Skip to main content

கொலை செய்யப்பட்ட சரண்யா, பிரியங்கா, மோனிஷா January 24 at 1:32pm



நான்கு மாதங்களுக்கு முன்பு, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னனி , SVS கல்லூரியின் மாணவ மாணவிகளை சந்தித்து பேட்டிகள் எடுத்து வெளியிட்டது. விரிவான ஒரு கட்டுரையும் எழுதியது. விழுப்புரம் பகுதியில் பிரச்சாரமும் மேற்கொண்டது. கிட்டத்தட்ட எல்லாவீதிகளிலும் போஸ்டர்களை ஒட்டியது. ஆனால் அப்போது நாம் கண்களை மூடிக்கொண்டோம். நமது குரல்வளையை இடதுகையால் அழுத்திப்பிடித்துகொண்டு வலது கையால் வேறெதையோ பொத்திக்கொண்டோம் .

அந்தப்பேட்டியின் சில துளிகள்

1) 2011-ல் கல்லூரியில் சேர்ந்தேன். அரசுக்கட்டணம் 25,000 சேர்த்து மொத்தம் 55,000 கட்ட வேண்டும்” என்றார்கள். “ஏன்” என்று கேட்டதற்கு, “ஹாஸ்டல் பீஸ்” என்றார்கள். “இங்கு ஹாஸ்டலே இல்லை” என்றதற்கு, “ஸ்டடீஸ் மட்டும் தான். இங்கு ஹாஸ்டல் கள்ளக்குறிச்சியில் உள்ளது” என்றார்கள். “சேர முடியாது” என்ற என்னை எனது பெற்றோரிடம் பேசி சேர்த்தார்கள்.

2) பொதுவாக பணக்காரர்களுக்கு அட்மிசன் போடுவது இல்லை. கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தான் அங்கு சீட் கொடுப்பார்கள். ஏனென்றால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதால் தான். முதலில் ரூ 55,000 என்றார்கள். பிறகு ரூ 1,40,000 கட்டச் சொல்லி மிரட்டினார்கள்.

3) யோகா என்ற பெயரில் காலை 5 மணிக்கே தொடங்கி விடுவார்கள், இதில் கர்மயோகா என்ற பெயரில் எல்லா வேலைகளையும் செய்ய சொல்லி துன்புறுத்துவார்கள். மரம் வெட்டுவது, சமையல் செய்வது, காரை துடைப்பது என அனைத்து வேலைகளையும் செய்வோம்.

4 ) , ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வின் போது +2 மாணவர்களை சந்தித்து கல்லூரியின் விளம்பர நோட்டிஸ் கொடுப்பதற்கு எங்களைத் தான் திருச்சி, பாண்டி என பல இடங்களுக்கு அனுப்புவார்கள்.

5 ) முதலாமாண்டு, இரண்டாவது செமஸ்டருக்கு கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால் கட்டணம் வசூலித்தார்கள். ஏன் என்று கேட்டதற்கு 3 மாதம் என்னை சஸ்பென்ட செய்தார்கள். இதற்கு அபராதம் ரூ 50,000 கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்.

6) கல்லூரியில் நூலகமே கிடையாது. அங்கு ஒரு புத்தகம் காணாமல் போய்விட்டது என்று கூறி ரூ 25,000 கட்டச் சொல்லி எங்களை மிரட்டினார்கள். அதையும் கட்டினோம். இதனை ஒரு புகாராக RDO-விடம் கொடுத்தோம். கள்ளக்குறிச்சி அழகுவேல் MLA-விடம் முறையிட்டோம். மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு 15 முறை கொடுத்தோம்.

7 ) ஸ்காலர்ஷிப் பணம் வந்தது. அதனையும் “டிரஸ்ட்” பெயரில் எழுதிக்கொண்டு எங்களிடமே கொடுத்து இந்தியன் வங்கியில் மாற்றி வரச் சொன்னார்கள்.

8 ) அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தால் அவர்களுக்கு பட்டுத் துணி எடுத்து வர எங்களையே சிறுவந்தாட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

9 ) ஒரு மாணவன் கல்லூரி கேட் அருகில் விழுந்து இறந்து விட்டார். அப்பொழுது கூட எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று கண்டுகொள்ளாமல் விட்டார்கள்.

10) இவ்வளவு மோசடியாக கல்லூரியை நடத்துகிறார்கள். இவர்களை நம்பி எங்கள் வாழ்க்கையே தொலைத்து விட்டோம். ஊருக்குள்ளும் அவமானப்படுத்துகிறார்கள். எங்களுக்கு சாவதை தவிர வேறு வழி இல்லை”

11) இது குறித்து மாணவிகள் தரப்பில் கோமலா பேசிய போது
“2010-ம் ஆண்டு அந்தக் கல்லூரியில் சேர்ந்தேன். மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுதே அனைத்து பணத்தையும் கட்டச் சொன்னார்கள். எங்களை அவர்கள் கல்லூரியில் சேர்த்துக் கொண்டதே அந்த கல்லூரியை மேம்படுத்ததான். எங்களிடம் பணம் வசூலித்து கட்டிடம் கட்டிக் கொண்டார்கள். எங்களை அவர்கள் அடிமைகள் போலத்தான் நடத்தினார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் கூட இப்படி நடத்தியிருக்க மாட்டார்கள்.

முதலில் கல்லூரியில் ஆசிரியர்களே இல்லை. பாடமும் எடுப்பது இல்லை. ஹவுஸ் கீப்பர் கூட கிடையாது. சமைப்பது தொடங்கி வகுப்பு எடுப்பது, புல் தரையை சுத்தப்படுத்துவது வரை சீனியர் என்ற முறையில் நான் தான் அனைத்தையும் செய்வேன். இன்றைக்கு அவ்வளவு பெரிய கட்டிடம் உள்ளது என்றால் அதற்கு முழு காரணம் எங்கள் உழைப்பு தான்.
குடிக்க தண்ணி கூட இல்லை. கல்லூரிக்கு அருகில் 100 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. அதில் இறங்கி தான் தண்ணீர் பிடிப்போம். நாங்களும் போகாத அதிகாரிகள் இல்லை. செய்யாத போராட்டம் இல்லை. எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை. எங்களுக்கு சாவதை தவிர வேறு வழி தெரியவில்லை..” என்றார் கண்களில் நீர் வழிந்தபடியே..

12) இது குறித்து மருத்துவமனையில் இருந்த மாணவி பானுப்பிரியாவின் அம்மாவிடம் கேட்ட பொழுது…
“என் பொண்ண காலேஜில சேர்க்கும் போது ரூ. 60,000 கேட்டாங்க. மறு வருஷம் ஒரு லட்ச ரூபா கட்டச் சொன்னாங்க. ஹாஸ்டல் பீசு 2000-னு சொன்னாங்க. ஆனா வாங்கும் போது மூவாயிரமா வாங்கிகிட்டாங்க. ஒரு சாப்பாடு வாங்கினு வந்து அஞ்சி பேரு சாப்டறத என் கண்ணால பார்த்தேன் சார். ஒரு நாள் கையெழுத்து வாங்கணும்னு வரச் சொல்லி நாள் முழுக்க நிக்க வச்சிட்டாங்க. அன்னிக்கு கொத்தனார் வேலை செய்யும் போது இந்த பசங்க தான் கலவை எடுத்துனு போய் தந்தாங்க. இத பார்த்ததும் என் வயிறு எரியுது. இன்னா பண்றது சார். இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வச்சிட்டோம். எங்களால ஒன்னும் பண்ண முடியல… ஆனா அந்த காலேஜ மூடனும். எங்க புள்ளங்களுக்கு சர்டிபிகேட்ட திருப்பித் தரனும்” என்றார் கோபமாக…

13) அடுத்ததாக கோமலாவின் அம்மாவிடம் கேட்ட பொழுது,
“என் பொண்ணு SVS காலேஜ் ல தான் படிக்கிறாங்க. அங்க சேர்ந்த பிறகு தான் காலேஜ் மோசமான காலேஜ்’னு சொன்னாங்க. திரும்ப காலேஜிக்கு போயிட்டு நர்சிங் சேர்க்க போறேன்’னு சர்டிபிகேட் கொடுங்கன்னு கேட்டதுக்கு உங்க பொண்ணு டாக்டர் படிக்கிறாங்க. நர்சிங் விட பெரிய படிப்பு’னு சொல்லி சமாதானப்படுத்தினாங்க. ஆரம்பத்துல 25,000 கட்ட சொன்னாங்க. அப்புறம் ஹாஸ்டல் பீசு அது இதுன்னு 75,000 வாங்கிக்கிட்டாங்க. இது வரைக்கும் எதுக்குமே பில்லே கொடுக்கல. கால்ல விழாத குறையா கேட்டோம். எங்கள கழுத்த புடிச்சி வெளில தள்ளிட்டாங்க” என்றார் அழுது கொண்டே..

14 ) “ஒரு முறை ஹாஸ்டலை விட்டு இவர்களே வெளியே போக சொல்லிட்டு, பிரேக் பீசு 50,000 கட்டச்சொல்றாங்க. இப்படி விதவிதமா கொள்ள அடிக்கிறானுங்க. TC கேட்டாலும் தர மாட்றாங்க. 5 வருஷம் முடிஞ்சிடுச்சி. ஒரு வேலைக்கு போகணும்னா கூட சர்டிபிகேட் கேக்குறாங்க. எங்க போறது. படிச்ச படிப்பும் இல்லாம இப்ப நடுத்தெருவுல நிக்குறோம். இதனால் தெனம் தெனம் வீட்ல சண்ட தான் வருது.. இப்ப கூட கலக்டர் ஆபிஸ் போறேன்’னு சொல்லிட்டு தான் வந்து இப்படி பண்ணிக்கிட்டா.. நாங்க பட்ட கஷ்டம் இனிமே எந்த புள்ளைங்களுக்கும் வர கூடாது. அந்த காலேஜ இழுத்து மூடனும். கட்டின பணம், சர்டிபிகேட் திருப்பி தரனும்” என்று கதறுகிறார் அந்த ஏழைத்தாய்.
ஆனால் நாம் எழுதுகிறோம்... ஊடகம் எழுதுகிறது.... ’’கல்லூரி அங்கீகாரம் ரத்தானதால் மூன்று மாணவிகள் தற்கொலையென்று’’.

’’கல்வி எப்போதும் அரசின் கைகளில்தான் இருக்கவேண்டும். அது ஒரு குவிண்டால் இன்னவிலையென்று கூவிப்பழக்கப்பட்ட வியாபாரிகளின் கையில் சிக்கி சீரழியக்கூடாது’’ என்று தன் உயிரைத்திருகி நம்மீது எறிந்துவிட்டுப்போயிருக்கிற தோழிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியென்பது நாம் வசிக்கும் பகுதிகளில் உள்ள கல்விக்கூடங்களில் உடனடியாக ஓர் ஆய்வை நிகழ்த்துவதிலும், மத்திய மாநில அரசுகளின் கல்விக்கொள்கைக்கு எதிரான போராட்டங்களிலும்தான் அடங்கியிருக்கிறதுhttps://www.facebook.com/photo.php?fbid=10154047991226807&set=a.10151453493681807.554597.723361806&type=3&theater

Comments

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் ...

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள்...

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி சுமந்துவரும் இசை குறிப்புகள் - நன்றி ராஜா ராமசாமி

   வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த , அந்த வனமும்   நீண்டு நெடிந்து பரந்திருந்தது .  விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது . ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த     வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் , ‘ காடுகொன்று நடாக்கிய ’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது . மலைகளை ஒட்டியிருந்த     சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள      மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது . வந்தேறிகள்     அத்தோடு நிற்கவுமில்லை . குன்றுகளில் புகலிடம்தேடி       இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது   மலைத்தாரம்   ( புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை     தொடர்ந்து நிகழ்த்தியது . அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே    ...