ஆ னாலும் என்னிடம் ஒரு அங்குசமிருக்கிறது ஆனைகட்டியில், தயானந்த சரஸ்வதி சாமிகள் சமஸ்கிருத வேதப்பள்ளியையும்,கல்லாறில்,சச்சிதானந்தம்சாமி, இண்டர்நேசனல் பள்ளியையும். மதுக்கரையில் ஏ சி சி காரன்,சிமெண்டு கம்பனியையும், சிறுவாணியில் சகோதரர் பால்தினகரன், எஞ்சினியரிங் கல்லூரிகளையும், யானைகளின் கோரிடார்களை மறைத்து எழுப்பிவைத்திருப்பதை இந்தப்படம் தோலுரிக்கிறது என்று எங்கியோ யரோ பேப்பர்ல கொடுத்த பேட்டியையும் , வட்டங்களும் சதுரங்களும் ஏற்றிவிட்ட பில்டப்பையும் கேட்டுவிட்டுபோயி கிருத்திகாவில் சீட் போட்டா....... அந்த அரசியல் மல்லூரி பேசுகிற ஒரு வசனத்தோடு முடிந்துபோய்விடுகிறது ஏன் கும்கி வருகிறது என்பதில் நல்ல கதை சொல்லியாக தெரிகிற சாலமன்.. ஏன் கொம்பன் வருகிறது என்பதற்கு ஒரு வசனத்தை மட்டுமே வைத்திருப்பது உறுத்தலாகத்தான் இருக்கிறது. அப்பன் மல்லூரி யை ஒரு பண்ணையாராகவே மாற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர் . ஒரு மூப்பனுக்கான உடல் ...