கோவையிலிருந்து வெகு தொலைவுதள்ளி அடர்வனங்களுக்குள்ளிருக்கும் பள்ளி ஒன்றிற்கு சென்றிருந்தோம் . சிண்டிகேட் வங்கியின் ஓய்வுபெற்ற மேலாளர் பார்த்திபன் குழந்தைகளுக்கான சீருடைகளை ஏற்பாடு செய்திருந்தார் அவரே நேரடியாகச் சென்று துணிகளை வாங்கி தைத்து எடுத்துக்கொண்டுவந்திருந்தார். 'நானும் உங்களோடு பைக்கிலேயே வந்துடறேன் சார்' கூடவே அமர்ந்துகொண்டு மொத்தமாக 80 கிலோமீட்டரை இருசக்கரவாகனத்திலேயே கடந்துவந்தார். குண்டும் குழியும், யானைப்பிளிறலும் நிறைந்த சாலையில் எந்த இடத்திலும் அவரிடத்தில் சலிப்பையோ களைப்பையோ காணமுடியவில்லை. வரும்வழியெல்லாம் மலைப்பகுதிகளில் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து அக்கறையாகக் கேட்டுக்கொண்டே வந்தார்.. தனது தந்தை தொடக்கப்பள்ளி ஆசிரியாக இருந்ததை ஓரிரு இடங்களில் குறிப்பிட்டார். 11.40 க்கு பள்ளிக்கு போய்விட்டோம். காட்டில்கிடைத்த பூக்களைதொடுத்து ஒரு பொக்கேபோலாக்கிக்கொடுத்து குழந்தைகள் வரவேற்றார்கள் வாஞ்சையுடன் அதைவாங்கிக்கொண்டார் 'நோ..பார்மாலிட்டி' சொல்லிவிட்டு ஒவ்வொரு வகுப்பாய் ஒவ்வொருவராய் அழைத்து சீருடையைக் கொடுத்தார் அநேகமாக இது அவரது தந்த
கோவையில் உள்ள சுடுகாடுகளின் கட்டுப்பாடு, ஈஷாவிடம் இருக்கிறது சாலைகளின்கட்டுப்பாடு, ஐவிஆர் எல்டி& எல் என் டி கம்பனிகளிடம் இருக்கிறது மருத்துவமனைகளின் கட்டுப்பாடு குறிப்பிட்ட கம்பனிகளிடம் இருக்கிறது கோவையில் உள்ள குளங்களின் கட்டுப்பாடு, ஒருகட்டத்தில் சிறுதுளியிடம் இருந்தது கடைசியாக மாநகராட்சியின் நீர்க்கட்டுப்பாடு சூயஸ் கம்பனியிடம் சிக்கியிருக்கிறது இப்படி நாலாப்புறமும் கட்டப்பட்டிருக்கிற பெருநகரம்,ஒரு பம்பாய்மிட்டாய்காரனின் கையிலிருக்கும் பொம்மைபோல் அசையப்போகும் ஒரு கணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசென்று ஒன்று இருப்பதாகவும், அது இயங்குவதாகவும் இன்னும் நம்புவது ஆச்சரியமளிக்கிறது அது வெறும் மூடநம்பிக்கையேதவிர, வேறெதுவும் இல்லை. சூயசை பொறுத்தவரை அது மிகப்பெரிய நிறுவனம்.அதன் வலைப்பின்னல் பிரம்மாண்டமானது அதன் வியாபாரம் குடிநீரோடு மட்டும் நிற்காது. சாக்கடை நீரைமறு சுழற்சி செய்வது, அதை கம்பனிகளுக்கு விற்பது, கம்பனிகளுக்கு ட்ரீட்மெண்ட் பிளாண்ட் அமைப்பது, என இன்னும் இதோடு தொடர்புடைய வியாபாரங்களின் பட்டியல் கற்பனைக்கெட்டாத அளவுக்