Skip to main content

சூயஸ் என்னும் சூனியக்காரன்

கோவையில் உள்ள சுடுகாடுகளின் கட்டுப்பாடு, ஈஷாவிடம் இருக்கிறது
சாலைகளின்கட்டுப்பாடு, ஐவிஆர் எல்டி& எல் என் டி கம்பனிகளிடம் இருக்கிறது
மருத்துவமனைகளின் கட்டுப்பாடு குறிப்பிட்ட கம்பனிகளிடம் இருக்கிறது
கோவையில் உள்ள குளங்களின் கட்டுப்பாடு, ஒருகட்டத்தில் சிறுதுளியிடம் இருந்தது
கடைசியாக மாநகராட்சியின் நீர்க்கட்டுப்பாடு சூயஸ் கம்பனியிடம் சிக்கியிருக்கிறது
இப்படி நாலாப்புறமும் கட்டப்பட்டிருக்கிற பெருநகரம்,ஒரு பம்பாய்மிட்டாய்காரனின் கையிலிருக்கும் பொம்மைபோல் அசையப்போகும் ஒரு கணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசென்று ஒன்று இருப்பதாகவும், அது இயங்குவதாகவும் இன்னும் நம்புவது ஆச்சரியமளிக்கிறது அது வெறும் மூடநம்பிக்கையேதவிர, வேறெதுவும் இல்லை.
சூயசை பொறுத்தவரை அது மிகப்பெரிய நிறுவனம்.அதன் வலைப்பின்னல் பிரம்மாண்டமானது
அதன் வியாபாரம் குடிநீரோடு மட்டும் நிற்காது. சாக்கடை நீரைமறு சுழற்சி செய்வது, அதை கம்பனிகளுக்கு விற்பது, கம்பனிகளுக்கு ட்ரீட்மெண்ட் பிளாண்ட் அமைப்பது, என இன்னும் இதோடு தொடர்புடைய வியாபாரங்களின் பட்டியல் கற்பனைக்கெட்டாத அளவுக்கு நீளமானதாக இருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனம், கார்மெண்ட் . கம்பனிகளுக்கு நீர்சப்ளை செய்யும் இதுபோன்ற வியாபரம் ஒன்றை,சோதனைமுறையில் திருப்பூரில் செய்துவருகிறது. கிட்டத்தட்ட அது சூயஸ் போன்ற ஒரு அட்டம்ட்தான். ஆனால் சூயசின் முன் அம்பானி கத்துகுட்டிதான்.
வங்கிகள், விவசாயிக்கு பயிர்க்கடன் வழங்குவதுபோல,சூயஸ் கம்பனி, தொழில் நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் நீர்க்கடன்களை வாரி வழங்குகிறது
உங்கள் வீட்டிலோ கம்பனியிலோ பைப்லைன் மாட்டவோ, மீட்டர் மாட்டவோ, நீர் இறைப்பான் அமைக்கவோ,தண்ணீர்தொட்டி கட்டவோ ட்ரீட்மெண்ட் பிளாண்ட் அமைக்கவோ பணம் தேவைப்பட்டால் அதற்கான கடனையும் தருகிறார்கள் ஆனால் வேலையை அவர்கள்தான் செய்வார்கள்.
ஒருமுறை நீர்க்கடனை வாங்கிவிட்டால் அப்பசப்பத்தில் நீங்கள் அந்தக் கம்பனியின் பின்னலில் இருந்து வெளியே வரமுடியாது அவ்வளவு நுட்பமான பின்தொடர்தல் யுத்திகள் சூயசில் இருக்கிறது
நீருக்கு செயற்கையான ஒரு டிமாண்டை ஏற்படுத்தி, லிட்டரின் விலையை கூடுதலாக்கி விற்றுக்கொள்ளமுடியும்.
தேவைப்பட்டால் பல்வேறு காரணங்களைக்காட்டி நீர் அளிப்பை நிறுத்திவைக்கக்கூட முடியும்.
அப்போதுசூயஸ் கம்பனியின் டைரக்டர் மாநகரின் நீர் மேயராக இருப்பார்.இது சிலருக்கு கற்பனையாகக்கூடத்தோன்றாலம்
பொலிவியாவில் 2000 த்தில் நடந்த கோச்சம்பாம்பா போராட்டம் நம் கண்முன் ரத்தசாட்சியாக இருக்கிறது
கோச்சம்பாம்பா, பொலிவியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்று . நகரத்துக்கான நீர் விநியோகத்தையும் பங்கீட்டையும் சரியாக செய்யமுடியவில்லை, வரும் பிரச்சினைகளை சமாளிக்கமுடியவில்லை, என்று கூறிய பொலிவிய அரசாங்கம், நீரளிக்கும் பணியை அமெரிக்க கம்பனியான இண்டர்நேசனல் வாட்டர் லிமிடேட் (IWS), இத்தாலியின் எடிசன் இண்டர்நேசனல், ஸ்பெய்னின் அபென்கோ,ஆகிய பன்னாட்டு கம்பனிகளின் கூட்டுநிர்வாகத்துக்கு தாரைவார்த்துக்கொடுத்தது
கொஞ்சகாலம் நல்லபிள்ளையாக இருந்த பன்னாட்டுகம்பனிகளின் கூட்டு நிர்வாகம், பின்பு தனது கொடூரமுகத்தை காட்ட ஆரம்பித்தது. நீரின் விலையையும், நீருக்கான வரியையும் நான்கு மடங்காகக்கூட்டி வசூலிக்க ஆரம்பித்துவிட்டனர்.. நகரத்தின் மொத்த மக்களும் திண்டாடிப்போயினர். ஒரு நீர்ப்பஞ்சம் என்ற அளவுக்கு நிலமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது.
பல்வேறு வடிவங்களிலும் கிடைக்கும் நீரை காய்ச்சிக் குடிக்கவும் மழைநீரை சேமித்து மாதக்கணக்கில் வைத்திருந்து பயன்படுத்தவும் ஆரம்பித்தனர்
ஆனால் இந்த கம்பனிகள்
’’ எங்கள் வியாபரப் பரப்புக்குள் எந்த வடிவத்திலிருக்கும் நீருக்கும் நாங்கதான் அத்தாரிட்டி என்றனர். எங்கள் கம்பனியிடம் மக்கள் இதற்கான லைசன்ஸை பெற்றுக்கொண்டு நீரைப்பயன்படுத்தலாம்., லைசென்ஸ் இல்லாமல் எடுக்கப்படும் ஒவ்வொரு சொட்டு நீருக்கும் அபராதம் கட்ட நேரிடும்''
என்று எச்சரித்தனர்
வெகுண்டெழுந்த கோச்சம்பாம்பா நகர மக்கள், பொலிவிய அரசுக்கு எதிராகவும் கூட்டுக்கம்பனிகளுக்கு எதிராகவும் இதை பின்னிருந்து இயக்கிய உலகவங்கிக்கு எதிராகவும் வீரம்செரிந்த யுத்தம் ஒன்றை,நகரின் வீதிகளில் ஒய்வொழிச்சலில்லாமல் பல்லாண்டுகாலம் நடத்தினார்கள்.
இறுதியில் அரசு பணிந்து பொதுவிநியோகம் மக்கள் அதிகாரத்தின்கீழ் ஒப்படைக்கப்பட்டது
இந்த இடத்தில் நின்றுகொள்வோம் திரும்பிகோவைக்கு வருவோம்
2045 ஆம் ஆண்டு குடிநீர் தேவையை மனதில் வைத்து செய்யப்பட்ட ஏற்பாடு என்று சூயசின் தூதுவர்களான கோவைமாநகராட்சி அடியாள்கள் சொல்கிறார்கள்.
கோச்சம்பாம்பா அனுபவத்தை வைத்துப்பார்க்கும்போது இங்கே சிறுவாணி , பில்லூர் அணைகளின் கட்டுப்பாடுகள் தன்னியல்பாக சூயசின் கைகளுக்குள்போய்விடும் அபாயம் இருப்பதை புறம்தள்ளமுடியவில்லை
அவர்கள் 2045 ஐ இலக்காக வைக்கும்போது நாம் 2050 ல் இதன் கன்ட்ரோல் பேனல்கள் யாரிடத்தில் இருக்கும் என்பதை மனதில் வைத்து தொலைநோக்குள்ள
பல கட்டங்கள்கொண்ட தலைமுறை கடந்த போராட்டத்திட்டங்களோடு களம் காணவேண்டும் .
சொல்லாமல் கொள்ளாமல் விற்றுவிட்டார்கள் என்று சில நண்பர்கள் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் அவர்கள் செய்யவில்லை வேறுமாதிரி ஒரு அனுமதியைக்கேட்டிருக்கிறார்கள்.
எப்போதும் கார்ப்ரேட்டுகளிடம் ஒரு தொழில் நேர்த்தியும் செய்நேர்த்தியும் இருக்கும். இந்த விசயத்திலும் கச்சிதமாக அதைச்செய்தார்கள்.
ஒருகட்டத்தில் இந்த 'நீர்ப்பேச்சு' நகருக்குள் சம்பந்தமில்லாமல் பல்வேறு கட்டங்களில் அடிபட்டுக்கொண்டேஇருக்குமாறு பார்த்துக்கொண்டார்கள்
முதலாவதாக, குழாய்களில் இருக்கும் நுண்துளை, உடைப்புகள், போன்றவற்றால் நீர் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சரியாக போய் சேர்வதில்லை என்று அடிக்கடி அறிவிக்க ஆரம்பித்தார்கள்.
இரண்டாவதாக ,சிறுவாணியில் தண்ணீர் குறைந்துவிட்டது இன்னும் மூன்று மாதங்களுக்கு தண்ணீர் கிடையாது.விரைவில் ஒப்பந்தம் முடிந்துவிடும் பிறகு நிரந்தரமாய் கிடையாது
என்ற பீதியை சுற்றுக்குவிட்டார்கள்
மூன்றாவதாக, குடிநீர் வடிகால் வாரியத்தின் சில அதிகாரிகள் இந்த திட்டம்குறித்து வானளாவப்புகழ ஆரம்பித்தார்கள்
நான்காவதாக, பெயர் குறிப்பிடாத அதிகாரி தெரிவித்தார் என்ற செய்திகள் குறிப்பிட்டகால இடைவெளியில் செய்திகளில் வருமாறு பார்த்துக்கொண்டார்கள்
உதாரணத்துக்கு
சென்ற வருடம் வந்த பிரஸ்நோட்களில்
ஒன்று
Coimbatore: The city corporation has finally issued the work order for the much awaited 24x7 water supply project to a French company named Suez Infra.
Officials said the company has extensive experience in implementing similar water supply projects in Paris, Shanghai and East Delhi. The firm had recently taken up a similar project in Kolkata, they said.
“The company has vast experience in this area. We will sign the final agreement soon. The contract will be for five years — four years for construction of infrastructure and one year for conducting a study,” said an official who didn’t want to be named.
Sources with the corporation said the official announcement in this regard would be made soon as they were yet to sign some final agreements.
The project estimated at Rs 556.57 crore involves replacing 1467km of pipeline in 60 wards and setting up of 29 new overhead tanks. It would benefit 10.5 lakh people in the city. The project was proposed keeping in mind the population of the city in 2045.
“For now, we will only focus on the city limits. Later, the project will be extended to the added areas as well,” the official said. For the added areas, the corporation is also working on source augmentation which involves laying a separate pipeline from Pillur dam to the city to increase the water consumption.
“We have started preparing a detailed project report for Pillur III scheme and once the state government approves it, 24x7 water supply project for added areas will be taken up simultaneously,” the official said.
City’s present water supply sources include Pillur and Siruvani. While 125 MLD is drawn from Pillur daily, 75 MLD is drawn from Siruvani.
When asked if the city has enough sources for the 24x7 water supply scheme, senior engineers said the city has always had the resources for this scheme. “The problem has always been distribution system, which is out-dated. British-era pipes get damaged or broken every day, creating a hole in the coffers of the corporation. Also, the current pipes are very narrow. The project will see relaying of pipes for 1,467km,” they said.
ஐந்தாவதாக, வெளிப்படையானஅறிவிப்பு வந்தபின், எல்லாவற்றையும் மீறி எழும் போராட்டங்களை ஒடுக்க ஏதுவாக, கோவையில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்
மீண்டும் பொலிவியாவுக்கு வருவோம்
பொலிவியமக்கள் போர்களால் வளர்ந்தவர்கள். திட்டமிட்ட போர்முறைக்கு பழகியவர்கள். அனைத்துதரப்பு மக்களையும் இணைத்து போராட்டங்களை முன்னெடுக்கும் பாரம்பரியமான முறை அவர்களிடத்தில் இருக்கிறது ஆனால் இங்கு அப்படியான முறை இல்லை
இங்கே நடந்த உக்கடம் டோல்கேட் கைப்பற்றும் போராட்டங்கள் இஸ்லாமியர்களாலும் தலித்மக்களாலும் முன்னெடுக்கப்பட்டது. அவர்களின்றி கோவையை மீட்டெடுப்பது சாத்தியமில்லாத ஒன்று. அனைவரும் நகரவேண்டிய புள்ளி அதுதான்
நடந்தால் நாலு வழிச்சாலை எட்டுவைத்தால் எட்டுவழிச்சாலை. இடதுபுறம்
மீத்தேன் அலை. வலது புறம் ஸ்டெர்லைட் ஆலை இப்போது தமிழகம் பன்னாட்டுக்கம்பனிகளின் வேட்டைக்காடு
நாம் இணைந்திருக்கவேண்டிய களம் தெளிவாக இருக்கிறது



வெளியிட்டமைக்கு  நன்றி  (மா லெ தீப்பொரி ஜூலை இதழ்)

Comments

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் ...

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள்...

சப்பெ கொகாலு - இருளர்களின் வலி சுமந்துவரும் இசை குறிப்புகள் - நன்றி ராஜா ராமசாமி

   வரலாற்றின் துவக்ககாலத்தில் மலையும் மலையச்சார்ந்திருந்த , அந்த வனமும்   நீண்டு நெடிந்து பரந்திருந்தது .  விதவிதமான பறவைகளும் அபூர்வமான விலங்குகளும் பெருகிச்செழித்திருந்தது . ஆனால் வளம் கொழிக்கும் அந்த வனப்பகுதியை கண்டறிந்த     வெறிகொண்ட வந்தேரிகள் மனசாட்சியற்று அம்மண்ணின் பூர்வகுடிகளின் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் , ‘ காடுகொன்று நடாக்கிய ’ வீரவரலாறாக பலவகையில் பாடப்பெற்றது . மலைகளை ஒட்டியிருந்த     சமவெளிகளில் வாழ்ந்துகொண்டிருந்த பழங்குடிகளை வந்தேரிகளின் வெறியாட்டம் அருகிலுள்ள      மலைகளின்மீது ஈவுஇரக்கமின்றி விரட்டியடித்தது . வந்தேறிகள்     அத்தோடு நிற்கவுமில்லை . குன்றுகளில் புகலிடம்தேடி       இயற்கையினையும் இயற்கை உயிர்சமன்பாட்டையும் பேணிய அந்தப் பழங்குடிகளின் மீது   மலைத்தாரம்   ( புறநானூறு 393:1-10) பெற வேண்டி அழியட்டங்களை     தொடர்ந்து நிகழ்த்தியது . அதை அவர்களின் வணிக பெருவெற்றியாகவே    ...