உங்க ஊர், பேரு? எத்து பேரு ரெங்கன். ஊரு ஆனைகட்டி. நான் எட்டாவது படித்திருக்கேமு. உங்கள எல்லாரும் கோகல் ரங்கன்னு சொல்லறாங்களே? நே, கோகால் நல்லா ஊதுவே. கொகால புடித்தாக்கா ஊதிகிட்டே இருப்பே. அதுனாலதான் சொல்லுகின எப்படி இதை கத்துகிட்டீங்க? எப்போயிருந்து கொகால வாசிக்கறீங்க? ஒரு 15 வயசிலிருந்து ஊதுகே. எத்து அப்பெ ஊதுவா, எங்க தாத்தாவும் ஊதுவா அவுங்ககூட ஆட்டத்துக்கு போவே. அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் இதுல நல்ல பேரு. அவுங்க கொகல் புடித்தாங்கன்னா ஆனேகூட மயங்கி நிக்கூம்பா! கொகால உடனே பழக முடிகாது.... காத்த இழுத்து உள்ளவெத்து மூச்சே கெட்டி ஊதுகோனு.. கஸ்டமாத்தான் கெடக்கும் கொஞ்சம் ஏமாந்த புல்லு போயி தொண்டக்குழியில சிக்கிக்கு. திருளின்னு ஒந்து கெடாக்கு. மொதல்ல அத ஊதி பழகோனும். அப்புறம் மங்கேன்னு ஒந்து கெடக்கு. அதையும் ஊதி பழகோனும். இது ரெண்டையும் யாரு ஊதறாங்களோ அவுங்கதா இந்த கொகால ஊத முடிகூ. எம்த்தாளுகாகிட்ட திருளி, மங்கே, கொகால், மூன்றுவகையா ஊதறது கெடாக்கு. திருளி, ஆயகுழல்தான் ஆறு கண்ணு இருக்கு. அ...