573 வகையான பழங்குடிகள் இங்கே வாழ்கிறார்கள் . அவர்களின் மொத்த மக்கள் தொகை 67 மில்லியன்பேர்க்கு மேல் என்கிறது அரசு ஆவணம். ஆனால் இதுவரை உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கைகள், பெரும்பான்மை சமவெளிமக்களை கருத்தில்கொண்டேதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகளின் உண்மையான வாழ் நிலையையோ அவர்களின் பிரச்சினைப்பாடுகளையோ கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதற்கு இக்கொள்கைகளில் உள்ள பல சரத்துக்கள் சாட்சியாக நின்றுகொண்டிருக்கிறது . பல்வேறு முயற்சிகள் எடுத்தபின்னும் பழங்குடிகள் கல்விக்கு வெளியே நின்றிருப்பதற்கு இதுவே முக்கியமான காரணமாகப்படுகிறது
பிரிட்டிஷ் அரசின் ஆளுகையின்கீழ் இந்தியா இருந்தபோது பழங்குடிகளுக்கான கல்வி, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது விரும்பப்படவில்லை. அதற்குப் பதிலாக பழங்குடிப்பகுதிகளில் கிருத்துவ மிஷினரிகள் கல்விப்பணிகளை செய்ய அனுமதித்தினர்
இந்திய சுதந்திரத்திற்குப்பிறகு உருவாக்கப்பட்ட பல கல்விக்கொள்கைகள் பழங்குடிகளின் பார்வையில் ஏற்படுத்தப்படவில்லை ஆனால் அவற்றில்கூட ஒரு கரிசனம் இருந்தது. ஆனால் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிற கல்விக்கொள்கை 2016 ன் வரைவு அறிக்கை, முழுக்க முழுக்க குலக்கல்விமுறையை நோக்கி நகர்த்தும் ரகசியத்திட்டத்தோடும் அன்னியர்களின் கட்டளைக்கு கீழ்படிந்தும் தயாரிக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கிறது. இவற்றை திரும்பப்பெறுவதுடன் பழங்குடி கல்வியாளர்குழுவை அமைத்து அவர்களின் கருத்து கேட்புக்கு பிறகு கல்விக்கொள்கை 2016 ஏற்படுத்தப்படவேண்டும்
சில பரிந்துரைகள்
• உண்டுறைவிடப்பள்ளிகள் PPP என்னும் public private partnership மூலம் தனியாருக்கு ஒப்படைப்பதை கைவிடவேண்டும் சில உண்டு உறைவிடப் பள்ளிகள் மடங்களுக்கு கையளிக்கப்பட்டது. அங்கே சைவ உணவுக்கு முக்கியத்துவம் அளித்து முட்டைகூட உணவில் தவிர்க்கப்பட்டது. அதிகாலையில் எழுப்பி அவர்களுக்கு சம்பந்தமில்லாத சமஸ்கிருத மந்திரங்களை மனனம் செய்யக் கட்டயாப்படுத்தப்பட்டார்கள். இவையெல்லாம் நம்மிடம் ஆவணமாக இருக்கிறது. ஆகவே உண்டுறைவிடப்பள்ளிகளை அரசே நடத்தவேண்டும் அல்லது பழங்குடிகளின் கூட்டுறவு சங்கம் , பழங்குடிகளால் இயக்கப்படும் அமைப்புகளுக்கு கையளிக்கப்படவேண்டும்
• கற்பித்தல் அந்தந்த பழங்குடிகளின் மொழியிலேயே இருக்கவேண்டும்
• பழங்குடிநலத்துறையின்கீழ் கீழ் செயல்படும் பள்ளிகளின் கண்காணிப்பும் மதிப்பீடும் ஆழமாக செய்யப்படுவதில் சுணக்கமே நீடிக்கிறது ஆகவே பழங்குடிநலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து கல்விச்சாலைகளையும் கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்படவேண்டும்
• உள்ளூரில் உள்ள கற்பித்தலில் ஆர்வமுள்ளவர்களைக் கண்டுணர்ந்து அவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் பயிற்சியளித்து பள்ளிகளில் நியமிக்கவேண்டும் அதுபோலவே தற்போது பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பழங்குடிகள்குறித்த Sensitization பயிலரங்குகள் வருடத்துக்கு இரண்டுமுறையாவது வழங்கப்படவேண்டும். ஆசிரியர்களை நியமிக்கும் உரிமையில் பழங்குடி மூத்தோரின் தலையீடு கட்டாயம் இருக்கவேண்டும்
• பழங்குடிகள் பெரும்பாலான பகுதிகளில் வேலைக்காகவும் இதர காரணங்களுக்காகவும் இடம்பெயர்ந்துபோவது அடிக்கடி நடக்கிறது மேலும் நாடோடிப்பழங்குடிகள் தனக்கே உரித்தான பாரம்பரியத்தோடு அடிக்கடி இடம்பெயர்ந்து வாழ்கிறார்கள் அவர்களுக்கென்று சிறப்புத்திட்டங்கள் ஏற்படுத்தப்படவேண்டும். இடப்பெயர்வாகி வாழும் இடங்களில் இங்கே படிக்கும் அதே கல்வியை இடம்பெயர்ந்து பணிபுரியும் இடங்களில் உள்ள பள்ளிகளில் கொடுக்கலாம் இதற்கென சிறப்பு card system அறிமுகப்படுத்தப்படவேண்டும் அல்லது Barefoot teachers நியமிக்கவேண்டும் அல்லது seasonal hostels ஏற்படுத்தவேண்டும்
• 100 சதவீத தேர்சியை இலக்காகக்கொண்டு 9 மற்றும் 11 ஆம் நிலையில் படிக்கும் சுமாரான மாணவர்களை பெற்றோரை அழைத்துப்பேசி வற்புறுத்தி இணங்கச்செய்து பள்ளியிலிருந்து நீக்கப்படுகிறர்கள் அதை கண்காணிக்க 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் இடைநிற்கும் மாணவ்ர்களின் மாற்றுச்சான்றிதழ் பெறும் திட்டம் மாவட்ட கல்வி மையத்தோடு இணைக்கப்படவேண்டும் அதற்கென குழு ஒன்று ஏற்படுத்தபடவேண்டும் அந்தக்குழுவில் பழங்குடி அமைப்புகளுக்கு உறுப்பினர்பொறுப்பு வழங்கப்படவேண்டும்
• மேற்படிப்பில் இடைநிற்கும் நிலை பெரும்பாலும் கல்லூரிகளின் தூரம் காரணமாகவே நிகழ்கிறது ஆகவே 20 கிலோமீட்டருக்கு ஒரு கல்லூரி இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும் மேலும் extension centers மேல்நிலை பள்ளிகள் செயல்படும் பகுதிகளின் அமைக்க பெரிய பல்கலைகழகங்களை முன்வரவைக்க ஏதுவான சூழல் ஏற்படுத்தப்படவேண்டும்
• சிறப்பு பணியாளர் அல்லது உளவியல் ஆலோகர்கள் பழங்குடி பள்ளிகளுக்கு நியமிக்கப்படவேண்டும் நேரடி களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு அவர்கள் குழந்தைகளின் வருகைப்பதிவுகளில் கல்விகற்க்கும் ஆர்வங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தயார்படுத்தப்படவேண்டும்
• பாடத்திட்டம் curriculum development பழங்குடிசமூகத்தை வைத்தே உருவாக்கப்படவேண்டும் மேலும் அது அவர்கள் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி இருக்கவேண்டும் அவர்களைக்கொண்டு உருவாக்கப்படமுடியாத பாடத்திட்டங்களை மறுஆய்வுசெய்யவும் அவர்களுடைய யோசனைகளை கேட்டுப்பெறும் வகையில் நெகிழ்வுத்தன்மை உடையதாகவும் இருக்கவேண்டும்
• Exchange classes வாரம் ஒருமுறை அருகாமை பள்ளிக்கும், மாதம் ஒருமுறை சமவெளிப்பள்ளிகளுக்கும் அழைத்துசென்று அங்கு நடக்கும் வகுப்புகளில் பங்குபெறும் திட்டம் ஏற்படுத்தப்படவேண்டும் .அது மாணர்களின் கற்கும் திறனை விரிவடையச்செய்யவும் சமவெளி மாணவர்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் வலிமையை அவர்களுக்கு ஏற்படுத்தும் . பள்ளிகளில் மாணவர்களின் வருகையையும் அதிகரிக்க உதவும்
• பத்தாம் வகுப்பிலேயே கணிதமும் அறிவியலும் வரப்பெறாத மாணவ்ர்களை A B என்று வகைப்படுத்தி மற்ற பாடங்கள்மட்டுமே படிக்கும் நிலைக்கு தள்ளுவது எதிர்காலத்தில் அறிவியல் தேவைப்படும் ஆய்வுகூடம் சம்பந்தமான பணிகளைக்கூட பெறமுடியாத நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்பிருக்கிறது. இம்முறைய திணிப்பதால் பெரிதும் பாதிக்கப்படுவது பழங்குடி மக்களாகத்தான் இருக்கும் ஆகவே 10 ஆம் நிலைக்கு மேல்தொழிற்கல்விக்கு இடம் அளிக்கவேண்டும் அதுவும் தொழிற்பயிற்சி மையங்கள் பழங்குடிகள் பகுதியில் அமைக்கப்படவேண்டும்
• இடைநிற்றல் பெரும்பாலும் 5, 8 ,11 வகுப்ப்புகளில்நிகழ்கிறது அது ஆரம்பப்பள்ளியில் இருந்து நடுநிலைப்பள்ளிக்கும் நடுநிலைப்பள்ளியில் இருந்து உயநிலைப்பள்ளிக்கும் உயர்நிலைப்பள்ளியில் இருந்து மேல்நிலைப்பள்ளிக்கும் மாறும்போது நிகழ்கிறது இதைத்தடுக்க அனைத்து வகுப்புகளும் அடங்கியே ‘ஒரேபள்ளித்திட்டம்’ விடுதி வசதியுடன் குறிப்பிட்ட தொலைவுக்கு ஒன்று மைக்கப்படவேண்டும்
• தண்டனைப்பகுதியாக கணக்கிட்டே பழங்குடிகளின் பகுதிகளில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்நிலைமாறி ,அர்பணிப்பும் ஈடுபாடும் கல்வியில் புதியவற்றை சாதிக்கும் எண்ணம்கொண்ட ஆசிரியர்களையே பழங்குடி பகுதிக்கு நியமிக்கப்படவேண்டும்
• பழங்குடிகளின் பண்பாடு கலை மொழி ஆகியவற்றிற்க்கு புத்துணர்வு அளிப்பதன்மூலமே பழங்குடி குழந்தைகளின் வாழ்வும் மனமும் கல்வியும் பக்குவப்படவாய்ப்பிருக்கிறது ஆகவே இரவுகளில் முறைசார, பண்பாட்டு இரவுப்பள்ளிகள் இளையோர்கூடங்கள் போல் உருவாக்கப்படவேண்டும்• பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் இப்போது வெறும் கையெழுத்து பெறும் கழகமாக மட்டுமே செயல்பட்டு வருகிறது .அந்தக்கூட்டங்களை கிளஸ்டர் முறையில் ஓரிடத்தை தேர்வுசெய்து பெற்றோர்க்கான மாதாந்திரக்கல்வி விழிப்புணர்வு பயிற்சியாக மாற்றி அமைக்கவேண்டும். குறிப்பாக அவை உள்ளூர்விடுமுறை தினங்களை கணக்கில்கொண்டு நடத்தப்படவேண்டும். இது பெற்றோர்களின் கூட்ட வருகையை அதிகரிக்கவும் கல்விகுறித்த விழிப்புணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்தும்
• பழங்குடிப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணியிடத்திலேயே தங்கும் வசதிகள் செய்துதரப்படவேண்டும்
• விடுதியில் தங்கியிருந்தாலும் ஆசிரியர்கள் மாணவர்களின் ஊரில் வாரம் ஒருமுறையாவது தங்கி பொதுவகுப்புகளை நடத்தவேண்டும்
• பெரும்பாலான பழங்குடிகளின் நேரம் காலம் சமவெளி பண்பாட்டிலிருந்து மாறுபட்டது, அவர்களுடைய பள்ளி நேரத்தை பள்ளியின் நாட்களில் அவர்களோடு கலந்து மாற்றம் செய்யவேண்டும்
• பள்ளிகளில் சத்துணவுத்திட்டம் செயல்படுகிறது இந்த சத்துணவுத்திட்டங்களில் அவர்களின் பாரம்பரியமான உணவுகள் ஒரு காலத்திலும் இடம்பெற்றதில்லை வாரம் ஒருமுறையேனும் அவர்கள் உணவுகள் கொடுப்பது பள்ளியோடு இன்னும் நெருக்கமாக அவர்களை உணரச்செய்யும்
• குழந்தைகளின் உடல்நலம் கருத்தில் கொள்ளப்பட்டு ஊரக மருத்துவ திட்டத்தோடு இப்பள்ளிகள் இணைக்கப்படவேண்டும்
• அங்கன்வாடிகள் அமைப்பதற்கு குறைந்தபட்சம் 25 குழந்தைகள் வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. பழங்குடி பகுதிகளில் அந்த வரையரையறையை தளர்த்தி மாற்று முறைகளை பரிசீலிக்கவேண்டும் உதாராணமாக Community anganwadis இது உள்ளூர் ஆசிரியர்களை வளர்த்தெடுப்பதற்க்கும் உதவிகரமாக இருக்கும்
• பழங்குடிகளின் கற்றல்முறை எப்போதும் மடைமாறிவருவது அதுபோன்ற ஏதுவான சூழலும் மகிழ்சிகரமான இயல்பான கற்பித்தல்முறையை கையாளவேண்டும் கற்பிக்கும் கல்வி உபகரணங்கள் பழங்குடிகளின் வாழ்வில் இருந்தே எடுக்கப்படவேண்டும் .
பழங்குடிகளின் குழந்தைகள் வித்தியாசமான சமூக சூழ்நிலையிலிருந்தும் வஞ்சிக்கப்பட்ட பின்னனியிலிருந்தும் வருகிறார்கள் என்பதை உணர்ந்து கற்பிக்கும் நிலை இங்கு வேண்டும் இதுவரை கடைபிடித்துவந்த கல்விகொள்கையால் பெரும்பாலான மாணவர்கள் மிகக்கடுமையாகப்போராடி இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் நின்று தங்கள் எதிர்காலத்தை இழந்திருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை பழங்குடிகளின் கல்வியானாது எப்போதும் அவர்களுக்கு உவப்பான அவர்களை மேலெடுத்துவரும் அக்கறையோடு செய்யப்படவில்லை ,முழுக்க முழுக்க சம்பந்தமில்லாதவர்களால் உருவக்கப்பட்டு திணிக்கப்பட ஒன்றாகவே காலம்காலமாக இருந்து வருகிறது
மிகக்கூர்மையாக அப்சர்விங் திறன்கொண்ட ஒரு சமூகத்திலிருந்து வருகிற குழந்தைகளை, தவறான முறைகளால் பாழடிக்கின்ற வேலையை கல்விக்கொள்கைகள் இங்கே தொடர்ந்து செய்துவருகிறது
ஒவ்வாத முறைகளையும் கற்பித்தல்திட்டங்களையும் பாடத்திட்டங்களையும் சதித்திட்டங்களையும் உள்ளடக்கி புறவாசல்வழியாக வரும் இந்தக்கல்விக்கொள்கை திரும்பப்பெறவெண்டும்
https://www.facebook.com/notes/lakshmanasamy-odiyen-rangasamy/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2016-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1401000373260770
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment