசாரிக்கவைத்தார்கள்.
.
கடந்துபோன காங்கிரஸ் அரசின் செயலகம் எல்லா மாநிலங்களுக்கும் அறிவுறுத்துக்கடிதம்கூட அனுப்பியது. ஆனால் நம் மாநிலம் அதை பள்ளிகரணைக்கு பக்கத்தில் உள்ள குப்பைமேட்டில் போட்டுவிட்டு மாவரைக்கபோய்விட்டது.
அமுல்படுத்த உங்களுக்கு என்னதான் பிரச்சனை என்று குடைந்து குடைந்து கேட்டவர்களின் அலுவலகங்களுக்கு ஆட்களை அனுப்பி ...அவர்கள் ஏன் நக்சலைட்டுகளாக இருக்ககூடாது என்று அகழ்வாராய்சி செய்து அந்த அகழ்வாராய்ச்சிக்குறிப்புகளை போஸ்டரடித்து ஒட்டினார்கள்
ஆனால் இப்போது
தனது கொண்டைய மறைக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்த உச்சநீதிமன்றம் " எங்கள் அனுமதியில்லாமல் பட்டா வழங்கக்கூடாது" என்ற உயர் நீதிமன்றத்தின் ஆணையின் மீதும், இந்த அடாவடிகளின்மீதும் ஒரு ஆப்பை செருகியிருக்கிறது
இந்த ஆப்பை இன்னும் ஆழமாக அடித்து அதை பிடுங்கமுடியாத மாதிரி ஆக்குவதும்,கடைகோடி வரை சலிப்பில்லாமல் இச்சட்டத்தின் பயனை கொண்டுபோவதும் ஒடுக்கப்படும் மக்களின்பால் அக்கறைகொண்டுள்ள அரசியல் இயக்கங்களின் கையில்தான் உள்ளது
பல்வேறு சட்டங்களை அலசி, இந்த வனச்சட்டத்தை ஒரு வடிவத்துக்கு கொண்டுவந்த பிஜாய் C.R Bijoyபோன்ற செயல்பாட்டாளர்களும், நினைத்தால் அசைத்துவிடக்கூடிய இடத்தில் இருந்த காங்கிரஸை அசைத்து, இந்த சட்டத்தை அமுல்படுத்தப் போராடிய இடதுசாரிகளும். பல்வேறு அவதாரம் எடுத்துவந்து இச்சட்டத்தை சிதைக்க பி ஜே பி நினைத்தபோதெல்லாம் வெகுண்டெழுந்து, தனது குறைந்தபட்ச பலத்தைவைத்துகொண்டு போராடிய சின்ன சின்ன ஆதிவாசி இயக்கங்களும் அவர்களின் தோளோடு தோள்நின்ற பொதுவுடமை இயக்கங்களும் என்றென்றைக்கும் நன்றிக்குறியவர்கள்.https://www.facebook.com/odiyen/posts/10154069982316807
Comments
Post a Comment