வலியில்லாத, அலைக்கழிக்காத எதையும் என்னால் எழுதமுடியாது என்ற பிடிவாதத்தோடு தொடர்ந்து களத்தில் இயங்கும் ச பாலமுருகன் சோளகர் தொட்டிக்குப்பிறகு நீண்டஇடைவெளியெடுத்துஎந்தவிதஆர்பாட்டமுமில்லாமல் பெருங்காற்றை சமீபத்தில் கொண்டுவந்திருக்கிறார் யாரும் அதிகம் தொடாத ,போராட்டங்களோடு தான் பங்கெடுத்த களங்களை பின்புலமாக வைத்து மிகுந்த பிராசையோடும் அவருக்கே உரித்தான லாவகத்தோடும் கதைகளை அடர்த்தியாகப் பின்னியிருக்கிறார். வலியும் காயமுமாய் மெய்யின் சிலிர்ப்போடு அவ்வளவு சிறப்பாய் வந்திருக்கிறது பெருங்காற்று முதலிரண்டு கதைகளான ஒரு கடல் இருகரைகளும் வேர்மண்ணும் நம்மை ஈழ அகதிமுகாமுக்குள் விரல்பிடித்து அழைத்துபோய் நிறுத்தி நடுக்கமேற்றுகிறது. எழுத்துலகத்தின் வெளிச்சம் சொற்பமாய்பட்டிருக்கும் முகாம்களின் கோர வாழ்வை அப்பட்டமாகவும் அடிமனதின் வலியோடும் நின்று கதை சொல்லத்தொடங்கும்போதும் ஒரு புள்ளியில் கொண்டுபோய் நிறுத்தும்போதும் வேதனையில் உறையவைத்துவிடுகிறது வேர்மண்ணில் தற்காப்புப் பயிற்சி எடுத்த திலகன் காலச்சூழலில் நிர்கதியாக மண்டபம் முகாமில் அகதியாக நிற்பதும் ...