சரைப்பதுதான் உனக்குத்தொழில். என்று நிர்பந்திக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து, வீரியமான ஒரு கலகக்குரல் ‘ ‘கவிதை எனக்கு மயிறு ’ என்று பெருங்கோபத்தோடு எழுந்திருக்கிறது. கடந்துபோன பல நூற்றாண்டுகளுக்கு முன்பு போர்க்களங்களில் அறுவை சிகிச்சையாளராக,பிரசவங்களில் செவிலியராக படையணிகளில் மருந்தாளுனராக இருந்த ஆதி மருத்துவர்கள்தான் படிப்படியாக வஞ்சிக்கப்பட்டு ‘ சவரத்தொழிலாளராக்கப்பட்டார்கள். இப்படி சவரக்காரர்கள் ஆக்கப்பட்ட கூட்டுச்சதியின் வழக்கைத்தான் கலைவாணனின் கவிதை மயிறுகள் ஒரு மேல் முறையீட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதன் வாசிப்பு பல புதிய தேடுதலை நமக்குள் தொடங்கிவைப்பது மட்டுமல்லாமல் சிறு வயதின் பல நினைவுகளை தொடர்பெடுத்து தொடர்பெடுத்து மனதை கணக்கவைக்கிறது அம்பட்டர்கள் நாவிதர்கள் மருத்துவர்கள் இவர்களெல்லாம் யார்? ‘ அம்பட்டர்கள் இசையில் தோய்ந்தவர்கள் மருத்துவத்திலும் வல்லுநர்கள் ஆனால் நாவிதர்கள் காயங்களை சுற்றி மழித்தலைமட்டுமே செய்தவர்கள்...