ஈணம் என்னும் கவிதை நிகழ்த்தும் முறைக்கு நாம் கொஞ்சமும் பழக்கப்படவில்லை ஆனால் கேரளத்தில் அது மிக பரிச்சயமான ஒரு முறை. கவிதையை கிட்டத்தட்ட ஓதுதல் நிலைக்கு தள்ளி ஒவ்வொரு நிலைக்கும் இடைவெளி கொடுத்து மீண்டும் ஓதி. ஒரு மெளனத்தில் நிறுத்தி நம்மை வனாந்திரத்துக்குள் விட்டுவிட்டு போய்விடுகிறார்கள். இப்படி மெளனம் முடியும் இடத்தில்தான் அந்தக்கவிதையை கவிஞன் கைவிட்டுவிடுகிறான். அல்லது நமக்கு கைமாற்றிவிட்டு உறைந்துபோய்விடுகிறான்..அதற்குப்பிறகு அது நமது சொற்க்களன்ற அடியாளத்தில் இறங்கி சவ்வூடுபரவலை நிகழ்த்துகிறது. ஈணம் குறித்து ஸ்ரீ யிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது பல நகைச்சுவையான விசயங்களை பகிர்ந்துகொண்டார். சீரியசாக அவர் பகிர்ந்துகொண்டது பேராசிரியர் மதுசூதன நாயரின் நாராணத்து பிராந்தன் என்னும் புகழ்பெற்ற ஈணம். யார் இந்த நாராணத்துப்பிராந்தன்? விக்ரமாதித்த மகாராஜாவின் அமைச்சர் வரருசி ஒரு பிராமணன் 'விதிப்பயனாக’ அவன் ஒரு பறைப்பென்ணை ...