Skip to main content

சப்பெ கொகாலு - பொறைக்கலைஞர் ராஜேந்திரனுடனான ஒரு உரையாடல்

உங்க  பேரு  ஊரு எல்லாம் சொல்லுங்க?

எத்து பேரு ராஜேந்திர ஆகேகண்டி  கீழூரு 

என்ன வேலைக்கு போறீங்க?

என்னவேலை கெடய்க்குதோ அதுக்கு போறேன்  ஆமா நீவீரு எதுக்கு இதெல்லா கேக்கறே?

இல்ல நான் எப்படி இதையெல்லாம் அடிக்கறீங்கறத பத்தி படிக்கவந்திருக்கேன்.சொல்லுங்க

ஹேய்.. கேளுவி

இருள சனங்க  என்னென்ன இசைக்கருவிகளை வாசிக்கறாங்க?

ஒந்து பொறை இன்னொந்து தவிலு , அப்புறம் சால்ரா, கொகாலு, மிருதங்கம். மிருதங்கம் எப்பவாவது பஜனையில மட்டும் வாசிப்போம். இப்போ எங்காளுக ஜமாப்புகூட அடிக்கறாங்க.

இதுக்கு பொறைன்னு  பேரு.

இதுக்குந்தே செய்யற  பானைய கீழிருந்து வாங்கிட்டு வருவோம். வந்து மான்தோல  பதம் பண்ணி காயவெத்து கட்டிவெக்கோம். ஆட்டுத் தோலுலயும்  வெறையாட்டு தோலுலயும் கட்டிக்குவோம்.
இப்போ அப்படியில்லை மாட்டுத் தோலவெச்சு கட்டிக்கறோம்.

இத எப்படி குச்சி வெச்சு அடிச்சு வாசிப்பீங்களா?

ம்க்கூம்..... குச்சியெல்லாம் இல்லெ கழுத்துல கட்டி தொங்க போட்டுக்குவோம். வயித்துல நிக்கும். ஒரட்டாங்கை பக்கமா நெஞ்சோட சேத்து  இறுக்கி அப்படியே ரெண்டு பக்கமும் அடிப்போம்.  சோத்தாங்கை பக்கம்தான் பலமா ஓங்கி அடிக்கமுடியும். ஒரட்டாங்கைபக்கம் அப்படி பலமா அடிக்க முடியாது.


சுதி சேக்கறதுக்காக குப்பைகளைப் போட்டு சூடு செஞ்சு அடிச்சு பாப்போம். சுதி சேரலைன்னா மறுபடியும் கொஞ்சம்  சூடு செய்வோம். இப்படி நல்லா சுதி ஏறறவரைக்கும்  சூடு செஞ்சு அடிப்போம். ஒரு முறை சூடு செஞ்சாலெ அது பாட்டுக்கு  கும்கும்க்கு கும் கும்க்குன்னு எசச்சு கெடக்கும். ஒரு நாள் முழுக்க வெரப்பா இருக்கும், பிரச்சனையிருக்காது

மிருதங்கம் மாதிரியே இருக்கே இது?

இதுக்குதவில்ன்னு பேரு, இத மொதல்ல மரத்துல ஒரல் மாதிரி குழியில்லாம இருந்துச்சா. இத தட்டி தட்டிதான் பந்தி மானையெல்லாம் தொரத்துவாங்களாம். அடிச்சு அடிச்சு ஒரு பக்கம் குழியா ஆயிருச்சம். அப்புறமா அத திருப்பிப் போட்டு இன்னொரு பக்கமும் அடிச்சாங்களாமா. அந்தபக்கமும் குழியாரிச்சாம். அப்புறந்தா தோல வெச்சு ரெண்டுபக்கமும் கட்டி அடித்தாங்களாமா.  

இதுவும் வெளியில் இருந்துதான் வாங்கி வருவீங்களா?

ம்க்கூ நேமே செஞ்சுக்குவோ  கிளிய மரம் இசுவே மரம் , தாளிமரம்  இந்த மூன்று  மரத்துல இருந்து தோதான வாத கொண்டுவந்து  ரெண்டு பக்கமும் கொடஞ்சு கொடஞ்சு குழியாக்கி நெழல்ல காயவெச்சு அப்பப்ப தண்ணிய உட்டு பதமாக்குவோம்.   கொஞ்ச நாள் கழிச்சு மான் தோல கட்டி அடிச்சா இப்படி  குமு குமுகுமுக்குன்னு அடிச்சு கடக்கும்.

இந்த ஒன்ன மட்டும் தனியா அடிச்சுட்டு ஆடுவீங்களா?

ஹ ஹ ஹா..... இல்லே முடிகாது. இது பொறைக்கு  தம்பி மாதிரி, இது கூட இருந்தா அடிக்காக்கு நல்லா கெடாக்கு. பொறைய மண்ணுல செய்குவோ. தவில  மரத்துல செய்குவோ.   மண்ணு சத்தத்த உள்ள இழுக்கூ, மரம் அச்சா இல்லெ. சத்தத்த வெளிய தள்ளும். அதுனால ஒந்துக்கொந்து ஒத்தாசையா இருந்து ஆட்டத்தே எடுத்துக்குடுப்பின. 
  

Comments

  1. Hard Rock Hotel & Casino - MapyRO
    Hard Rock Hotel 경상남도 출장안마 & 군포 출장샵 Casino in Hollywood, FL. 3.7 mi (5.9 km) from 동두천 출장샵 Seminole Hard Rock Hotel & 여수 출장안마 Casino. Rating: 7.7/10 · ‎3,906 votes 서산 출장안마 · ‎Price range: $$

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கும்கி …

         ஆ னாலும்   என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது  ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும்.  மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும்,   சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து   எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் ,  வட்டங்களும் சதுரங்களும்   ஏற்றிவிட்ட   பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில்   சீட் போட்டா....... அந்த அரசியல்   மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில்   நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது    உறுத்தலாகத்தான் இருக்கிறது.   அப்பன்   மல்லூரி யை   ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் .   ஒரு மூப்பனுக்கான உடல் ...

இ .எம் .எஸ் கலைவாணனின் - ஒரு சவரக்காரனின் கவிதை மயிறுகள்

சரைப்பதுதான்  உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘  ‘கவிதை  எனக்கு மயிறு ’   என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது.    கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில்  அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த  ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட  கூட்டுச்சதியின்  வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள்   ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல  புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல்  சிறு வயதின் பல நினைவுகளை  தொடர்பெடுத்து தொடர்பெடுத்து   மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள்  மருத்துவர்கள் இவர்களெல்லாம்  யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள்    மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள்  காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள்...

சித்திராக்களும் மாரிகளும்

கோவையிலிருந்து வெகு தொலைவுதள்ளி அடர்வனங்களுக்குள்ளிருக்கும் பள்ளி ஒன்றிற்கு சென்றிருந்தோம் . சிண்டிகேட் வங்கியின் ஓய்வுபெற்ற மேலாளர் பார்த்திபன் குழந்தைகளுக்கான சீருடைகளை ஏற்பாடு செய்திருந்தார் அவரே நேரடியாகச் சென்று துணிகளை வாங்கி தைத்து எடுத்துக்கொண்டுவந்திருந்தார். 'நானும் உங்களோடு பைக்கிலேயே வந்துடறேன் சார்' கூடவே அமர்ந்துகொண்டு மொத்தமாக 80 கிலோமீட்டரை இருசக்கரவாகனத்திலேயே கடந்துவந்தார். குண்டும் குழியும், யானைப்பிளிறலும் நிறைந்த சாலையில் எந்த இடத்திலும் அவரிடத்தில் சலிப்பையோ களைப்பையோ காணமுடியவில்லை. வரும்வழியெல்லாம் மலைப்பகுதிகளில் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அக்கறையாகக் கேட்டுக்கொண்டே வந்தார்.. தனது தந்தை தொடக்கப்பள்ளி ஆசிரியாக இருந்ததை ஓரிரு இடங்களில் குறிப்பிட்டார். 11.40 க்கு பள்ளிக்கு போய்விட்டோம். காட்டில்கிடைத்த பூக்களைதொடுத்து ஒரு பொக்கேபோலாக்கிக்கொடுத்து குழந்தைகள் வரவேற்றார்கள் வாஞ்சையுடன் அதைவாங்கிக்கொண்டார் 'நோ..பார்மாலிட்டி' சொல்லிவிட்டு ஒவ்வொரு வகுப்பாய் ஒவ்வொருவராய் அழைத்து சீருடையைக் கொடுத்தார் அநேகமாக இது அவரது தந்த...