கபாலி பார்ட் 1
வடகலையென்றும் தென்கலையென்றும் வைணவத்தில் இரண்டுபிரிவுகள் இருந்ததைப்போலவே
சைவத்திற்குள்
1 வார்மம்,
2 பாசுபதம்,
3 காளாமுகம்,
4 பைரவம்
5 மாவிரதம்,
6 கபாலிகம்,
என ஆறு உட்பிரிவுகள் இருந்தது
ஆறு பிரிவுகளில் கபாலிகம், காளமுகம் முக்கியமானபிரிவுகள் ,
இந்த இரண்டு பிரிவுகளுக்குள் நடந்த சண்டை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது
அது இயல்பான வழிபாட்டுமுறைக்கும் சமஸ்கிருத வழிபாட்டுமுறைக்கும் இடையே நடந்த மோதல்
இன்னும் எளிமையாகச்சொன்னால்
தலக்கறி சாப்பிடுபவர்களுக்கு தயிர்வடை சாப்பிடுபவர்களுக்கும் இடையே நடந்த சண்டை
ஒரு கட்டத்தில் காளமுகம் அல்ட்ரா பில்டப்புகள் செய்து கபாலீகத்தை லபக்கென்று விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது ஆனால் காளமுகத்தால் செரித்துக்கொள்ளமுடியாத ஒரு பிரிவினர் தனித்தே வாழ்ந்தனர்.
****************
’
கபாலி பார்ட் 2
கபாலிகள்.. எளிய.மக்கள் .. ஒதுக்கப்பட்டவர்கள் அவர்களின் உறைவிடம் மயானக்காடு. அவர்கள் தானம் வாங்கி உண்ண பயன்படுத்திய பாத்திரம் மண்டை ஓடு’
முக்தியடைய அவர்கள் கடைபிடித்த பஞ்சமகரம் என்னும் தாந்தீரிகம் சாதாரணமனிதர்களின் அன்றாட நடவடிக்கைதான்.
1 மாத்யம் (கள்ளு)
2 மைதுனம்(போகம்)
3 மைச்சியம்( மீன்)
4 மாம்ஸம் (கறி)
5 மதுரம்
**********************
கபாலி பார்ட் 3
கபாலிகத்தையும் புத்தத் துறவிகளையும் கேவலமாய்க் கலாய்க்கும் சமஸ்கிருத நாடகம்மத்தவிலாசம்.
இது அந்தணர்களுக்கு பல்லக்கு தூக்கிய பல்லவ அரசனால் எழுதப்பட்டது
இது அந்தணர்களுக்கு பல்லக்கு தூக்கிய பல்லவ அரசனால் எழுதப்பட்டது
நாடகம் இப்படித்தொடங்குகிறது
சத்யசோமன் என்னும் கபாலி, தன் மனைவி தேவசோமாவோடு சரக்கடிக்கப்போகிறார்
அங்கே அவர்கள் கையில் வைத்திருந்த உணவு உன்ணப்பயன்படுத்தும் திருவோடு( மண்டையோடு) காணாமல் போகிறது.
அதைத்தேடு தேடென்று தேடுகிறார்கள் ஆனால் அது கிடைத்தபாடில்லை
தொலைந்துபோகும்போது அந்த மண்டையோட்டில் கொஞ்சம் மாமிசம் இருந்திருக்கிறது அதனால் அதை நாயோ அல்லது ஒரு புத்த துறவியோதான் எடுத்திருக்கவேண்டும் என சத்தியசோமன் எண்ணுகிறான்.
எதிரே வந்த புத்த துறவியிடம்சத்திய சோமன் வம்பிழுக்கிறான்
பாசுபதன் என்னும் இன்னொரு துறவி இருவரையும் விலக்கிவிட்டு நாட்டாண்மை செய்கிறான்
நடுநிலைநக்கி பசுபதன் போட்ட மொக்கையில் மண்டைகாய்ந்த புத்த துறவி தொல்லை தொலையட்டும் என்று தனது சொந்த திருவோட்டைசத்தியசோமனிடம் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிறார்
அந்த நேரம்பார்த்து ஒரு நாய் திருடு போனதாய் சொல்லப்பட்ட கபாலத்தைக் கவ்விக்கொண்டுபோகிறது அதை ஒரு பைத்தியகாரன் பிடுங்கிக்கொள்கிறான்
பைத்தியகாரனிடம் பிடுங்கப்பட்ட கபாலஓடு இறுதியில் சத்திய சோமனிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இங்கே எண்ட் கார்டு போட்டுவிடுகிறான் முதலாம் ம்கேந்திரவர்ம பல்லவன்
இங்கே எண்ட் கார்டு போட்டுவிடுகிறான் முதலாம் ம்கேந்திரவர்ம பல்லவன்
Comments
Post a Comment