வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம்அடிப்படைவாதம் நம்மை தரதரவென்று இழுத்துப்போய் ஒரு ’மாயாலோக’த்துக்குள் நிறுத்திசாம்பிராணிப்புகை போட்டுவிடுகிறது. ரியர்வியூ மிரரில் தெரியும் ரியல் எதிரிகளை கண்டும் காணாமல் இருக்கவைத்து கற்பனையான எதிரிகளின் மேல் கைவாளை வீசச்சொல்லிக்கொடுக்கிறது அத்தோடு நின்றுவிடாமல் அரசின் அடியாளாய், கார்ப்ரேட்டின் கண்மூடித்தனமான கைக்கூலியாய் மெல்ல மெல்ல நம்மை மாற்றி சொந்த மக்களுக்கு எதிராக அது நிறுத்திவிடுகிறது நான் பேசிக்கொண்டிருப்பது வெறும் நாற்பது பக்கமே கொண்ட அருண் நெடுஞ்செழியனின் சூழலியல் அடிப்படைவாதம் என்ற நூல் குறித்துத்தான் சூழலியல் பற்றி பேசுவதென்பதும் செயல்படுவதென்பதும் ஒரு குறிப்பிட்டாகாலம்வரை குறிப்பிட்ட ஆட்களின் கக்கத்தில்தான் இருந்துவந்தது அதற்காக செயல்பட்ட நிறுவனங்களை ஆட்களைப் பட்டியலிட்டால் அந்த ஆட்கள் யார் , ஏன் பேசினார்கள் என்பதைக்கூட எளிதாக இனம் கண்டுவிடமுடியும் பல்வேறு வளச்சுரண்டல்களை கண்கூடாகப்பார்த்துசலித்து கோபம் கொண்ட ஒரு சமூகம், எல்லைகடக்காமல், சாந்த சொரூபியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் வேலையை அந்தப் பச்சை பசலிகள் வட்டம் செவ்வனே...